சியோமி நிறுவனம் மீது கொலைவெறியுடன் சுற்றும் சாம்சங்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

சாம்சங் மற்றும் சியோமி நிறுவனங்கள் இந்திய சந்தையினைப் பிடிப்பதில் முழுத் தீவிரத்தைக் காட்டி வருகின்றன. இதனால் இரண்டு நிறுவனங்கள் இடையில் மிகப் பெரிய போர் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தென் கொரிய நிறுவனமான சாம்சங் 200 சில்லறை கைப்பேசி விற்பனையாளர்களுக்குத் தங்களது தயாரிப்புகளை அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது, இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுவது சீன பிராண்டான சியோமி நிறுவனத்துடன் இந்தக் கடைக்காரிகள் ஒப்பந்தம் போட்டு இருப்பதாகும் என்று இது குறித்து அறிந்த பலர் தெரிவித்துள்ளனர்.

சியோமி நிறுவனம் தங்களது ஸ்மார்ட்போன்களை ரிடெய்லர்களின் மொத்த கொள்முதலில் பாதி அளவு வரை நிரப்ப முடிவு செய்துள்ளது.

சியோமி நிறுவனம் நன்றி!

சியோமி நிறுவனத்திற்கு ஆதரவு அளித்துள்ள வணிகர்களுக்கு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மனு ஜெயின் நன்றி தெரிவித்துள்ளார். சாம்சாங் நிறுவனம் தங்களது பிராண்டுகளைத் திரும்பப்பெற்றுக் கொண்டு செலவது மற்றும் புதிதாக மொபைல் போன்களை அளிக்க மறுப்பு தெரிவிப்பதை கண்டு பயப்பட வேண்டாம். நாங்களும் விரைவில் கடனில் பொருட்களை அளிக்கும் முறையினை அமல் படுத்த உள்ளோம். இதனை விரைவில் அறிவிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியர்கள் அதிகம் விரும்பும் பிராண்டு

சாம்சங் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இது குறித்துக் கூறும் போது சாம்சங் தான் இந்தியர்கள் அதிகம் விரும்பி நம்பகத்தன்மையுடன் வாங்கும் ஸ்மார்ட்போன் என்றும், இந்தியா முழுவதும் பரந்து விரிந்து எங்களது வணிகம் உள்ளது என்றும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் துறையில் நாங்கள் மக்களின் நம்பிக்கையினைப் பெற்றுள்ளோம் மற்றும் வாடிக்கையாளர்களின் அன்பையும் பெற்றுள்ளோம் என்று கூறினார்.

சியோமி நிறுவனர் மறுப்பு

இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த சில்லறை வணிக அனுபவத்தை வழங்குவதற்கான முயற்சியாகும், மேலும் எங்களுடன் இணைப்பில் உள்ள வணிகர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார். இது குறித்துச் சியோமி நிறுவன செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டாம்

சாம்சங் நிறுவனத்தின் விற்பனை பிரிவை சேர்ந்த அதிகாரிகள் வணிகர்களைச் சந்தித்துச் சியோமி நிறுவனத்துடனான ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.

கட்டுப்படாத 200 ரிடெய்ல் நிறுவனங்கள்

சாம்சங் நிறுவனத்தின் விதிகளுக்குக் கட்டுப்படாத 200 ரிடெய்ல் நிறுவனங்களும் தேசிய தலைநகரில் மட்டும் இருப்பதாகவும் அதன் மதிப்பு 100 கோடி ரூபாயினைத் தாண்டும் என்றும் கூறப்படுகின்றது.

வணிகர் கருத்து

பிற நிறுவனத்தின் பிராண்டினை விற்பனை செய்வதினால் ஒரு பிராண்டு தங்களது பொருட்களை அளிக்க மறுப்பது இது தான் முதல் முறை என்று டெல்லியைச் சேர்ந்த ஒரு ஸ்மார்ட்போன் வணிகர் சாம்சங் நிறுவனத்திற்கு மறுப்புக் கூறியவர் நமக்குத் தெரிவித்தார்.

சியோமி நிறுவனத்திற்கு இடம் அளிக்கக் கூடாது

சாம்சங் நிறுவனம் வணிகர்களிடம் துளிகூடச் சியோமி நிறுவனத்திற்கு இடம் அளிக்கக் கூடாது என்று கூறிவருகின்றது. இதற்கு முக்கியக் காரணம் அன்மை காலங்களில் ஓப்போ மற்றும் விவோ உள்ளிட்ட சீன நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் சந்தையை ஆக்கிரமிப்புச் செய்து வருவது ஆகும்.

சாம்சங் நிறுவனத்திடம் உள்ள சந்தை

ஸ்மார்ட்போன் உலகளவில் மிகப் பெரிய சந்தையினைச் சாம்சங் நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது. இவ்வளவு நாட்களாக இணையதளத்தில் மட்டும் விற்பனையைச் செய்து வந்த சியோமி இப்போது ஆப்லைன் வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருகின்றது.

வருவாய்

2017 நிதி ஆண்டில் மட்டும் இந்தியாவில் ஆப்லைன் வர்த்தகம் செய்வதன் மூலம் தனது வருவாயினில் 35 சதவீதம் வரை அதிகரிக்கச் சியோமி முடிவு செய்துள்ளது.

1,000 டீலர்கள்

சியோமி நிறுவனம் ரிடெய்ல் வணிகத்தில் 1,000 டீலர்களைப் பிடித்து மிகப் பெரிய அளவில் தனது வர்த்தகத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. வணிகர்களுக்கு நிதி உதவி அளிக்கவும் முடிவு செய்துள்ளது.

நோக்கியா

நோக்கியா நிறுவனம் சந்தையினை இழந்த பிறகு சாம்சங் நிறுவனம் சந்தையினைத் தன்வசம் படுத்தியது. இப்போது சீன நிறுவனங்களான ஓப்போ, விவோ மற்றும் சியோமி ஆகியவை சந்தையைப் பிடிக்க முயன்று வருகின்றன.

ஏன் சாம்சங் இந்த முடிவை எடுத்துள்ளது?

சாம்சங் நிறுவனம் எந்த வணிகர்கள் எல்லாம் தங்களது நிறுவனத்தின் சைன் போர்டினை நீக்கியுள்ளார்களோ அந்த ரிடெய்லர்களுக்குத் தான் தங்களது தயாரிப்புகளை அளிக்க மறுத்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங்-சியோமி சந்தை

சாம்சங் நிறுவனத்தில் 26 சதவீத ஸ்மார்ட்போன் சந்தை உள்ளது, இதனை நெறுங்கும் வகையில் 13 சதவீத சந்தையைப் பிடித்து இரண்டாம் இடத்தைச் சியோமி நிறுவனம் பிடிக்க உள்ளது.

பிற சீன நிறுவனங்கள்

விவோ 12 சதவீதம், ஓப்போ 10 சதவீதம் மற்றும் லினோவா-மோட்டோராலா நிறுவனங்கள் 8 சதவீதம் வரை ஸ்மார்ட்போன் சந்தையினைத் தன்வசம் வைத்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

It's Samsung vs Xiaomi in India now as battle for market share hots up

It's Samsung vs Xiaomi in India now as battle for market share hots up
Story first published: Thursday, July 20, 2017, 16:37 [IST]
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns