உப்புமா-வில் கடத்தல்.. துபாய் செல்லும் தம்பதி செய்த தில்லாலங்கடி வேலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புனே: வெளிநாட்டுப் பயணிகள் கொண்டுவரும் பொருட்களின் மீது கட்டுப்பாடுகள் அதிகளவில் உள்ளது என்பது நாம் அனைவருக்கும் அறிந்த ஒன்றுதான். ஒரு நாட்டின் வர்த்தகக் காரணங்களுக்காக அரசு இதனைத் தளர்த்தாமல் உள்ளது. இது இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலும் இதே நிலைதான்

 

இத்தகைய கட்டுப்பாட்டின் காரணமாக நாட்டில் கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உப்புமா-வில் கடத்தல்

உப்புமா-வில் கடத்தல்

துபாய்ச் செல்லும் இரு பயணிகள் புனே விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டபோது அவர்களிடம் அதிகளவிலான உப்புமா இருந்தது சுங்க அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை எழுப்பியது.

இரு பயணிகளில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாரிகள் சோதனை செய்தபோது ஒருவரின் பெயர் நிஷான்த் எனத் தெரியவந்தது.

சந்தேகம்

சந்தேகம்

இந்த இரு பயணிகளின் லக்கேஜ்-யை சோதனை செய்தபோது ஒரு ஹாட் கேஸ்-இல் இயல்பிற்கும் அதிகமான அளவில் உப்புமா வைத்திருந்தனர், இதனை மறுசோதனை செய்யச் சங்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

மறு சோதனை

மறு சோதனை

உப்புமா இருந்த ஹாட் கேஸ்-இல் கருப்பு பிளாஸ்டிக் கவர் இருந்தது. இதில் 86,000 அமெரிக்க டாலர் மற்றும் 15,000 யூரோ இருந்தது சுங்க அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்தது.

அளவிற்கு அதிகமான பணம்
 

அளவிற்கு அதிகமான பணம்

இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்குச் செல்லும் பயணிகள் குறிப்பிட்ட அளவில் மட்டுமே இந்திய பணமும், அந்நாட்டு ரூபாய்களையும் கொண்டு செல்ல வேண்டும். இது நிர்ணயம் செய்யப்பட்ட அளவை விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே விமானம்

ஒரே விமானம்

இதன் பின் இருவரையும் விசாரித்த போது அவர்களின் பெயர் நிஷான்த் மற்றும் ரங்லானி எனவும் இருவரும் ஓரே விமானத்தில் செல்ல டிக்கெட் பதிவு செய்யப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Couple passengers smuggled with upma: Pune to Dubai

Couple passengers smuggled with upma: Pune to Dubai
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X