ஐடி நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் எப்படி வெளியேற்றப்படுகிறார்கள் என்பதை டெக் மஹிந்திராவின் வாயிலாக நாம் பார்த்த நிலையில், இந்தியாவில் அதிகளவில் ஊழியர்களை வைத்து உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் காக்னிசென்ட் நிறுவனம் உயர் அதிகாரிகளுக்குப் பல வகையில் நெருக்கடிகள் அளிக்கப்பட்டு ஊழியர்களை நிறுவனத்தை வெளியேற்றி வருகிறது.
இந்நிலையில் காக்னிசென்ட் நிர்வாகத்தின் நெருக்கடியைத் தாங்க முடியாமல் சுமார் 400 உயர் அதிகாரிகள் நிறுவனத்தை விட்டு வெளியேற ஒப்புதல் அளித்துள்ளனர்.
டார்கெட்
அமெரிக்காவைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் காக்னிசென்ட் தனது செலவுகளைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும் உயர் அதிகாரிகளை மட்டும் குறிவைத்து சில மாதங்களுக்கு முன்பு voluntary separation package (VSP) என்ற திட்டத்தை அறிவித்தது.
இத்திட்டத்தின் வாயிலாகப் பல வருடங்கள் அனுபவத்துடன் இந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களை வெளியேற முடிவு செய்துள்ளது காக்னிசென்ட்.
விஎஸ்பி திட்டம்..
voluntary separation package (VSP) திட்டத்தின் வாயிலாக வருடத்திற்குச் சுமார் 60 மில்லியன் டாலர் வரை சேமிக்கத் திட்டமிட்டுள்ளது சிடிஎஸ்.
400 உயர் அதிகாரிகள்
நிர்வாகத்தின் பல வகையிலான நெருக்கடியின் வாயிலாக வழி இல்லாமல் சுமார் 400 உயர் அதிகாரிகள் இந்தத் திட்டத்தினை ஏற்றுக்கொண்டு நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர்.
இதன் மூலம் ஊழியர்களே தானாக வந்து ராஜினாமா செய்யும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளதால், சந்தையில் இந்நிறுவனத்தின் மதிப்பு குறையாது. இதுவே கார்பரேட் மூளை.
திட்டத்தின் முழு விபரம்
காக்னிசென்ட் நிர்வாகம் விபிஎஸ் திட்டத்தை மே மாதத்தில் அறிவித்தது. இத்திட்டத்தினை ஏற்றுக்கொள்ளும் ஒருவருக்குச் சிடிஎஸ் நிர்வாகம் 9 மாதம் சம்பளத்தை அளித்துப் பணியில் இருந்து வெளியேற்றுகிறது.
இந்தத் திட்டம் இந்திய ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல் அமெரிக்க அலுவலகங்களில் இருக்கும் ஊழியர்களுக்கும் பொருந்து.
இந்தியாவில் பாதிப்பு அதிகம்
2.56 லட்சம் ஊழியர்களைக் கொண்ட காக்னிசென்ட் நிறுவனத்தில், அதிகளவிலான ஊழியர்கள் இந்தியாவில் இருக்கும் காரணத்தால் இத்திட்டத்தை ஏற்றுக்கொண்ட 400 ஊழியர்களில் அதிகமானோர் இந்தியாவில் இருப்பார்கள் எனத் தெரிகிறது.
கேரேன் கெர்லோக்லின்
இதுகுறித்துக் காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரி கேரேன் கெர்லோக்லின் கூறுகையில், விஎஸ்பி திட்டத்தின் மூலம் 60 மில்லியன் டாலர் சேமிப்பு இலக்கை முழுமையாக அடைவோம் எனத் தெரிவித்தார்.
மேலும் விஎஸ்பி திட்டத்தை 400 உயர் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்த கேரேன் இந்தியாவில் ஊழியர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை அளிக்கவில்லை.
ஜூன் காலாண்டு..
2017ஆம் ஆண்டில் மார்ட் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை சுமார் 4000 பேர் குறைந்துள்ளனர்.
இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தில் சுமார் 10,800 பேர் புதிதாகப் பணியில் அமர்த்தியுள்ளனர்.
மனசாட்சி இல்லாத செயல்
இவர்கள்தான்
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications