எஸ்பிஐ வங்கி தலைவர் அருந்ததி பட்டாசாரியா-வின் வெற்றி பாதை..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

இந்திய சுதந்திரம் பெற்றும் 70 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது, இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் பலவற்றைச் சாதித்துள்ளோம், பலவற்றை இழந்துள்ளோம்.

இப்படிப்பட்ட வேலையில் மும்பையில் நடைபெற்ற இரு கூட்டத்தில் எஸ்பிஐ வங்கி தலைவரான அருந்ததி பட்டாசாரியாவிடம் சுதந்திர இந்தியாவில் பெண்களுக்குப் பணியிடத்தில் நிலை எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளது என்று கேள்வி கேட்கப்பட்டது.

அந்தக் கேள்விக்கு அருந்ததி பட்டாசாரியா என்ன பதில் அளித்தார் என்பதை விளக்கமாக இங்குப் பார்ப்போம்.

கேள்வி

பணியிடங்களில் பெண்களின் நிலை பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் 15 வருடத்தில் இன்றளவில் பணிக்குச் சேர்பவர்களில் 45 சதவீதத்தினர் பணியை விட்டு எஸ்பிஐ வங்கியில் இருந்து வெளியேறுகின்றனர். இது ஒரு மிகப் பெரிய எண்ணிக்கை.

பிறப்பு

கொகத்தாவில் பெங்காலி குடும்பத்திற்கு 1956-ம் ஆண்டு மார்ச் மாதம் 18 தேதி பிறந்தார். இவரது தந்தை பிரியுட் குமார் முகர்ஜி பக்கோரோ ஸ்டீல் ஆலையில் பணிபுரிந்து வந்தார். தாய் கல்யாணி முக்கர்ஜி பொகரோவில் ஹோமியோபதி ஆலோசகராக இருந்தார். இவரது கணவர் ஐஐடி கோரக்பூர்
பல்கலைகழகத்தில் முன்னால் பேராசிரியர் ஆவார்.

படிப்பு

பொகரோவில் உள்ள புனித சேவியர் பள்ளியில் படித்த இவர் கல்கத்தாவின் லேடி ப்ரபோரன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் மற்றும் ஜடாவ்பூர் பல்கலைக்கழகத்தில் படித்தார்.

எஸ்பிஐ வங்கியில் துவக்கம்

அருந்ததி பட்டாசாரியா அவர்கள் 1977-ம் ஆண்டுத் தனது 22 வயதில் ப்ரொபேஷ்னரி அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். 40 வருடத்தில் பல முக்கியப் பதவிகளை இவர் நிர்வகித்துள்ளார். ஆனால் 15 வருடத்திற்குப் பிறகு தான் எஸ்பிஐ வங்கியில் இவர் கவனிக்கப்பட்டார்.

நியூ யார்க்கில் பணி

20 வருடம் வங்கி பணியாற்றிய பிறகு இவருக்கு நியூ யார்க் நகரத்தில் 1996-2000 வரை பணி செய்ய வாய்ப்புக் கிடைத்தது. பொதுவாக இது எஸ்பிஐ வங்கி ஊழியர்களுக்குக் கடைசிக் காலத்தில் தான் கிடைக்கும்.

தேசிய வங்கியின் தலைவர் பதவி

எஸ்பிஐ வங்கியின் தலைவராக 2014-ம் ஆண்டு முதன் முதலாக தேசிய வங்கியின் முதல் பெண் தலைவராக அருந்ததி பட்டாசாரியா நியமிக்கப்பட்டார்.

பெண்களுக்கு முக்கியத்துவம்

எஸ்பிஐ வங்கியில் பெண்களுக்கு மகப்பேறு காலம் அல்லது வீட்டில் உள்ள மூத்த குடிமக்களைக் கவனிப்பதற்காக இரண்டு ஆண்டுகள் வரை விடுமுறையினை வழங்கினார்.

எஸ்பிஐ வங்கியில் இருந்து விடுவிப்பு

எஸ்பிஐ பணியில் இருந்து 2016-ம் ஆண்டு ஓய்வு பெற இருந்த இவரின் பதவி காலம் 2017 அக்டோபர் மாதம் வரை நீட்டிப்பு செய்துள்ளது. தற்போது இவரது எஸ்பிஐ வங்கி தலைவர் பதவிக்கான காலம் முடிவடையும் நிலையில் புதிய தலைவர் யார் என்பதற்கான நேர்முகத் தேர்வுகளும் முடிவடைந்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Probationary Officer to SBI Bank Head Arundhati Bhattacharya's victory is the magic

Probationary Officer to SBI Bank Head Arundhati Bhattacharya's victory is the magic
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns