என்பிஎஸ் கணக்கை துவங்குவது எப்படி..?

Posted By:
Subscribe to GoodReturns Tamil

எதிர்காலத்தில் வருமான பெறுவதற்காக நீங்கள் திட்டமிட்டிருந்தால் ஒரு தேசிய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்குவது புத்திசாலித்தனமான முடிவாகும்.

இது அரசாங்க ஆதரவு கொண்டது. மேலும் இது மலிவானது மட்டுமில்லாமல், இதில் நீங்கள் வரிச் சலுகைகளைப் பெற முடியும்.

நீங்கள் ஒரு என்பிஎஸ் கணக்கைத் தொடங்க திட்டமிட்டிருந்தால், உங்கள் ஆதாரைப் பயன்படுத்தி இணையத்திலும் தொடங்கலாம். மேலும் இணையத்தில் இல்லாமல் ஆப்லைனிலும் தொடங்கலாம்.

என்பிஎஸ் கணக்கை இணையத்திற்கு வெளியில் அதாவது ஆஃப்லைன் முறையில் தொடங்குவது எப்படி என்பதை பற்றிதான் இப்போது பார்க்கபோகிறோம்.

எங்கே துவங்கலாம்

வங்கிகள் போன்றவர்கள் இடைத்தரகர்களாக செயல்படுவோர் என்பிஎஸ் கணக்கைத் திறக்க உதவுகிறார்கள். பெரும்பாலும் அனைத்து பிரபலமான வங்கிகளும் என்பிஎஸ் கணக்கை துவங்கும் வசதிகளை வழங்குகிறது.

பதிவுப் படிவம்

ஒரு என்பிஎஸ் கணக்கைத் தொடங்க நீங்கள் சந்தாதாரரின் பதிவுப் படிவத்தை நிரப்ப வேண்டியது அவசியமாகும். நீங்கள் என்எஸ்டிஎல் இணையதளத்திலும் இந்தப் பதிவுப் படிவத்தைப் பெறலாம். உங்கள் பெயர், முகவரி, வங்கிக் கணக்கு எண், ஓய்வூதிய நிதி மேலாளர் தேர்வு மற்றும் சொத்து ஒதுக்கீடு போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும்

கேஒய்சி ஆவணங்கள்

இந்த திட்டத்தில் உங்கள் பங்களிப்பைச் செய்ய கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளரின் விவரங்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

நீங்கள் என்பிஎஸ் கணக்கை உங்கள் வங்கி வழியாக திறப்பதாக இருந்தால் கேஒய்சி ஆவணங்கள் தேவையில்லை.

 

பங்களிப்பு மற்றும் கட்டணம்

என்பிஎஸ் கணக்கைத் தொடங்க குறைந்தபட்ச பங்களிப்பு ரூ. 500 ஆகும். மேலும், ஒவ்வொரு வருடமும் நீங்கள் குறைந்தபட்சம் ரூ. 6000 முதலீடு செய்ய வேண்டும். இதை செய்வதற்கு கணக்கைத் தொடங்கும் வங்கி பதிவுக் கட்டணங்களை வசூலிக்கிறது. ஒரு முறைக் கட்டணம் ரூ. 125 ஆகும்.

ப்ரானை PRAN பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள்

ஒரு முறை நீங்கள் பங்களிப்பு செய்து முடித்தவுடன் ஒரு நிரந்தர ஓய்வூதியக் கணக்கு எண் எனப்படும் ப்ரான் உருவாக்கப்பட்டு உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இது ப்ரான் என்று அறியப்படுகிறது. இது என்பிஎஸ் திட்டத்தின் கீழ் விண்ணப்பதாரரிடம் இருக்கும் தனிப்பட்ட கையடக்க எண் ஆகும்.

ஆன்லைனில் உங்கள் கணக்கை நிர்வகியுங்கள்

உங்கள் வரவேற்பு கிட் பல கடவுச் சொற்களைக் கொண்டுள்ளது. அழைப்பு மையம் அல்லது மைய பதிவுப் பாதுகாப்பு நிறுவன (சிஆர்ஏ) இணையதளத்தின் வழியாக உங்கள் கணக்கை அணுக இந்தக் கடவுச் சொற்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How To Open NPS Account Offline?

How To Open NPS Account Offline?
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns