விரைவில் பிளிப்கார்டில் பொருட்களை ஆர்டர் செய்தால் அமேசான் டெலிவரி செய்யும்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் விரைவில் தங்களது இணையதளம் மட்டும் இல்லாமல் பிற தளங்களில் ஆர்டர் செய்யப்படும் பொருட்களையும் டெலிவரி செய்யும் சேவையினை அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் போன்ற போட்டியாளர்கள் இ-காமர்ஸ் சந்தை அல்லது அவர்களது ஆஃப்லைன் விநியோகத்திற்கான அறிவிப்புகளை வழங்கியிருந்தாலும், பொருட்களை டெலிவரி செய்யும் சேவையினை அவர்களுக்கும் வழங்கி அதன் தளவாட வர்த்தகத்தை விரிவுபடுத்த அமேசான் முடிவு செய்துள்ளது.

உணவு டெலிவரி

மேலும் அமேசான் நிறுவனம் இந்தியாவில் உணவு டெலிவரி செய்யும் சேவையினை வழங்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் இதே போன்ற சேவையினை ஸ்விகி போன்ற நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அதற்கான பேச்சுவார்த்தையிலும் அமேசான் நிறுவனம் இறங்கியுள்ளது.

அமேசான் லாஜிஸ்டிக் சேவை

அமேசான் நிறுவனம் ஏற்கனவே 300 விற்பனையாளர்களுக்குத் தங்களது லாஜிஸ்டிக் சேவையினை வழங்கி வருகின்றது என்றும் இது குறித்து மூன்று துறை நபர்களும் அறிவார்கள் என்றும் நமக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. அமேசான் நிறுவனத்தின் இந்த லாஜிஸ்டிக் சேவைக்காக அமேசான் டிரான்ஸ்போர்டேஷன் சர்வீசஸ் என்ற ஏடிஎஸ் சேவை நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது.

ஏடிஎஸ்

சியாட்டில் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அமேசான் நிறுவனம் இந்திய இ-காமர்ஸ் துறையில் மிகப் பெரிய சந்தையினைப் பிடிக்க இருக்கின்றது. ஏடிஎஸ் முன்பு அமேசான் தளத்தில் புக் செய்யப்படும் பொருட்களை டெலிவரி செய்யும் பணிகளை மட்டுமே செய்து வந்தது. இதனால் அமேசான் சேமிப்புக் கிடங்குகளில் இருந்து வாடிக்கையாளர்களின் கைகளுக்குப் பொருட்களைக் கொண்டு சேர்த்துவதில் தான் ஏடிஎஸ் கவனம் செலுத்தி வந்துள்ளது.

போட்டி நிறுவனங்கள்

அமேசான் நிறுவனம் பிளிப்கார்டின் இ-கார்ட் மற்றும் பிற லாஜிஸ்டிக் சேவை நிறுவனங்களான ப்ளூ டார்ட், பெடெக்ஸ் உள்ளிட்ட நிறுவங்களுக்குப் பெறும் போட்டியாக இருக்கும் வகையில் ஏடிஎஸ் சேவையினை அறிமுகம் செய்கின்றது.

பிற பிராண்டுகள் மற்று வணிகங்களுக்குச் சேவை

தற்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சேவை அளித்து வரும் நிலையில் பிற பிராண்டுகள் மற்று வணிகங்களுக்குச் சேவையை விரிவுபடுத்த அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக முக்கியக் கொரியர் நிறுவனங்களில் இருந்து பலரை அமேசான் நிறுவனம் வேலைக்கு எடுத்துள்ளது.

குறைந்த விலையில் அமேசான் சேவை

மூன்றாம் நபர் கொரியர் சேவைகளை விடக் குறைந்த விலையில் ஏடிஎஸ் சேவையினை வாடிக்கையாளர்களுக்கு வழங்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அமேசான் நிறுவனத்தின் அதிரடி திட்டம்

இ-காமர்ஸ் துறையில் அனைத்துப் பிரிவுகளிலும் தடம் பதிக்க அமேசான் நிறுவனம் உடிவு செய்துள்ளது, அதற்காகப் பேக்கேஜிங் பொருட்களையும் அமேசான் விற்க இருக்கின்றது. இது குறித்து விளக்கம் கேட்க அமேசான் நிறுவன செய்தித் தொடர்பாளரிடம் கேள்வி கேட்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

வெளிநாட்டுக் கொரியர் சேவை

லாஜிஸ்டிக் நிறுவனங்களில் ப்ளூ டார்ட், டிடிடிசி மற்றும் ஃபெடக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் எப்படி வெளிநாட்டிற்கு எல்லாம் தங்களது சேவைகளை அளிக்கின்றனவோ அதே போன்று தங்களது சேவையினையும் விரிவு படுத்த அமேசான் ஏடிஎஸ் முடிவு செய்துள்ளது.

லாஜிஎஸ்டிக் துறையில் இ-காமர்ஸ் நிறுவனப் பங்கு

இந்திய லாஜிஎஸ்டிக் துறையின் வளர்ச்சியில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றன, மேலும் இத்துறையில் முதலீடு செய்வதினால் வேகமாக இத்துறை வளர்ச்சி அடையும்.

லாஜிஸ்டிக் துறை

2016-ம் ஆண்டு இந்திய லாஜிஸ்டிக் துறையில் ஆன்லைன் ரீடெய்ல் நிறுவனங்களால் மட்டும் 0.46 பில்லியன் டாலர் வருவாய் கிடைத்துள்ளது. மேலும் லாஜிஎஸ்டிக் துறையில் இந்தியாவிற்கு 2020-ம் ஆண்டிற்குள் தற்போது இருப்பதை விட 48 சதவீத வளர்ச்சி அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

ஈ-கார்ட் கொரியார் சேவை

பிளிகார்ட் நிறுவனத்தின் லாஜிஸ்டிக் பிரிவான ஈ-கார்ட் கொரியார் சேவை அளிப்பதற்காக ஆப்லைன் நெட்வொர்க்கில் இறங்கியுள்ளது. இதனால் டிடிடிசி, ப்ளூடார்ட் மற்றும் பிற நிறுவனங்களுக்குப் பெறும் பாதிப்பு ஏற்படும்.

இ-கார்ட்

தற்போது இ-கார்ட் நிறுவனத்திகு 90 சதவீத பணிகளைப் பிளிப்கார்ட் நிறுவனம் மற்றும் அதன் பிற நிறுவனங்கள் அதான் அளித்து வருகின்றன. மீதம் உள்ள 10 சதவீத பணிகள் வெளிப்புற வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்கள் மூலமாக இ-கார்ட் பெறுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Very Soon, your flipkart order and couriers will be delivered by Amazon

Very Soon, your flipkart order and couriers will be delivered by Amazon
Story first published: Monday, July 31, 2017, 15:47 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns