21 வங்கிகளை 15ஆகக் குறைக்கத் திட்டம்.. மத்திய அரசின் அடுத்த அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

டெல்லி: சமீபத்தில் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதன் கிளை வங்கிகள் அனைத்தையும் முழுமையாக இணைத்துக்கொண்டு ஒற்றை வங்கியாகச் செயல்படத் துவங்கியது. இதேபோல் தற்போது பஞ்சாப் நேஷ்னல் வங்கி, கனரா வங்கி மற்றும் பாங்க் ஆஃ பரோடா ஆகிய வங்கிகள் நாட்டில் இருக்கும் பிற வங்கிகளைக் கைப்பெற்ற உறுதியாக நிற்கிறது.

இந்த 3 வங்கிகளும் பிற வங்கிகளைக் கைப்பற்றுவதில் பல கோரிக்கைகள், தகுதிகள், மத்திய அரசின் ஒப்புதல்கள் எனப் பல இருந்தாலும். எதற்காக இந்த இணைப்பு நடவடிக்கையை, தற்போது மத்திய அரசு விடாப்பிடியாகக் கொண்டுள்ளது.?

எண்ணிக்கை குறைப்பு

எண்ணிக்கை குறைப்பு

மத்திய அரசு இந்தியாவில் இருக்கும் 21 பொதுத்துறை வங்கிகளை 15 வங்கிகளாகக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது. இந்த இணைப்பின் மூலம் நாட்டின் பொருளாதாரத் தரம் உயர்த்த முடியும் என்பது மத்திய அரசின் வாதம்.

நிதியமைச்சகம்

நிதியமைச்சகம்

இந்த இணைப்பின் மூலம் இந்திய சந்தையில் மட்டுமல்லாமல் உலகச் சந்தையிலும் போட்டி போட்டும் அளவிற்கு வலிமையான வங்கிகளை உருவாக்க முடியும் என நிதியமைச்சகம் நம்புகிறது.

எஸ்பிஐ இணைப்பின் மூலம் உலகின் சக்திவாய்ந்த வங்கிகளில் 50 இடத்திற்கு முதல் முறையாக நுழைந்த குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு நிதியுதவி

மத்திய அரசு நிதியுதவி

இந்திய சந்தையில் பஞ்சாப் நேஷ்னல் வங்கி, கனரா வங்கி மற்றும் பாங்க் ஆஃ பரோடா ஆகிய வங்கிகள் பொதுத்துறை வங்கிகளில் வலிமையாக இருக்கும் நிலையில், இந்த 3 வங்கிகள் மட்டுமே பிற பொதுத்துறை வங்கியை கைப்பற்ற கூடிய அளவிற்கு வலிமையாக உள்ளது.

ஆனால் இந்தக் கைப்பற்றலும், இதன் பின் வங்கி செயல்பாட்டில் நடக்கக் கூடிய மாற்றங்களை இயல்பாக வைத்திருக்கவும் மத்திய அரசு சுமார் 1000 கோடி ரூபாய் வங்கித்துறையில் முதலீடு செய்ய வேண்டும்.

1000 கோடி ரூபாய்

1000 கோடி ரூபாய்

மத்திய அரசு முதலீடு செய்ய வேண்டிய 1000 கோடி ரூபாய், தற்போது வருடாந்திர செலவுகளை விட 10 மடங்கு அதிகமாகும்.

இத்தகைய பெரிய முதலீட்டில் இப்படிப்பட்ட வங்கி இணைப்பை செய்யவே நிதியமைச்சகமும், மத்திய அரசும் திட்டமிட்டு வருகிறது. வங்கிகள் மத்தியிலான இணைப்பை எளிமையாகச் செய்துவிடமுடியுமா என்ன..?

முக்கியக் கோரிக்கை

முக்கியக் கோரிக்கை

வங்கிகள் இணைக்கப்படுவதிலும் கைப்பற்றுவதிலும் எவ்விதமான பிரச்சனையும் இல்லை ஆனால் சில முக்கியக் கோரிக்கைகளை ஞ்சாப் நேஷ்னல் வங்கி, கனரா வங்கி மற்றும் பாங்க் ஆஃ பரோடா ஆகிய வங்கிகள் முன்வைத்துள்ளது.

1. கைப்பற்றப்படும் வங்கி லாபகரமானதாக இருக்க வேண்டும்.
2. கைப்பற்றுதலுக்குப் பின்பு குறைந்தபட்சம் 3 வருடம் தற்போது இருக்கும் நிர்வாகமே முழுமையான பணிகளைச் செய்ய வேண்டும். இணைப்பும் வங்கிகள் செயல்பாடும் இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்பு நிர்வாகத்தை விட்டுவிடலாம்.
3. பிற வங்கியை கைப்பற்ற வேண்டுமென்றால் மத்திய அரசு எங்களுக்கு நிதியுதவி செய்ய வேண்டும்.

எனப் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

முறைசாரா கூட்டம்

முறைசாரா கூட்டம்

இதுகுறித்து நிதியமைச்சகம் நடத்திய முக்கியக் கூட்டத்தில் பொதுத்துறை வங்கி தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதன் மூலம் அடுத்தச் சில நாட்களில் மத்திய அரசின் இக்கோரிக்கைகளின் நிலைப்பாடு தெரியவரும்.

ஒப்புதல்கள்

ஒப்புதல்கள்

ஆகஸ்ட் மாத கடைசி வாரத்தில் மத்திய அரசு வங்கிகளுக்குத் தெரிவிக்கப்பட்ட அறிவிப்பில், வங்கியைக் கைப்பற்ற வேண்டுமென்றால், முதல் வங்கி நிர்வாகக் குழு கோரிக்கை வைத்து, அதனை மத்திய அமைச்சர்கள் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்து எப்பசி இணைக்கப்படவேண்டும் என்பதையும் தெரிவிப்பார்கள் எனத் தெரிவித்தது.

ஆக மத்திய அரசு வங்கி இணைப்புகளில் முழுமையான ஒத்துழைப்பை அளிக்க முடிவு செய்துள்ளது.

நஷ்டம்

நஷ்டம்

2016-17ஆம் நிதியாண்டின் 9 பொதுத்துறை வங்கிகள் சுமார் 18,066 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை அறிவித்தது. மேலும் 6 வங்கிகள் வர்த்தக விரிவாக்கத்திற்கான ஒப்புதலைப் பெற முடியாத அளவிற்குத் தகுதிகளைக் கொண்டுள்ளது.

வராக் கடன்

வராக் கடன்

இந்திய வங்கித்துறையில் தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் வராக்கடன் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 7.8 சதவீதமாகவும், கனரா வங்கியில் 6.3 சதவீதமாகவும் மார்ச் 2017இல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

திவால்..

திவால்..

இதே நிலையைத் தொடர்ந்தால் சில வங்கிகள் திவால் ஆகும் நிலைக்குக் கூடத் தள்ளப்படலாம் என்பது மத்திய அரசின் கணிப்பு. வங்கிகள் திவால் ஆனால் இந்திய பொருளாதாரம் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படும்.

இத்தகைய மோசமான சூழ்நிலையைத் தடுக்கவே நிதியமைச்சகம் வங்கி இணைப்புத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

வெறு..." data-gal-src="http:///img/600x100/2017/09/5bike-03-1504443594.jpg">
பிஸ்னஸ் ஐடியா

பிஸ்னஸ் ஐடியா

வெறும் 70,000 ரூபாய் முதலீட்டில் சூப்பரான பிஸ்னஸ் ஐடியா..வெறும் 70,000 ரூபாய் முதலீட்டில் சூப்பரான பிஸ்னஸ் ஐடியா..

புதிய ஃபார்முலா..!

புதிய ஃபார்முலா..!

100 ரூபாயில் கோடிஸ்வரர் ஆகும் வாய்ப்பு.. இளைஞர்களை கவரும் புதிய ஃபார்முலா..! 100 ரூபாயில் கோடிஸ்வரர் ஆகும் வாய்ப்பு.. இளைஞர்களை கவரும் புதிய ஃபார்முலா..!

யூடியூப் தமிழர்கள்..

யூடியூப் தமிழர்கள்..

யூடியூப் சேனல்கள் மூலம் லட்ச கணக்கில் சம்பாதிக்கும் தமிழர்கள்..!யூடியூப் சேனல்கள் மூலம் லட்ச கணக்கில் சம்பாதிக்கும் தமிழர்கள்..!

பிக்ஸட் டெபாசிட்

பிக்ஸட் டெபாசிட்

வருமான வரி துறையின் அதிரடியால் மோசடியாளர்கள் கவலை.. பிக்ஸட் டெபாசிட்-இல் வரி ஏய்ப்பு..! வருமான வரி துறையின் அதிரடியால் மோசடியாளர்கள் கவலை.. பிக்ஸட் டெபாசிட்-இல் வரி ஏய்ப்பு..!

ஜாக்பாட்

ஜாக்பாட்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. இனி குறைந்தபட்ச சம்பளமே 21,000 ரூபாயாம்..! மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. இனி குறைந்தபட்ச சம்பளமே 21,000 ரூபாயாம்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Government plan to reduce PSU banks from 21 to 15 through consolidation

Government plan to reduce PSU banks from 21 to 15 through consolidation
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X