இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய தலைவர் நந்தன் நீலகேனிக்கு சம்பளமே கிடையாதாம்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் புதிதாகச் சார்பற்ற புதிய தலைவராக நியமிக்கப்பட்ட நந்தன் நீலகேனி அவர்களுக்கு அதற்காகச் சம்பளம் ஏதும் கிடையாது என்று தெரிவித்துள்ளது.

மும்பை பங்கு சந்தைக்குத் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் நந்தன் நீலகேனி அவர்களைத் தலைவராக நியமித்து இருக்கின்றது என்றும் ஓய்வின் போது மறு சுழற்சிக்காக அவரைத் தலைவராக நியமித்துள்ளதால் சம்பளம் ஏதும் வழங்கப்படவில்லை என்று குறியுள்ளது.

இன்ஃபோசிஸ்-ல் நீலகேனி

நந்தன் நீலகேனி அவர்கள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் போர்டு உறுப்பினராக முதன் முறையாக 1981-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பின்னர் 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் போர்டு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

நந்தன் நீலகேனியின் கடைசிச் சம்பளம்

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் கடைசியாக 2010-ம் நிதி ஆண்டில் இயக்குனர் பதவி வகித்த போது 34 லட்சம் ரூபாய்ச் சம்பளமாகப் பெற்றார். அது மட்டும் இல்லாமல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இவரிடம் 2,13,83,480 பங்குகள் இருந்தன.

பிரவின் ராவிடம் உள்ள பங்குகள் எண்ணிக்கை

முதன்மை இயக்கு அலுவலராக இருந்து இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள பிரவின் ராவிடம் 5,55,520 பங்குகள் உள்ளன.

விஷால் ஷிக்கா

நிறுவனர்களிடம் இருந்து தொடர்ந்து பெற்று வந்த குடைச்சல் காரணத்தினால் ஆகஸ்ட் 18-ம் தேதி தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவன தலைவர் பதவியில் இருந்து விஷால் ஷிக்கா விலகியதை அடுத்து பிரவின் ராவ் அவர்கள் இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

பிரவின் ராவ் சம்பளம்

முதன்மை இயக்கு அலுவலர் பதவியில் இருந்து இடைக்கால நிர்வாக அதிகாரியாகப் பிரவின் ராவ் பொறுப்பேற்று இருந்தாலும் கூடுதலாக எந்தச் சம்பளமும் அவருக்கு அளிக்கப்படவில்லை.

பிரவின் ராவ அவர்கள் 2017-ம் ஆண்டு முதல் 7.8 கோடி சம்பளமும், 4 கோடி பங்குகளையும் பெற்றுள்ளார்.

 

வாக்கு

இன்ஃபோசிஸ் நிர்வாகம் சார்பற்ற தலைவராக நந்தன் நீலகேனி அவர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதற்கும், பங்குகளைத் திரும்ப வாங்க முடிவு செய்துள்ளதற்கும் தபால் வாக்கு முறையினை அறிவித்துள்ளது.

அந்த வாக்குப் பதவியில் இயக்குனராகச் சுந்தரம் அவர்களுக்கும், ராவ் அவர்கள் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்குப் பங்குதாரர்கள் வாக்களிக்க வேண்டும்.

 

எப்போது வாக்கு முறை துவங்கும்

இதற்கான இணையதள வாக்கு முறை மற்றும் தபால் வாக்கு முறை செப்டம்பர் மாதம் 8 தேதி காலை முதல் துவங்கும் என்றும் அது அக்டோபர் மாதம் 7-ம் தேதி மாலையுடன் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Nandan Nilekani will not receive any remuneration for his current post: Infosys

Nandan Nilekani will not receive any remuneration for his current post: Infosys
Story first published: Saturday, September 2, 2017, 17:05 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns