இன்டெல் சாம்ராஜியத்திற்கு ஆப்பு வைக்கும் சாம்சங்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிலிகான் சிப் செமிகண்டக்டர்கள் உறுவாக்குவதில் முதல் இடம் பிடித்து வந்த இண்டெல் நிறுவனத்தினை ஆட்டம் காண வைத்துள்ளது சாம்சங் எலக்டிரானிஸ். அமெரிக்காவைச் சேர்ந்த இண்டெல் நிறுவனத்திற்கு இது ஒரு மிகப் பெரிய இடையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

வியாழக்கிழமை சாம்சங் நிறுவனம் வெளியிட்ட காலாண்டு அறிக்கையில் அதிகப்படியான லாபத்தை ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. செமிகண்டக்டர் துறையில் கொடிகட்டி பறந்து வந்த இண்டெல் நிறுவனத்தினை ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஓரம் கட்டியுள்ளது என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

கச்சா எண்ணெய் போன்ற சிலிகான் சிப்

20வது நூற்றாண்டில் கச்சா எண்ணெய்யின் தேவைப் போன்று பார்க்கப்பட்ட சிலிகான் சிப் உலகத்தினைச் சாம்சங் நிறுவனம் 21-ம் நூற்றாண்டில் பிடித்துள்ளது.

காலாண்டு வருவாய்

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் 17.6 ட்ரில்லியன் டாலர் வருவாயினை ($ 15.8 பில்லியன்) சாம்சங் பெற்றுள்ளது, அதன் செயல்பாடுகள் வருவாயில் 8 டிரில்லியன் டாலர் ($ 7.2 பில்லியன்) பதிவு செய்ததாகச் சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.

இண்டெல் நிறுவன காலாண்டு வருவாய்

ஏப்ரல் - ஜூன் காலாண்டு இன்டெல் நிறுவனத்தின் வருவாய் 14.4 பில்லியன் டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வல்லுனர்கள்

வருடாந்திர அடிப்படையில் கணக்கிட்டு பார்த்தால் செமிகண்டட்கடர் பிரிவில் சாம்சங் நிறுவனம் இன்டெல் நிறுவனத்தினை முந்திச் சென்று முதல் இடத்தினைப் பிடிக்கும் என்று வல்லுனர்கள் மற்றும் சந்தை ஆய்வு நிறுவனங்களும் கூறுகின்றன.

சாம்சங் நிறுவனத்தில் உள்ள சிக்கல்

மொபைல் சாதனங்கள் மற்றும் தரவு பிரிவில் சாம்சங் நிறுவனம் உலகச் சந்தையில் முதல் இடத்தினைப் பிடித்துள்ளது, அதே நேரம் இந்த நிறுவனத்தின் முதன்மை தலைவர் சீனாவில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் உள்ளார், மறுபக்கம் சாம்சங் கேலக்ஸி நோட் 7 மொபைல் வெளியிட்டு மிகப் பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பல மொபைல் போன்கள் வெடித்துச் சிதரியாதால் சந்தைச் சிறிது சரிந்துள்ளது.

சிறிய மொபைல் போன் தயாரிப்பு

சிறிய மொபைல் போன் தயாரிப்புகளில் நிறுவனங்கள் அதிகச் சேமிப்பு அளிப்பது, மொபைல் ஆப் சேவைகள் அளிப்பது, கிளவுட் சேவை அளிப்பது என்று செய்து வரும் நிலையில் சாம்சங் நிறுவனம் முதல் இடத்தினைப் பிடித்துள்ளது.

சவுதி போன்று சாம்சங்

சவுதி அரேபியா எப்படிக் கச்சா எண்ணெய் சந்தையில் முதல் இடத்தில் உள்ளதோ அதேப்போன்று சாம்சங் நிறுவனம் விலை உயர்ந்த டெக் கமாடிட்டியான சிலிகான் சிப் தயாரிப்பதில் முதல் இடத்தினைச் சாம்சங் பிடிக்கின்றது.

தரவு தான் சொத்து

தரவு தான் தற்போதிய டிஜிட்டல் உலகில் மிகப் பெரிய சொத்து எனத் தென் கொரியாவின் குவாட் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் தென் கொரியா சார்ந்த நிதி மேலாளரான மார்செல் அஹ்ன் கூறுகிறார்.

10 வருடங்கள்

10 வருடங்களுக்கு மேலாகச் சாம்சங் மற்றும் இன்டெல் நிறுவனங்கள் செமிகண்டக்டர் சந்தையில் மிகப் பெரிய இடத்தினைப் பிடித்துள்ளன.

பிராசசர்கள்

கணினிகளின் மூலை எனப்படும் பிராசசர்களைத் தயாரிப்பதில் இன்டெல் நிறுவனம் 1992-ம் ஆண்டு முதல் ஜப்பானின் என்ஈசி நிறுவனத்தினைப் பின்னுக்குத் தள்ளி தனது ஆதிகத்தினைச் செலுத்தி வருகின்றது.

சாம்சங் சிப்புகள்

இன்டெல் நிறுவன சிப்புகள் கணினிகளுக்குப் பொருத்துவதை விடச் சாம்சங் நிறுவனம் சிப்புகள் அதிக அளவில் பெருத்தும் அளவிற்கு வர்த்தகத்தில் தனது வீரியத்தைக் காட்டி வருகின்றது. அதே நேரம் பிராசசருக்கு இண்டெல் நிறுவனத்தினைச் சாம்சங் நாடுகின்றது.

கணினிகளை விடப் பிற கேட்ஜெட்டுகள்

கணினிகளை விட ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளட் கணினி போர்டுகளை அதிகளவில் சாம்சங் நிறுவனம் அளிப்பதினால் தான் இந்த உச்சத்தினைப் பெற்றுள்ளது.

ராம் விற்பனை

2002-ம் ஆண்டு முதல் சம்சங் நிறுவனம் தான் அதிகளவில் மெமரி சிப்புகள் எனப்படும் ராம் சில்லிகளைச் சந்தையில் விற்பனை செய்துள்ளது.

மிருகத்தனமான போட்டி

சாம்சங் நிறுவனத்தின் மெமரி சிப்புகளின் தேவை நுகர்வோர் மின்னணுத் தொழில்துறையில் அதிகமாக இருந்த நேரத்தில் பல சிக்கல்கள் எழுந்தன. சில நேரங்களில், போட்டி மிருகத்தனமானதாக இருந்தது என்றாலும் விநியோகத்திற்கு அதிகப் பிரச்சனைகள் இருந்தது.

போட்டி குறைந்த நேரம்

அது 2012-ம் ஆண்டு ஜப்பானின் எல்பிடா நிறுவனத்தின் வங்கி கணக்கு திவால் ஆன போது மைக்ரான் டெக்னாலஜிக்கு விற்கப்பட்டது. அதனால் சந்தையில் மூன்று நிறுவனங்கள் தான் டிரேம் மெமரி செப் தயாரிக்கும் நிறுவனங்களாக உருவாகியது. அந்த மூன்று நிறுவனங்கள் தான் சாம்சங், எஸ்கே ஹின்க்ஸ் மற்றும் மைக்ரான்.

அதிக வருவாய் ஈட்ட திட்டமிடும் இரண்டு நிறுவனங்கள்

மெமரி சிப்புகள், டிரேம், பிளாஷ் மெமரி சிப்பிகள் விநியோகம் செய்யக் கடுமையான தட்டுப்பாடுகள் நிலவி வரும் நிலையில் சாம்சங் மற்றும் எஸ்கே ஹின்க்ஸ் இரண்டு நிறுவனங்களும் அதிக வருவாய் ஈட்டும் திட்டத்தில் உள்ளன.

இண்டெல், சாம்சங் நிறுவனங்களின் இலக்குகள்

முழு வருடமும் சேர்த்து இன்டெல் நிறுவனம் 60 பில்லியன் டாலர் வரை ஆண்டு விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கை வைத்துள்ளது, அதே நேரம் 62.6 பில்லியன் டாலர்கள் வரை வருவாய் ஈட்ட சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Samsung becomes king of computer chips ending US giant Intel Inside’s two decade reign

Samsung becomes king of computer chips ending US giant Intel Inside’s two decade reign
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns