பாபா ராம்தேவ்-ன் பதஞ்சலி நிறுவனம் உண்மையில் எப்படி இருக்கும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய எஃப்எம்சிஜி துறையில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு நிறுவனம் என்றால் அது பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனமாகும். நிறுவனத்தினை விரிவு படுத்திய ஒரே வருடத்தில் ஐடிசி, நெஸ்ட்லே, டாடா எனக் கார்ப்ரேட் நிறுவனங்களைப் பதஞ்சலி ஒரு கலக்கு கலக்கியுள்ளது.

இந்த நிறுவனம் ஒரே வருடத்தில் வருவாயினை இரண்டு மடங்காக அதிகரித்து 10,000 கோடிகளைப் பெற்றுள்ளது என்று அறிவித்தது. மேலும் இந்தியாவின் மிகப் பெரிய நுகர்பொருள் சரக்கு நிறுவனமாகப் பதஞ்சலி வளரத் துடிக்கின்றது. அப்படி நடந்தால் ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் இரண்டாம் இடத்தினைப் பிடிக்கும்.

வித்தியாசமாக இருக்கும் தைரியம்

வித்தியாசமாக இருக்கும் தைரியம்

பிற எஃப்எம்சிஜி நிறுவனங்களைப் போன்றே பதஞ்சலி நிறுவனத்திடமும் உணவு பூங்கா ஒன்று உள்ளது, மாநில கலைக் கருவிகளைக் கொண்ட தொழிற்சாலையில் முடியை மூட உறைகள், கையுறைகள் போன்றவற்றை அணிந்துகொண்டு நிலையான இயக்க நடைமுறைகளால் நிர்வகிக்கப்படுகின்றன.

இந்திய கார்பேட் நிறுவனங்களின் இடையில் தனித்துவமாகப் பதஞ்சலி நிறுவனம் வழக்கமான பணிச்சூழல் சார்ந்தே செயல்படுகின்றது.

 

காலை தொட்டு வணங்குதல்

காலை தொட்டு வணங்குதல்

பாபா ராம்தேவ் அவர்கள் நிறுவனத்தின் உள்ளே நுழைந்த உடன் ஊழியர்களை அனைவரும் பதவி வேறுபாடு இன்றி வரிசையில் நின்று காலை தொட்டு வணங்குகின்றனர்.

இதே போன்று வெள்ளை நிற ஆடை அணிந்துள்ள இணை நிறுவனரான ஆச்சர்ய பால்கிருஷ்னா அவர்களுக்கும் வழங்கப்படுகின்றது. இவரிடம் தான் பதஞ்சலி நிறுவனத்தின் 96 சதவீத பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

நவீன காலக் 'குருகுலம்'
 

நவீன காலக் 'குருகுலம்'

நிறுவன கூட்டங்களின் போது ராம்தேவ் உயரமான இருக்கையில் அமருவார். பிறர், தலைமை நிர்வாக அதிகாரி, ஊழியர்கள் உட்பட அனைவரும் தரையில் தான் அமருவார்கள், இது தான் பதஞ்சலி நிறுவனத்தின் நவீன காலக் 'குருகுலம்' முறையாகும்.

தயாரிப்புகள் சோதனை

தயாரிப்புகள் சோதனை

பதஞ்சலி நிறுவனம் எந்தப் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டு என்பதை ராம்தேவ் தான் முடிவு செய்வார், மேலும் அது எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அவரே முடிவு செய்வார்.

பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தையும் முதலில் பயன்படுத்திப் பார்ப்பவர் ராம்தேவ் தான். இவருடைய அனுமதி பெற்ற பிறகு தான் சீல் செய்து பேக் செய்யப்படும்.

 

குறைந்த லாபம்

குறைந்த லாபம்

பதஞ்சலி நிறுவனம் தங்களது தயாரிப்புகளுக்குக் குறைந்த அளவில் லாபம் வைத்துத் தான் விற்பனைக்கு அனுப்புகின்றது. குறைந்த விலையில் பொருட்களை விற்கக் காரணம் இதனை ஆன்மீக சேவையாகக் கருதுவதாகும்.

ராம்தேவ் தேசத்தின் நலனுக்காகவும், உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும், "இந்திய மரபுரிமை" யாகவும், யோகா மற்றும் ஆயுர்வேதத்திற்காகவும் பதஞ்சலி மூலம் சேவை செய்கிறேன் என்கின்றார்.

 

சம்பள உயர்வு சுயநலமானது

சம்பள உயர்வு சுயநலமானது

பதஞ்சலி நிறுவனத்தில் குருவுக்குச் சேவை செய்வது போன்றது என்றும் அதனால் சம்பள உயர்வு பற்றி விவாதிப்பது எல்லாம் மிகவும் கடினம் என்று முன்னால் மற்றும் தற்போதைய ஊழியர்கள் கூறுகின்றனர்.

பதஞ்சலி நிறுவனத்தினைப் பொருத்த வரை சேவையாக இருக்க வேண்டும், சுயநலம் கருதும் நபர்கள் தான் சம்பள உயர்வை எதிர்பார்ப்பார்கள்.

 

தரையில் உறங்கும் கோடிஸ்வரர்

தரையில் உறங்கும் கோடிஸ்வரர்

பாபா ராம் தேவ் அவர்கள் பதஞ்சலி நிறுவனத்தின் மூலம் கோடி கணக்கில் லாபம் பார்த்தாலும் தற்போது வரை தரையில் தான் தூங்குகின்றார் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? அதுவும் ஹரிதாவர் வருகின்றார் என்றால் அங்குத் தனக்கு என உள்ள குடிசை போன்ற ஒரு வீட்டில் தரையில் தான் உறங்குவாராம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

If Sadhu runs a Company how it will be?

If Sadhu runs a Company how it will be?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X