தாய் நிறுவனத்தில் சேர்ந்தார் சுந்தர் பிச்சை!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

தமிழகத்தில் பிறந்த சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் ஒருவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

நீண்ட காலமாகக் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பணிபுரிந்து வருகின்றார். இவரின் முயற்சியால் கூகுள் நிறுவனம் வலுவான வளர்ச்சி, கூட்டுமைப்புகள் மற்றும் மிகப்பெரிய தயாரிப்பு கண்டுபிடிப்புகள் போன்றவற்றைப் பெற்றுள்ளது.

லாரி பேஜ்

சுந்தர் பிச்சை அவர்களுடன் ஆல்பாபெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் சேர்ந்து பணியாற்ற இருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என்று ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லாரி பேஜ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சுந்தர் பிச்சையின் பணிகள்

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை கூகுளின் தயாரிப்பு வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப உத்தி மட்டும் இல்லாமல் நிறுவனத்தின் தினசரி செயல்பாடுகளையும் கவனித்து வருகின்றார்.

கூகுளில் சுந்தர் பிச்சை

அவர் 2004 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார் மற்றும் முக்கிய வாடிக்கையாளர்கள் உற்பத்திகளினை செய்து வளர்ச்சியை வழிநடத்த உதவினார், தற்போது கூகுள் நிறுவனத்தின் மூலம் செய்த செயலிகளை ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படுகிறது.

முக்கியப் பொருப்பு

2014 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் தளங்களின் பொறியியல் மற்றும் ஆராய்ச்சிகளை நிர்வகிக்கும் பொறுப்பைச் சுந்தர் பிச்சை ஏற்றார்.

கூகுள் சிஈஓ

கூகுகள் நிறுவனத்தின் இணை நிறுவனர்களுடன் இணைந்து செயல்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு 2015 ஆகஸ்ட் மாதம் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.

நிர்வாகக் குழு உறுப்பினர்கள்

ஆல்பபெட்டின் நிர்வாகக் குழுவில் ஏற்கனவே உள்ள நிறுவனர்கள் லாரி பேஜ், செர்கி பிரின், முன்னால் தலைமை செயல் அதிகாரி எரிக், க்ளைனர் பெரிகின்ஸ் ஜாண் டூயர், கூகுள் எஸ்விபி டியர்ன் கிரீன் ஆகியோருடன் சுந்தர் பிச்சை அவர்களும் தற்போது இணைந்துள்ளார்.

சம்பளம்

44 வயது ஆன சுந்தர் பிச்சை 2015-ம் ஆண்டினை விட 2016-ம் ஆண்டு இரண்டு மடங்கு அதிகம் சம்பளம் பெற்றுள்ளார். சுந்தர் பிச்சை சென்ற ஆண்டு 650,000 டாலர்கள் சம்பளமாகப் பெற்றுள்ளார். இது 2015-ம் ஆண்டு இவர் வாங்கிய 652,500 டாலர்களை விடச் சற்று தான் அதிகம், இது எப்படி இரண்டு மடங்கு உயர்வு என்று நீங்கள் கேட்பது தெரிகின்றது. வாங்க அது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.

பங்குகள்

சம்பளம் சற்று உயர்ந்து இருந்தாலும் நீண்ட காலமாகக் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை 2015-ம் ஆண்டு 99.8 மில்லியன் டாலர்கள் பதிப்புடைய பங்குகளைப் பெற்றார். இதுவே 2016-ம் ஆண்டு 198.7 மில்லியன் டாலர்கள் பங்குகளைப் பெற்றுள்ளார்

செயல்படும் வணிகங்கள்

சுந்தர் பிச்சையின் தலைமையில் கூகுள் நிறுவனம் விளம்பரம் மற்றும் யூடியூப் வணிகத்தில் விற்பனை அதிகரித்தும், மெஷின் லர்னிங், வன்பொருள் மற்றும் கிளவுட் கம்யூட்டிங் போன்றவற்றிலும் சிறந்த சேவையை வழங்கி வருகின்றது.

வால்மார்ட்

வால்மார்ட் தலைமையுடன் போட்டி போடும் சுந்தர் பிச்சை..!

மதுரை முதல் சான்பிரான்சிஸ்கோ வரை

மதுரை முதல் சான்பிரான்சிஸ்கோ வரை.. சுந்தர் பிச்சையின் அசுர வளர்ச்சி..!

அஞ்சலி பிச்சை

சந்தர் பிச்சை அமெரிக்காவில்  படித்துக்கொண்டு இருக்கும் போது அஞ்சலியை காதலித்து திருமணம் செயதுக்கொண்டார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sundar Pichai Appoints To Alphabet as member Board Of Directors

Sundar Pichai Appoints To Alphabet as member Board Of Directors
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns