மோடியின் திட்டத்தால் இந்தியாவில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரிப்பு..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்த பிறகு சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து உள்ளதாக வெள்ளிக்கிழமை இந்திய தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு ஏற்பாடு செய்திருந்த ஃபிண்டெக் மாநாட்டில் சைபர் நிபுணர்கள் கூறினார்.

"நான் நம்புகிற ஒரு நிலையைக் காண ஆரம்பித்தேன், மிகவும் பயமாக இருந்தது. சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகம் நடைபெற்ற காலம் என்றால் அது கடண்டஹ் எட்டு மாதங்களாக இருக்கும் எனச் சைபர் சட்டங்கள் பிரிவின் தலைவரான பன்வ டுக்கல் தெரிவித்தார். இதனை உச்ச நீதிமன்ற வழக்கறியஞர் உறுதி செய்துள்ளார்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை

பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளுக்குப் பிறகு சைபர் கிரைம் குற்றங்கள் அதிகளவில் உருவாகியுள்ளது, அது எந்த ரூபத்தில் எல்லாம் வளர்ந்துள்ளது என்பதை அடையாளம் காண முடியவில்லை.

பணமில்லா பரிவர்த்தனை

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி அவர்கள் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பினை நீக்கிய பிறகு பணமில்லா பரிவர்த்தனைகள் அதிகரித்தது.

ரான்சம்வேர் வைரஸ்

உலகளவில் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல் கணினிகளைத் தாக்கத்தினை அடுத்துப் பல நூறு கணினிகள் பெறும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

சைபர் கிரைம் புகார்கள்

2017-ம் ஆண்டில் கடந்த 6 மாதத்தில் மட்டும் ஒவ்வொரு 10 நிமிடத்திற்குக் குறைந்தது 1 சைபர் கிரைம் புகார்களானது பதிவு செய்யப்பட்டு இருக்கும் என்று தமிழ் குர்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

2016-ம் ஆண்டுப் பெற்ற சைபர் கிரைம் புகார்கள்

இதுவே 2016-ம் ஆண்டு ஒவ்வொரு 12 நிமிடத்திற்கும் 1 சைபர் கிரைம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மொத்த வழக்குகள்

இந்திய கணினி அவசரநிலை குழுவின் அறிக்கையின் படி ஜனவரி முதல் ஜூன் வரையில் 27,482 வழக்குகள் சைபர் கிரைமின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2013-2016 ஆம் ஆண்டுகளில் தரவு பகுப்பாய்வின் படி நெட்வொர்க் ஸ்கேனிங் மற்றும் பரிசோதனையைக் காட்டுகிறது, இது கணினிகளில் பாதிப்புகளைக் கண்டறியும் முதல் படியாகும், எனவே இது மிகவும் முக்கியமான தரவுகளைத் திருடவதை கண்டறிய முடியும், 6.7% அனைத்து வழக்குகளிலும் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதல் 17.2% என இந்திய கணினி அவசரநிலை குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தேசிய சைபர் பாதுகாப்பு பாலிசி

ஓரு நாடாக நாம் எந்த ஆதாரமும் இல்லாமல் இருக்கின்றோம், எப்படிச் சைபர் குற்றங்களைத் தடுப்பது எனத் தேசிய சைபர் பாதுகாப்பு பாலிசி 2013-ம் ஆண்டு வகுத்து இருந்தாலும் அது இப்போது வரை ஒரு காகித ஆவணமாகாவே உள்ளது. தற்போது வரை சைபர் பாதுகாப்பிற்கான பிரத்தியேக சட்டங்கள் ஏதும் இல்லை.

சைபர் கிரைம் சட்ட கட்டமைப்பு

பிளாக் செயின் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் சூழலில் சைபர் கிரைம் சட்ட கட்டமைப்பை உருவாக்குவது அவசியம்.

இணையப் பாதுகாப்புச் சட்டம்

தனிநபர் தரவுகளை அணுகும் மொபைல் பயன்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்காக, நிபுணர்கள் ஒரு விரிவான இணையப் பாதுகாப்புச் சட்டத்தினை இயற்ற வேண்டும்.

அதிகப் பாதிப்புக்குள்ளான சேவைகள்

பணப் பரிமாற்றம் மற்றும் ஃபிண்டெக் உள்ளிட்ட சேவைகள் சைபர் கிரைமில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

மாநாடு

யுனிஃபைட் பேமெட்ஸ் இண்டெர்ஃபேஸ் (UPI), ஆதார் பணப் பரிமாற்ற சேவை, பிளாக் செயின், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் போன்ற புதிய தொழில்நுட்பங்களின் நோக்கம் பற்றிக் கலந்துரையாடுவதற்காக மாநாட்டில் பல தொழில்துறை நிபுணர்கள் பங்கேற்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Cybercrime spiked after PM Modi's demonetisation, say experts

Cybercrime spiked after PM Modi's demonetisation, say experts
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns