ஆகஸ்ட் 22 வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்.. வங்கி சேவைகள் முடங்கும் அபாயம்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

சென்னை: பொதுத்துறை வங்கி அதிகாரிகள் மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வங்கி சங்கங்கள் ஐக்கிய அமைப்பின் கீழ் இருக்கும் 9 வங்கி யூனிகளில் இருக்கும் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை ஆகஸ்ட் 22ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதனால் நாடு முழுவதும் வங்கி சேவைகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 22

பல வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 22ஆம் தேதி வங்கி இயங்காது எனத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்த முறை வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்குவதாகத் திட்டமில்லை.

தனியார் வங்கிகள்

இதனால் வருகிற செவ்வாய்க்கிழமை பொதுத்துறை வங்கிகளின் சேவை முடங்க உள்ளது. இதேவேளையில் தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, கோட்டாக் மஹிந்திரா வங்கி ஆகிய இயல்பாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

காசோலை பரிமாற்றம்

ஆனால் காசோலை பரிமாற்றத்தில் மட்டும் தாமதம் ஏற்படும் எனத் தனது வாடிக்கையாளர்களுக்கு முன் எச்சரிக்கை செய்துள்ளது தனியார் வங்கிகள்.

பேச்சுவார்த்தை

தலைமை தொழிலாளர் கமிஷனர் நடந்த பேச்சுவார்த்தையில் வங்கி ஊழியர்களுக்குச் சாதகமான முடிவுகள் கிடைக்காத காரணத்தால் போராட்டத்தை விட முடியாது என AIBOC அமைப்புப் பொதுச் செயலாளர் டி.டி பிரான்கோ தெரிவித்தார்.

கோரிக்கை

வங்கிகளைத் தனியார்மயமாக்குதல், பொதுத்துறை வங்கிகளை இணைப்புகள் ஆகியவற்றை எதிர்த்து வங்கி ஊழியர்கள் சங்கங்கள் மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

பேச்சுவார்த்தை கைகொடுக்காத நிலையில், தற்போது போராட்டம் ஆகஸ்ட் 22ஆம் தேதி உறுதியாகியுள்ளது.

 

வராக்கடன்

இந்திய வங்கித்துறையில் குவிந்துக்கிடக்கும் வராக்கடன் பிரச்சனையைத் தீர்க்க நாடாளுமன்றத்தில் புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும்.

பொதுத் துறை வங்கிகள் வராக்கடனைத் தொடர்ந்து தள்ளுபடி செய்து வரும் நிலையில் வர்த்தகச் சந்தையில் வங்கிகளின் நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. இதுவும் வங்கி அமைப்புகளின் முக்கியக் கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.

 

10 லட்சம் பேர்

நாடு முழுவதும் நடக்கும் இந்தப் போராட்டத்தில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கி அதிகாரிகள் சுமார் 10 லட்சம் பேர் கலந்துகொள்ள உள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Bank unions strike on Tuesday: Bank services may be massive hit

Bank unions strike on Tuesday: Bank services may be massive hit - Tamil Goodreturns | செவ்வாய்க்கிழமை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்.. வங்கி சேவைகள் முடங்கும் அபாயம்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Sunday, August 20, 2017, 16:56 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns