ஜியோவுக்குப் போட்டியாக ஏர்டெல்-இன் அதிரடி திட்டம்.. தீபாவளி ரிலீஸ்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் 4ஜி போன் தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதன்படி தீபாவளிக்கு முன்பு 2,500 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிடத் திட்டம் தீட்டி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் ஜியோவிற்குப் போட்டியாக அந்தப் போனுடன் பண்டில் ஆஃபராக இலவச இணையதளத் தரவு மற்றும் குரல் அழைப்புகளை வழங்க ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஏர்டெல் போன்

4ஜி போன் தயாரிப்பாளருடன் இணைந்து ஏர்டெல் பிரமோட் செய்யும் ஆனால் மானியம் ஏதும் வழங்காது. அதே நேரம் பிரபல ஆண்டிராய்டு தளத்தில் இயங்கும் போனாகவும், அனைத்து செயலிகளையும் பதிவிறக்கம் செய்து பயன்பெறும் வகையிலும் இந்தப் பொன் இருக்கும் என்று கூறப்படுகின்றது.

தீபாவளி

ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ள இந்தப் போன் செப்டம்பர் மாத இறுதி அல்லது அக்டோபர் மாத துவக்கத்தில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகின்றது.

ஏர்டெல் கோரிக்கை

ஏர்டெல் நிறுவனம் பேசி வரும் போன் தயாரிப்பாளர்களிடம் 2,500 ரூபாய்க்குப் பெரிய திரையுடன் ஸ்மார்ட்போன் வேண்டும் என்றும், நல்ல கேமரா தரம் இருக்க வேண்டும் என்றும் சிறந்த பேட்டரி செயல் திறன் இருக்க வேண்டும் என்றும் பியூச்சர் போனை விடச் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று ஏர்டெல் திட்டம் தீட்டியுள்ளது.

லாவா மற்றும் கார்பன்

லாவா மற்றும் கார்பன் நிறுவனங்கள் உடன் ஏர்டெல் நிறுவனம் பேசி வருவதாக நமக்குத் தகவல் கிடைதனை அடுத்து அவர்களின் செய்தித் தொடர்பாளர்களைத் தொடர்பு கொண்டால் கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

ஏர்டெல் செய்தித் தொடர்பாளர் கருத்து

சந்தை உகங்களுக்கு நாங்கள் பதில் அளிக்க விரும்பவில்லை என்று பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரும் கூறியுள்ளார்.

ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் 1,500 ரூபாய் பியூச்சர் மட்டும் இல்லாமல் ஏர்டெல், ஐடியா நிறுவனங்கள் கூறிவரும் 2,500 ரூபாய்க்கு நிகரான ஒரு போனை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதே நேரம் ஜியோ வழங்க இருக்கும் 1,500 ரூபாய் போன் 3 வருட செக்யூரிட்டி டெபாசிட்டாகப் பெற இருப்பதும், மூன்று வருடம் கழித்துத் திருப்பி அளிக்கப்படும் என்பதும் 153 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து ஜியோ டிவி செயலி, படங்கள், பாடல்கள், பேஸ்புக், யூடியூப், வாட்ஸ் ஆப் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி மகிழலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஏர்டெல்

ஜியோ நிறுவனம் 1,500 ரூபாய்க்கு பியூச்சர் போன் அளித்தாலும் கூடுதலாக 1000 ரூபாய்ச் செலுத்தினால் ஸ்மார்ட்போன் வாங்கலாம் என்பதைத் தான் வாடிக்கையாளர்கள் விரும்புவார்கள் என்று ஏர்டெல் நிறுவனம் நினைப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ஐடியா

ஐடியா நிறுவனமும் ஜியோ போன் அறிவிக்கப்பட்ட ஓர் இரு நாட்களில் 2,500 ரூபாய்க்குப் போன் வெளியிட இருப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Airtel to counter Jio through 4G smartphone at Rs 2,500 before Diwali

Airtel to counter Jio through 4G smartphone at Rs 2,500 before Diwali
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns