இதுதான் இவர்களுடைய காதல் கதை..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

காதல் கதைகள் எப்போதுமே சுவாரஸ்யம் தான், அதிலும் பணக்காரர்கள், தொழிலதிபர்களின் காதல் கதைக்கு ஒரு படி மேல்.

காரணம் இவர்களை பற்றியும் இவர்களின் நிறுவனங்களை பற்றிய செய்திகளை தினந்தோறும் நாம் படித்து வருவதால் இவர்களின் காதல் கதையை தெரிந்துக்கொள்ள மிகப்பெரிய ஆர்வம் இருக்கும்.

பொதுவாக பெரும் பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்களின் திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டதாக மட்டுமே இருக்கும், சிலருடையது மட்டுமே காதல் திருமணமாக இருக்கிறது.

இந்த வகையில் காதல் திருமணம் செய்துக்கொண்ட இந்தியாவின் முன்னணி நிறுவன தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களையே நாம் இப்போது பார்க்கபோகிறோம்.

டிம்மி நரங்

மும்பையை கலக்கும் தி அம்பாசிட்டர் ஹோட்டல் சையின் மற்றும் லஷ் ரெஸ்டாரன்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான டிம்மி நரங் இப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

ஜிம் பிரியரான டிம்மி, பாலிவுடன் நடிகையான ஈஷா கோப்பிகர்-ஐ ஜிம்மில் முதல் முறையாக சந்தித்தபோது காதல் மலர்ந்தது. 2 வருட காதலில் 2 முறைமட்டுமே நேரடியாக சந்தித்த இவர்கள் திருமணம் செய்துள்ளனர்.

 

தீபக் ரவிந்திரன்

பெங்களுரு-வின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனமான லுக்அப் என்னும் மெசேஜிங் ஆப்-ஐ உருவாக்கிய தீபக் ரவிந்திரன் காதல் திருமணம் செய்துள்ளார்.

தீபக் தனது கண்டுப்பிடிப்புக்கு பேட்டன் வாங்குவதற்காக முயற்சிசெய்துக்கொண்டு இருக்கும்போது ஷில்பா தகூரை சந்தித்தார். இவரது திருமணம் ஒரு கான்டினென்டல் திருமணமாம்.

வெனீஸ் நகரில் தீபக் பிரபோஸ் செய்து, கலிபோர்னியாவில் நிச்சயக்கப்பட்டு, கேரளாவில் திருமணம் செய்துக்கொண்டார் தீபக் ரவிந்திரன்.

 

பின்னி பன்சால்

நாட்டின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்-இன் தலைமை நிர்வாக அதிகாரியான பின்னி பன்சால் தனது காதல் மனைவியான திரிஷா வாசுதேவா-வை தான் ஐஐடி கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும்போது ஒரு தேசிய அளவிலான செமினாரில் திரிஷாவை சந்திதார்.

இப்போது முதல் காதல் கதை துவங்கியது..

 

சுந்தர் பிச்சை

பின்னி பன்சால் போலவே நம்ம சுந்தர் பிச்சையும் ஐஐடி கல்லூரியின் தான் தனது காதல் மனைவியான அஞ்சலியை சந்தித்தார்.

ஒரு கல்லுரியில் ஒரே ஆண்டில் ஐஐடியில் சேர்ந்த இருவரும் 4 வரும் உயிர் நண்பர்களாக இருந்து, 5வது வருடம் தனது காதலை சொன்னார் சுந்தர்.

 

அனில் அம்பானி

இந்தியா பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ரிலையன் சாம்ராஜியத்தின் அனில் அம்பானியும் காதல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் நடிகையான டினா முனிம் அவர்களை ஒரு திருமணத்தில் பார்த்தார் அனில் அம்பானி. டினாவின் உடையும், அவர் தேர்வு செய்த கருப்பு நிற புடவை அனில் அம்பானிக்கு மிகவும் பிடித்துபோனதால், டினாவின் மீது காதல் கொண்டார் அனில்.

இதன் பின் இருவரும் பிலடெல்பியா-வில் சந்தித்தனர், அன்று முதல் துவங்கியது இவர்களின் காதல் கதை.

 

கிரன் முசம்தார் ஷா

இந்திய பார்மா துறையில் முக்கிய பங்கு வகிக்கும் பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரன் முசம்தார் ஷா, தனது கனவரை ஒரு பார்டியில் பார்தார். இப்போது ஜான் ஷா மற்றும் கிரன் முசம்தார் ஷா மத்தியில் காதல் மலர்ந்தது.

நாராயண மூர்த்தி

இன்போசிஸ் சாம்ராஜியத்தை உருவாக்கிய நாள் முதல் இதன் இமாலைய வெற்றி வரையில் மிகப்பெரிய பங்காற்றிய நாராயண மூர்த்தியும் தனது மனைவியான சுதா மூர்த்தியை காதல் திருமணம் செய்துக்கொண்டார்.

இவர் இருவரகளுக்கும் மத்தியிலான சந்திப்பு, விப்ரோ நிறுவனத்தின் உயர் அதிகாரியாக இருந்து பிரசன்னா வியாலாக நடந்துள்ளது. பிரசன்னா சுதா மூர்த்தி அவர்களுக்கு நிறைய புத்தகங்களை கொடுப்பார். அனைத்தும் நாராயாணமூர்த்தியின் பெயர் இருக்கும்.

இதுவே இவர் இருவர்களுக்கு மத்தியிலான உறவின் துவக்க புள்ளியாக இருந்தது.

 

ராகுல் குமார்

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான ராகுல் குமார், முன்னணி தமிழ் திரைப்பட நடிகையான அசினை காதல் திருமணம் செய்துள்ளார்.

இவரது காதல் கதை 100 சதவீதம் கஜினி படத்தில் சஞ்சய் ராமசாமி கதாப்பாத்திரைத்தா போல்வே இருந்ததாக அசின் கூறினார்.

 

மார்க் ஜூக்கர்பெர்க்

இப்பட்டியலில் ஒரேயோரு வெளிநாட்டவர். பேஸ்புக் மூலம் நாம் அனைவரையும் கட்டிப்போட்ட மார்க் ஜூக்கர்பெர்க் தனது காதல் மனைவியான பிரிசில்லா சான் அவர்களை ஒரு பார்டியில் சந்தித்தனர்.

இந்த விஷயம் தெரியுமா உங்களுக்கு

முகேஷ் அம்பானியின் ரகசிய காதலி..!


 

கிரியேட்டிவிட்டி

வியப்பில் ஆழ்த்தும் விசிடிங் கார்டுகள்.. என்ன ஒரு கிரியேட்டிவிட்டி..!

'வெற்றி'

இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. 'வெற்றி' உங்களை தேடி வரும்..!

அறியாத உண்மை

இந்திய நாணயங்கள் பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்..!

கட்டாயம் படிங்க

30 வயசாகிடுச்சா.. அப்போ இதை கட்டாயம் படிங்க..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How These Billionaires Met The Love Of Their Life

How These Billionaires Met The Love Of Their Life Tamil Goodreturns | இதுதான் இவர்களுடைய காதல் கதை..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns