ரிசர்வ் வங்கி நாளை 200 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்கிறது.. இது தான் அசல் நோட்டு..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

இந்திய ரிசர்வ் வங்கி புதிய 200 நோட்டு வெளியிட இருக்கின்றது என்று கடந்த சில மாதங்களாகச் செய்திகள் படத்துடன் வெளிவந்து கொண்டு இருக்கின்றது. இப்போது 200 ரூபாய் நோட்டு வருவதை ஆர்பிஐ உறுதி செய்துள்ளது. இதன் மூலம் முன்பு இணையத்தில் வெளியான மாதிரி படங்கள் போலி என்று தெரிய வந்துள்ளது.

ஆர்பிஐ வங்கி இந்தப் புதிய 200 ரூபாய் நோட்டை 2017 ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் அறிமுகம் செய்ய உள்ளது. மகாத்மா காந்தி எண் வரிசையில் இந்த நோட்டு ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்துடன் வெளிவருவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தலைசிறந்த பாரம்பரிய பாரம்பரியத்தைச் சித்தரிக்கும் வகையில் சஞ்சி ஸ்தூபியின் படம் பின்புறத்தில் பதியப்பட்டுள்ளது.

புதிய 200 ரூபாய் குறித்த முழு விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.

குறியீடுகள் 1

1) 200 ரூபாய் என எண் வடிவில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
2) தேவனாகிரி எழுத்து வடிவிலும் २०० ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
3) மகாத்தமா காந்தியின் புகைப்படம் ரூபாய் நோட்டின் மத்தியில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
4) ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் அவர்களின் கையெழுத்தும் இருக்கும்.
5) அசோக பில்லர் சின்னம் வலது புறத்தில் பொறிக்கப்பட்டு இருக்கும்.

குறியீடுகள் 2

6) பின் புறத்தில் சஞ்சி ஸ்தூபியின் படம் பின்புறத்தில் பதியப்பட்டு இருக்கும்.
7) பின் புறத்தில் தூய்மை இந்தியா சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கும்.
8) நோட்டின் அளவு 66 mm × 146 mm ஆக இருக்கும்
9) பார்வை இல்லாதவர்கள் ரூபாய் நோட்டினை தடவி அறியும் வண்ணம் இரண்டு கோடுகள் மற்றும் இரண்டு பூஜ்ஜியம் மற்றும் இரண்டு கோடுகள் என இடது மற்றும் வலது புறத்தில் பொதியப்பட்டு இருக்கும்.
10) அசோக சின்னத்தின் மேல் H என்று இருக்கும். அதில் 200 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும்.

பிற குறியீடுகள்

பிற குறியீடுகள் எல்லாம் முந்தைய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டினை போன்றே இருக்கும்.

வண்ணம்

புதிதாக அறிமுகம் செய்ய இருக்கும் 200 ரூபாய் நோட்டு பிரகாசமான மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

எதனால் 200 ரூபாய் நோட்டு அறிமுகம்

1000 ரூபாய் நோட்டின் மதிப்பினை நீக்கிய பிறகு புதிய 2000 ரூபாய் நோட்டினை அறிமுகப்படுத்திய பிறகு சில்லறை தட்டுப்பாடு அதிகம் இருக்கின்றது. அதிலும் 100 ரூபாய் தாள்களுக்கு அதிகளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனைச் சரி செய்யவே இந்தப் புதிய 200 ரூபாய் அறிமுகம் ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI Introduces Rs 200 denomination banknote

RBI Introduces Rs 200 denomination banknote
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns