மோடியின் திட்டத்தால் கருப்பு பணம் வைத்திருந்த 18 லட்சம் நபர்கள் சிக்கினர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரிசர்வ் வங்கி ஆண்டு அறிக்கையை வெளியிட்டதில் பிரதமை மோடியின் பண மதிப்பு நீக்கம் குறித்து அதிர்ச்சியான தகவலை வெளியிட்டது.

 

இருந்தாலும், 18 லட்சம் நபர்கள் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் அவர்கள் செய்துள்ள பரிவர்த்தனைகளுக்கு வருமான வரி செலுத்தியதற்கும் முரண்பாடுகள் உள்ள து என்று வருமான வரித் துறை கண்டறிந்துள்ளது.

ஆப்ரேஷன் கிளீன் மனி

ஆப்ரேஷன் கிளீன் மனி

வருமான வரித் துறையினரால் கண்டறியப்பட்ட இந்த வரி ஏய்ப்பு செய்தவர்களுக்காக ஆப்ரேஷன் கிளீன் மனி என்ற திட்டம் 31 ஜனவரி முதல் துவங்கப்பட்டது.

ஆப்ரேஷன் கிளீன் மனி திட்டத்தின் கீழ் ஆராய்ந்ததில் 9.27 லட்சம் நபர்கள் 13.33 லட்சம் கணக்குகள் மூலம் 2.89 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்தது கண்டறியப்பட்டுள்ளது.

 பதில் அளிக்காத நபர்கள்

பதில் அளிக்காத நபர்கள்

மேலும் ஆப்ரேஷன் கிளீன் மனி திட்டத்தின் நோட்டிஸ்க்கு 1 லட்சம் நபர்கள் செவி சாய்க்கவில்லை. எனவே அவர்கள் அனைவரும் வருமான வரித் துறையின் கண்காணிப்பில் உள்ளனர்.

இது மட்டும் இல்லாமல் ஆப்ரேஷன் கிளீன் மனி திட்டம் மூலம் 5.56 லட்சம் புதிய வழக்குகளை வருமான வரித் துறை கண்டறிந்துள்ளது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை
 

பண மதிப்பு நீக்க நடவடிக்கை

இந்தத் தரவுகள் அனைத்தும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்த பிறகு வெளிவந்தது ஆகும். மேலும் இந்த மதிப்பு ரூபாய் நோட்டுகளில் இருந்த கல்ல நோட்டுகளும் குறைக்கப்பட்டன.

திரும்பப்பெறப்பட்ட நோட்டின் எண்ணிக்கை

திரும்பப்பெறப்பட்ட நோட்டின் எண்ணிக்கை

அதே நேரம் ஆர்பிஐ வங்கி 15.28 லட்சம் அல்லது 99 சதவீத பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வங்கி சேவைகள் மூலமாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது.

ஆர்பிஐ

ஆர்பிஐ

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு முதன் முறையாக ஆர்பிஐ வங்கி எவ்வளவு ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று அறிவித்துள்ளது.

திரும்ப வராத நோட்டுகளின் எண்ணிக்கை

திரும்ப வராத நோட்டுகளின் எண்ணிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி 15.44 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகளில் 16,050 கோடி ரூபாய் பழைய ரூபாய் நோட்டுகள் மட்டும் திரும்ப வந்து சேரவில்லை என்று கூறியுள்ளது.

ஆர்பிஐ செய்த செலவு

ஆர்பிஐ செய்த செலவு

சொற்ப தொகை அளவிலான கல்ல பணத்தினைக் குறைக்கவும், கருப்புப் பணத்தினைக் கண்டறியவும் ஆரிஐ வங்கி 7,965 கோடி ரூபாய் செலவு செய்து புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டுள்ளது. பிற நோட்டுகளை அச்சடிக்க 3,421 கோடி ரூபாயினை ஆர்பிஐ செலவு செய்துள்ளது.

வளர்ச்சி விகிதம்

வளர்ச்சி விகிதம்

மேலும் நமக்குக் கிடைத்துள்ள தகவலின் படி 0.1 சதவீத கருப்புப் பணத்தினைப் பிடிக்க மத்திய அரசு 1 சதவீத வளர்ச்சி விகிதத்தினை இழந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

After demonetisation 18 lakh people identified having Black money: IT dept

After demonetisation 18 lakh people identified having Black money: IT dept
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X