எம்பிஏ பட்டம் வைத்துள்ளீர்களா.. நீங்களும் பணக்காரர் தான்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

சில எம்பிஏ கல்லூரிகளில் சம்பளப் பேக்கேஜ்கள் கடந்த ஆண்டைப் போலவே ஏறத்தாழ இருந்தாலும், இதர சில நிறுவனங்களில் சராசரியாக 5 முதல் 10% வரை உயர்ந்துள்ளது.

பெங்களூரில் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் படித்தவர்களுக்கு வருடாந்திர சம்பளம் சராசரியாக ரூ. 21.52 இலட்சமாக இருக்கிறது (ரூ 23.03 லட்சத்திற்கு மாற்றாக), அதே சமயம் சராசரி சம்பளம் வருடத்திற்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ. 21 இலட்சம் வரை உயர்ந்துள்ளது.

பெரிய பேக்கேஜ்கள்

எக்ஸ்எல்ஆர்ஐ ல் வழங்கப்பட்ட மிக அதிக அளவு வருடாந்திர சம்பளம் ரூ. 43 இலட்சமாகும். இது முந்தைய பேட்ச்சின் சம்பளத்தை விட ரூ. 5 லட்சம் குறைவாகும். அதே சமயம் சராசரி சம்பளம் ரூ. 19.2 லட்சம் வரை உயர்ந்துள்ளது. (மாதத்திற்கு ரூ 70,000 வரை). ஐஐஎம் கோழிக்கோட்டில் அதிகபட்ச சம்பளம் ரூ. 37 லட்சமாகும், இது கடந்த ஆண்டுச் சம்பளத்தைப் போலவே மாறாமல் இருக்கிறது.

புவனேஷ்வரில் உள்ள எக்ஸ்எம்பி நிறுவனத்தில் சராசரி சம்பளம் ரூ. 13.18 லட்சம். இது கடந்த ஆண்டுச் சம்பளமான ரூ. 12.44 லட்சத்தை விட அதிகரித்துள்ளது. காஷிபூரில் ஐஐஎம் நிறுவனம் வழங்கும் அதிகபட்ச சம்பளம் ரூ. 53 லட்சம். இது கடந்த ஆண்டுச் சம்பளத்தைப் போல அப்படியே இருக்கிறது. ஆனால் சராசரி சம்பளம் கடந்த ஆண்டு இருந்த ரூ. 13 லட்சத்திலிருந்து ரூ. 1 லட்சம் வரை உயர்ந்துள்ளது.

 

முதன்மையாக ஆதாயம் பெற்றவர்கள்.

திருச்சியில் உள்ள ஐஐஎம் நிறுவனம் உள்ளிட்ட ஆதாயமடைந்த நிறுவனங்கள் இந்த வருடம் அதிகபட்ச சம்பளமாக ரூ. 23.8 இலட்சத்திலிருந்து ரூ. 33 இலட்சத்திற்குத் தாவி மிகப்பெரிய ஆதாயத்தைக் கண்டிருக்கிறார்கள். ஷைலேஷ் ஜே மேத்தா மேலாண்மை கல்வி நிறுவனத்திலிருந்து பணிக்கு எடுக்கப்பட்ட மாணவர்களின் சராசரி மாத சம்பளம் ரூ. 16 இலட்சமாகும், பாம்பே ஐஐடி கல்வி நிறுவனத்தில் பயின்ற மாணவர்களின் சம்பளம் ரூ. 16.5 இலட்சத்திலிருந்து ரூ. 17.63 இலட்சத்திற்கு உயர்வைக் கண்டுள்ளது. டிஎம்எஸ் ஐஐடி மெட்ராஸில் கல்வி நிறுவன மாணவர்களின் சராசரி மாத சம்பளம் ரூ. 10.83 இலட்சத்திலிருந்து ரூ. 12 இலட்சத்திற்கு உயர்ந்துள்ளது.

பணியில் அமர்த்துதல் அவ்வளவு சிறப்பாக இல்லை.

தொழிற்துறை பொறியியல் தேசிய கல்வி நிறுவன (என்ஐடிஐஈ) மாணவர்கள் சராசரி சம்பளமாக ரூ 15.86 இலட்சத்தைக் கண்டுள்ளனர். அதே சமயம் இவர்களுடைய அதிகபட்ச உள்நாட்டுப் பேக்கேஜ் ரூ. 39.5 இலட்சமாகும். வீ கல்வி நிறுவனம் அதிகபட்ச சம்பளமாக ரூ. 21 இலட்சத்திலிருந்து ரூ. 15 இலட்சமாக ஒரு மோசமான சரிவைச் சந்தித்துள்ளது.

புகழ் வெளிச்சத்திலுள்ள கல்வி நிறுவனங்கள்

ஷில்லாங்கில் ஐஐஎம் கல்லூரி அதிகபட்ச சம்பளமாக வருடத்திற்கு ரூ. 26 இலட்சம் சிடிசி வரை செலுத்தும் டொமைனாக உயர்ந்துள்ளதால் ஒட்டுமொத்த மாணவர்களின் பேட்ச்சில் 25% பேர் இந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எஃப்எம்எஸ் - பிஎச்யு, பிஎஃப்எஸ்ஐ (வங்கி, நிதியியல் சேவைகள் மற்றும் காப்பீடு) ஆகிய நிறுவனங்களிடம் 47% பங்குகள் உள்ளன.

குர்கானில் உள்ள எம்ஐடி கல்லூரியில் இந்த வருடம் மனிதவளச் செயல்பாட்டு பாடப்பிரிவிற்குத் தொழிற்துறையிலிருந்து தேவை அதிகரித்துள்ளது. நிதித்துறையிலும், முதலீட்டு வங்கியியல், காப்பீடு, பத்திரங்கள், நெருக்கடி மேலாண்மை போன்ற பிரிவுகள் முக்கியத்துவம் பெற்று இந்த ஆண்டுக் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

 

முன்கூட்டி வேலையில் அமர்த்தும் வாய்ப்புகள்.

நிறுவனங்கள் கல்லூரி மாணவர்களுக்கு முன்கூட்டி அளிக்கும் வேலை வாய்ப்பு வழியைத் தேர்ந்தெடுப்பது அதிகரித்து வருகிறது. கோடைக்காலப் பயிற்சியாளர்களாக அவர்கள் முயற்சித்துச் சோதனை செய்த மாணவர்களை வேலையில் அமர்த்த விரும்பித் தேர்ந்தெடுக்கின்றனர். கடந்த வருடம் முதல் எக்ஸ்எல்ஆர்ஐ நிறுவனத்தில் முன்கூட்டி வேலையில் அமர்த்தும் வாய்ப்புகள் குறிப்பிடத் தகுந்த அளவு அதிகரித்துள்ளது. நர்சீ மோன்ஜீ மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் 42% மாணவர் பேட்ச்சுகள் பிபிஒ (முன்கூட்டி வேலையில் அமர்த்தும் வாய்ப்பு) மற்றும் பிபிஐ (முன்கூட்டி வேலையில் அமர்த்துவதற்கான நேர்காணல்) முறை மூலம் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர், இது 2016 ஆம் ஆண்டை விட 20% அதிகரித்துள்ளது.

திருச்சி

திருச்சி ஐஐஎம் கல்லூரியில் முன்கூட்டி வேலையில் அமர்த்துவதற்கான வாய்ப்புகளை வழங்கும் நேர்காணல்கள் 19% வரை அதிகரித்துள்ளது. சிம்பயோசிஸ் வணிக மேலாண்மை கல்வி நிறுவனம் இந்த ஆண்டு மாணவர் பேட்ச்சிலிருந்து 37% பேரை பிபிஓ மூலமாக வேலைக்கு அமர்த்திக் கொண்டுள்ளனர்.

பாடப் பிரிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஈ காமர்ஸ், ஐடி பிரிவுகளுக்கு எஃப்எம்எஸ் டெல்லியில் வாய்ப்புகள் அதிகரித்திருப்பதுடன் சர்வதேச வாய்ப்புகளும் இரட்டிப்பாகியுள்ளன. புதுடெல்லி ஐஎம்ஐ கல்லூரியில் டிஜிட்டல் புரோஃபைல்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவது அதிகரித்துள்ளது.

எஃப்எம்சிஜி

விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்களின் (எஃப்எம்சிஜி) விளம்பர புரொஃபைல்கள் பாரம்பரிய விற்பனை மற்றும் விநியோக முறையிலிருந்து டிஜிட்டல் விளம்பர முறைக்குத் தீவிர மாற்றத்தை அடைந்துள்ளது. ஐஐஎஃப்டி டெல்லி கல்லூரியிலிருந்து மாணவர்களை வேலைக்கு எடுத்த நிறுவனங்கள் பழமைவாதத்தைக் கடைப்பிடிக்கின்றன. மேலும், நிலையான பணிகளுக்காக மட்டுமே மாணவர்களைப் பணியில் அமர்த்துகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை எஃப்எம்சிஜி துறையில் வளர்ச்சி ஆக்கிரமித்திருக்கிறது. அதே சமயம் வீ வர்த்தகப் பள்ளியில் டிஜிட்டல் விற்பனை மற்றும் வணிகப் பகுப்பாய்வுத் துறைகள் மீது ஆர்வம் அதிகரித்திருக்கிறது. கோழிக்கோடு ஐஐஎம் இல் படித்தவர்களுக்கு உடல்நலச் சுகாதார நிறுவனங்களில் வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.

எஸ்பிஐ ஆட்களைப் பணியில் அமர்த்தும் முக்கிய நிறுவனமாக எழுச்சியடைந்துள்ளது

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ நாடு முழுவதும் கல்லூரி வளாகங்களிலிருந்து மாணவர்களைப் பணியில் அமர்த்தும் முறையில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஐஐஎம் காஷிபூர் கல்லூரியிலிருந்து ஏழு மாணவர்களைப் பணியில் அமர்த்தி ஆள்சேர்ப்பு நிறுவனங்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இந்துஸ்தான் பெட்ரோலியக் கார்ப்பரேஷன் ஆறு மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. புவனேஷ்வர் எக்ஸாவியர் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் (எக்ஸ்ஐஎம்பி) எஸ்பிஐ லிருந்து 10 வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். மேலும், திருச்சி ஐஐஎம் கல்லூரி மற்றும் உதய்ப்பூர் ஐஐஎம் கல்லூரி மாணவர்கள் தலா ஆறு வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

 

முதல் முறையாக வேலைக்கு ஆட்களை நியமிப்பவர்கள்

கல்வி நிறுவனங்கள் ஒவ்வொரு ஆள்சேர்ப்பு நிறுவனத்திற்கும் மாணவர்களின் தனிப்பட்ட எண்ணிக்கைக் குறையாமல் சமநிலைப்படுத்தும் முயற்சியில் இருக்கின்ற வேளையில், நிறுவனங்கள் கல்லூரிகளிலிருந்து மாணவர்களை வேலைக்குச் சேர்க்கும் பாணி தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. அதிகமான புதிய ஆள்சேர்ப்பு நிறுவனங்கள் போட்டியில் புகுந்துள்ளனர். லக்னோவில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனமானது கடந்த ஆண்டு, சொசைட்டி ஜெனரேல் மற்றும் யுஏஈ எக்ஸ்சேஞ்ச் உள்ளிட்ட முதல் முறையாக மாணவர்களைப் பணிக்கு எடுக்கும் 52 நிறுவனங்களைச் சந்தித்துள்ளது.

42 புதிய நிறுவனங்கள்

எக்ஸ்எல்ஆர்ஐ கல்லூரிக்கு 42 புதிய நிறுவனங்கள் வந்துள்ளன, அதே சமயம் எஸ்பி ஜெயின் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிக் கல்வி நிறுவனத்திற்கு, சிப்லா மற்றும் கும்மின்ஸ் உள்ளிட்ட 30 புதிய ஆள்சேர்ப்பு நிறுவனங்கள் வந்துள்ளன. ஐஐஎம் இந்தோர் கல்லூரியில் கிட்டதட்ட 20 புதிய ஆள்சேர்ப்பு நிறுவனங்கள் வந்துள்ளன.

ரோஹ்டாக் ஐஐஎம்

ரோஹ்டாக் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில், நிதி நிறுவனங்களான முத்தூட் ஃபின்கார்ப், ஐடிஎஃப்சி மற்றும் ஆல்ஃபன் கேபிடல் போன்ற மற்றும் பல நிறுவனங்கள் முதல் முறையாக மாணவர்களைப் பணியில் அமர்த்த வந்துள்ளனர். சென்னையின் கிரேட் லேக்ஸ் மேலாண்மைக் கல்வி நிறுவனத்திலிருந்து அடோப், கிரான்ட் தார்ன்டன், லார்சென் மற்றும் தப்ரோ அத்துடன் ஷெல் உள்ளிட்ட புதிய ஆள்சேர்ப்பு நிறுவனங்களும், அதே சமயம் கோவா மேலாண்மைக் கல்வி நிறுவனத்திலிருந்து முதல் முறையாக மாணவர்களைப் பணியில் அமர்த்தும் ஐடிசி, வெல்ஸ்பன் மற்றும் அல்ஸ்டாம் உள்ளிட்ட ஆள்சேர்ப்பு நிறுவனங்களும் மாணவர்களை வேலைக்கு எடுத்துக் கொண்டுள்ளன.

ஸ்டார்டப் நிறுவனங்கள்

கல்லூரி வளாகங்களுக்கிடையே புதிய ஈ காமர்ஸ் நிறுவனங்கள் மாணவர்களைப் பணியில் அமர்த்தும் முறை பெருமளவில் வீழ்ச்சியடைந்திருக்கும் போதிலும், சில நிறுவனங்கள் தங்கள் இருப்பை உணர்த்தியுள்ளன.

பிளிப்கார்ட்

புகழ்பெற்ற நிறுவனங்களில் பிளிப்கார்ட் மட்டும் மாணவர்களைப் பணியில் அமர்த்துவதிலிருந்து விலகியிருக்கிறது. ஆனால் அமேசான் நிறுவனம் 15 முதல் 18% வரை மாணவர்களை ஆள்சேர்ப்பு முறையில் பணியில் அமர்த்துவது அதிகரித்துள்ளது. ஓலா கேப்ஸ் மற்றும் பேடிம் நிறுவனங்கள், ஐஐஎம் பெங்களூர் கல்லூரியிலிருந்து தலா மூன்று மாணவர்களைப் பணியில் அமர்த்தியிருக்கிறது.

உபர் மற்றும் ஸ்விக்கி

அதே சமயம் உபர் மற்றும் ஸ்விக்கி நிறுவனங்கள் தலா ஒரு மாணவரை வேலைக்குச் சேர்த்துள்ளது. கல்ச்சர் மெஷின் மற்றும் ப்ளூ ஸ்டோன் நிறுவனங்கள், ஐஐஎம் லக்னோ கல்லூரியிலிருந்து மாணவர்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளது. எக்ஸ்எல்ஆர்ஐ கல்லூரியிலிருந்து பேடிம், ரிவிகோ, யூபர், ஓயோ அத்துடன் ஷாப் க்ளூஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மாணவர்களைப் பணியில் அமர்த்திக் கொண்டுள்ளது. எம்டிஐ குர்கான் கல்லூரியிலிருந்து நெக்ஸ்டு எஜூகேஷன் நிறுவனம் ஏழு மாணவர்களையும், அதே சமயம் ரிவிகோ நிறுவனம் மூன்று பேரையும் பணியில் அமர்த்திக் கொண்டுள்ளது. ஐஐஎஃப்டி டெல்லி கல்லூரியிலிருந்து ஃபார்மீசி நிறுவனம் ஒரு மாணவரைப் பணியில் அமர்த்தி உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Having an MBA can make you rich in India even now

Having an MBA can make you rich in India even now
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns