பெட்ரோல், டீசல் வாங்குவதில் தனியார் நிறுவனங்களுக்கு சலுகை.. அப்போ மக்களுக்கு..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அனைத்து மாநில அரசுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது தனியார் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய லாபத்தை அளிக்கும் ஒன்றாக உள்ளது.

 

இதனால் மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளது. இந்தக் கேள்விகள் அனைத்தும் பதில் அளிக்கும் விதமாக இந்தக் கட்டுரை.

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை

இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை மும்பையில் 77 ரூபாய், சென்னையில் 71 ரூபாய், கொல்கத்தாவில் 71, டெல்லியில் 69 ரூபாய் எனப் பெட்ரோலுக்கு நாடு முழுவதும் மக்கள் வெவ்வேறு விதமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சென்ற மாதம் விலை எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

சென்ற மாதம் விலை எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

கடந்த மாதம் மட்டும் 4 முதல் 5 ரூபாய் வரை பெட்ரோல் விலை உயர்ந்து உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 முதல் 5 டாலர்கள் வரை விலை உயர்ந்துள்ளது எனக் கூறலாம்.

ஆனால் அதுமட்டும் தான் பெட்ரோல் விலை 77 ரூபாய் என விற்பதற்கான காரணமா என்று பார்த்தால் அது தான் இல்லை. சமீபத்தில்

 

கச்சா எண்ணெய்
 

கச்சா எண்ணெய்

சில வருடங்களுக்கு முன்பு கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலர்கள் வரை உயர்ந்து காணப்பட்டது.

ஆனால் தற்போது 40 முதல் 55 டாலருக்கு உல் தான் கச்சா எண்ணெய்யின் விலை மாற்றம் நடைபெறுகின்றது. சராசரியாக நாம் ஒரு பேரல் பெட்ரோல் 50 டாலர்கள் என்று வைத்துக்கொள்வோம், அப்படியென்றால் கூடப் பாதிக்குப் பாதி விலை குறைந்துள்ளது.

 

யாமாற்றத்தில் நாம்?

யாமாற்றத்தில் நாம்?

ஆனாலும் நாம் 100 டாலர்கள் இருக்கும் போது என்ன விலை கொடுத்து பெட்ரோல், டீசல் வாங்கினோமோ அதே விலை தான் கொடுத்து வாங்கி வருகின்றோம்.
இந்த மோசமான நிலைக்கு என்ன காரணம்..? யார் காரணம்..? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழும் ஒன்று.

கச்சா எண்ணெய் - பெட்ரோல்

கச்சா எண்ணெய் - பெட்ரோல்

நாம் பெட்ரோல் இறக்குமதி செய்யப்பட்டு, கையில் வந்து சேர்வதற்குள் என்னவெல்லாம் ஆகின்றது அதற்கு என்ன செலவாகும் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

கச்சா எண்ணெய் முதலில் இறக்குமதி செய்யப்பட்டு அதனைச் சுத்திகரிப்புச் செய்து, அதனைப் பெட்ரோல் பங்குகளுக்கு எடுத்து வருவது, டீலர்களுக்குக் கமிஷன் அளிப்பது என அனைத்தும் உள்ளடக்கிய பிறகு நமக்கு விற்பனை செய்யப்பட்டால் 30 முதல் 35 ரூபாய் லிட்டர் என விற்பனை செய்யலாம்.

 

கூடுதலாகச் செலுத்தப்படும் விலை என்ன?

கூடுதலாகச் செலுத்தப்படும் விலை என்ன?

30 ரூபாய்க்கும், 77 ரூபாய்க்கும் உள்ள வித்தியாசத்தினைப் பாருங்கள், மக்கள் எந்த அளவிற்கு விலை கொடுத்து வாங்குகின்றார்கள்.

இந்தக் கூடுதல் கட்டணம் எல்லாமே மத்திய மாநில அரசுகளுக்கு வரியாக நாம் செலுத்துகின்றோம். அதாவது மாநிலங்களுக்கு வாட் என்ற பெயரிலும் மத்திய அரசுக்குக் கலால் வரி.

 

60 சதவீத வரி

60 சதவீத வரி

உங்கள் கேள்வி நியமானது தான், 30 ரூபாய் பெட்ரோலுக்கு 42 வரை கூடுதலாக வரியாகச் செலுத்துகின்றோம். எதற்காக இந்த அளவிற்கு 60 சதவீதம் வரை வரியை வசூலிக்கின்றார்கள்.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் ஜிஎஸ்டிக்குக் கீழ் கொண்டு வந்த மத்திய அரசு பெட்ரோல், மற்றும் டீசல் போன்றவற்றைக் கொண்டு வராததற்கு முக்கியக் காரணமும் இவர்களுக்கு முக்கியமாக வருமானம் இதில் இருந்து வருவதே ஆகும். இதனை மாநில அரசுகள் இழக்க விரும்பவில்லை.

அதனால் தான் ஜிஎஸ்டி அமலுக்கு வரும் போது இதனைத் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. பின்னர் இதற்கு விலக்கு அளிக்கப்படும் பிறகு தமிழ்நாடு உட்படப் பல மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தது.

 

வருவாய் இழப்பு ஏற்பட்டால் ஈடுகட்டும்

வருவாய் இழப்பு ஏற்பட்டால் ஈடுகட்டும்

எனவே பெட்ரோல், டீசல் மூலம் வரும் வருவாயினை வைத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் ஜிஎஸ்டி மூலம் நட்டம் ஏற்பட்டால், வருவாய் இழப்பு ஏற்பட்டால் சமாலித்துவிடலாம் என்று கணக்கு போட்டுள்ளன.

அருண் ஜேட்லி வலியுறுத்தல்

அருண் ஜேட்லி வலியுறுத்தல்

கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பெட்ரோல் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை (VAT) குறைக்க மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளார். இதனை மாநில அரசுகள் செய்தால் பொது மக்களுக்கு நல்லது தானே என்று நீங்கள் நினைக்கலாம்.

யாருக்கு தெரியுமா வாட் வரிக் குறைப்பு?

யாருக்கு தெரியுமா வாட் வரிக் குறைப்பு?

நிதியமைச்சர் கூறியுள்ளது மக்களுக்கு அளிக்கப்படும் பெட்ரோல் டீசலுக்கு அல்ல, பெரிய அளவில் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, தங்கள் தேவைக்காக வாங்கும் எரிபொருளுக்கான வரியைத் தான். இதனால் மக்களுக்கு நேரடியாக எவ்விதமான பயனுமில்லை. மத்திய அரசு கார்பரேட் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி.

 கார்பேட்டுக்குச் சதாகமான திட்டம்

கார்பேட்டுக்குச் சதாகமான திட்டம்

ஏற்கனவே ஜிஎஸ்டி-ல் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு அதிகளவில் நன்மை பெற்று வரும் நிலையில் இந்த அறிவிப்பு அவர்களுக்குக் கூடுதல் நன்மை அளிக்கும் விதமாகவே உள்ளது. இதனால் மக்களுக்கு என்ன லாபம்..?

பொதுமக்களுக்கு என்ன லாபம்?

பொதுமக்களுக்கு என்ன லாபம்?

சரி, இந்த வரி குறைப்பினால் கார்ப்ரேட் நிறுவனங்களின் தயாரிப்புகளின் செலவுகள் கணிசமாகக் குறையும் என்பது உறுதியாகியுள்ள நிலையில், அந்தப் பொருட்களின் சந்தை விலையும் குறைய வாய்ப்புகள் அதிகம்.

மக்களுக்குப் பயனில்லை

மக்களுக்குப் பயனில்லை

ஆனால் நிறுவனங்கள் எப்படியும் பொருட்களின் சந்தை விலையைக் குறைக்காது, இதனை மத்திய மாநில அரசும் கண்டுகொள்ளாது. இதனால் மக்களுக்கு எவ்விதமான பயனுமில்லை. தனியார் நிறுவனங்களின் லாபம் மட்டும் உயரும்.

மத்திய அரசின் வரி மாற்றங்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீதான வரி குறைந்ததாகத் தெரியவில்லை. இதற்கு ஜிஎஸ்டி ஒரு முக்கிய உதாரணம். அந்த வரிசையில் தற்போது நிதி அமைச்சரின் அறிவிப்பும் ஒன்று.

 

மக்களின் நிலை

மக்களின் நிலை

சராசரியாக இந்திய மக்கள் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பெட்ரோலினை 77 ரூபாய் கொடுத்து வங்கி கொண்டு, தனது குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும், பின்னர் அலுவலகம் சென்று வர வேண்டும். பொதுத் துறை போக்குவரத்துச் சேவையினைப் பயன்படுத்தலாம் என்றால் சரியான பராமரிப்பு இல்லாமல் இயங்கும் பேருந்து ரயில்களால் தினம் தோறும் நிகழும் விபத்துகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன.

நிதி அமைச்சருக்குக் கேள்வி

நிதி அமைச்சருக்குக் கேள்வி

நிதி அமைச்சர் அவர்களே சாமானிய இந்தியானாக இருந்து என்னிடம் இருந்து உங்களுக்கு ஒரு கேள்வி தான். கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஒரு வரி, சாமானிய மக்களுக்கு ஒரு வரி விதிக்க வேண்டுமா? அல்லது பொதுவாக அனைவருக்கு ஒரு வரியை விதிக்க வேண்டுமா? என்பது ஆகும்.

வெளிப்படையான கணக்கு அளிப்பீர்களா?

வெளிப்படையான கணக்கு அளிப்பீர்களா?

உங்களிடம் இருந்து பதில் வருமா.. சரி, நாங்கள் வரி செலுத்துகின்றோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், நாங்கள் செலுத்தும் வரிப் பணம் எல்லாம் என்ன ஆனது, எதற்குப் பயன்படுத்தப்பட்டது என்று நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Central Government to look only private companies, forget to notice public!

Central Government to look only private companies, forget to notice public!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X