வருமான வரி தாக்கல் செய்யவில்லையா கவலை வேண்டாம்.. அக்டோபர் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு ஓர் நற்செய்தி. மத்திய அரசு வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியினை அக்டோபர் 31 வரை நீட்டித்துள்ளது.

 

வருமான வரி தாக்கல் செய்யும் போது 12 இலக்க ஆதார் எண் அல்லது ஆதார் விண்ணப்பம் செய்ததற்கான எண்ணை உள்ளிட வேண்டும்.

இணையதளம்

இணையதளம்

2016-2017 நிதி ஆண்டு மற்றும் 2017-2018/ நிதி ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளதால் https://incometaxindiaefiling.gov.in இணையதளத்தில் பதிவு செய்து எளிதாகத் தாக்கல் செய்துவிடலாம்.

படிவங்கள்

படிவங்கள்

மாத சம்பளம் வாங்கும் தனிநபரின் வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் இருக்கும் போது ஐடிஆர் 1 அல்லது ஐடிஆர் 4 படிவங்களை வருமான வரித் துறையினை இணையதளத்தில் பூர்த்திச் செய்து வரி தாக்கல் செய்யலாம்.

படிவம் 16
 

படிவம் 16

வருமான வரி தாக்கல் செய்யும் போது நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து படிவம் 16-ஐ வாங்கி வைத்துக்கொள்ளவும். ஒருவேலைப் படிவம் 16-ஐ பெற முடியவில்லை என்றால் படிவம் 26AS மூலமாக வரி விவரங்களைத் தாக்கல் செய்யலாம்.

கூடுதலாகச் செலுத்தப்பட்ட வரி

கூடுதலாகச் செலுத்தப்பட்ட வரி

கூடுதலாக வரிப் பிடித்தம் செய்யப்பட்டு இருக்கும் போது அல்லது முன்கூடிய செலுத்தப்பட்ட வரியில் கூடுதலாகச் செலுத்தி இருந்தால் வங்கி கணக்கு விவரங்களை அளிப்பதன் மூலம் நேரடியாக வங்கி கணக்கில் திரும்பப்பெற்றுக்கொள்ளலாம்.

என்ஆர்ஐ

என்ஆர்ஐ

வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் வருமான வரி செலுத்தும் போது கூடுதலாகச் செலுத்தப்பட்ட வரியை திரும்பப் பெற வேண்டும் என்றால் இந்தியாவில் வங்கி கணக்கு இல்லாத போது என்ஆர்ஈ வங்கி கணக்கை அளிக்க வேண்டும்.

வங்கி கணக்கு விவரங்கள்

வங்கி கணக்கு விவரங்கள்

வருமான வரி தாக்கல் செய்யும் போது வங்கி கணக்கு எண், பெயர், வங்கி கிளையின் IFSC குறியீடு உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை

பணமதிப்பு நீக்க நடவடிக்கை

நவம்பர் 8-ம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பை நீக்கிய பிறகு 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக யாரெல்லாம் 2016 டிசம்பர் 30 வரை டெபாசிட் செய்துள்ளார்களோ அந்த விவரங்களை அளிக்க வேண்டும்.

வரி விலக்குகள்

வரி விலக்குகள்

வரி விலக்க விவரங்களை 80 சி-ன் கீழ் சமர்ப்பிக்கலாம். விரி விலக்கத்தின் கீழ் முதலீடுகள், வீட்டு கடன், மெடிக்கல் காப்பீடு போன்றவற்றுக்கு விலக்க அளிக்கப்படுகின்றது.

தாமதமாக வரி செலுத்தினால் என்ன ஆகும்?

தாமதமாக வரி செலுத்தினால் என்ன ஆகும்?

தாமதமாக வருமான வரி செலுத்துவோருக்கு 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. இந்த அபராத விகிதம் உங்கள் வருவாய் வரம்பைப் பொருத்து மாறும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Didn't file income tax return? Don't worry, ITR filing date has been extended to October 31

Didn't file income tax return? Don't worry, ITR filing date has been extended to October 31
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X