அமெரிக்காவை விட்டுத்தள்ளுங்க.. கனடா சிட்டிசன்ஷிப் வாங்குவது எப்படின்னு தெரிஞ்சிகோங்க..!

Posted By:
Subscribe to GoodReturns Tamil
அமெரிக்கா சென்று குடியுரிமை பெற வேண்டும் என்று திட்டமிட்டுள்ளீர்களா? ஆமாம் என்றால் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் கடுமையான விதிகளை விதித்து வருவதால் விசா பெறுவது கடினமாகும். கவலை வேண்டாம்! அமெரிக்காவை விடவும் சிறப்பான வாழ்வியல் கொண்ட இடம் ஒன்று உள்ளது. அதுவும் அமெரிக்காவிற்கு அருகிலேயே..

ஆம் கனடா தான். இங்கு மருத்துவம் இலவசம் மற்றும் இங்குள்ள மக்கள் நட்பாகப் பழகுவார்கள். அதிலும் முக்கியமாக இந்தியர்கள் மிகவும் அதிகம்.

6 வருடம்

கனடாவில் குடியுரிமை பெறுவது சற்று கடினமாகும். ஏனென்றால் ஒருவர் 6 வருடங்கள் வரை கனடாவில் இருந்தால் தான் வெளிநாட்டவருக்குக் குடியுரிமை வழங்கப்படும்.

 

 

ஏற்கனவே உங்களுக்குக் கனடிய குடியுரிமை இருக்கின்றதா?

நீங்கள் ஏற்கனவே கனடிய குடியுரிமை பெற்றவரா என்று தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் கடாவில் பிறக்கவில்லை என்றாலும் உங்களுக்குக் கனடா குடியுரிமை அளிக்க வாய்ப்புள்ளது. அது உங்களது பெற்றோரை பொருத்தத்து ஆகும்.

ஒருவேலை நீங்கள் ரகசியமாகவும் வேறு நாட்டில் இருக்க வாய்ப்புகள் உண்டு.

 

18 வயது

உங்களுக்கு 18 வயது நிரம்பவில்லை என்றால் கனடா குடியுரிமை பெறுவது கடினம்.

மைனர்களுக்குத் தங்களது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வமான காப்பாளர் தான் விண்ணப்பத்தினை நிரப்ப வேண்டும். விண்ணப்பிக்கும் போது பெற்றோர் அல்லது காப்பாளருக்கும் சேர்ந்து குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

 

பெற்றோர் ஏன் விண்ணப்பிக்க வேண்டும்?

பெற்றோர் ஏற்கனவே கனடா குடியுரிமை பெற்று இருக்க வேண்டும். இல்லை என்றால் குடியுரிமை பெற விண்ணப்பிக்க வேண்டும்.

திறமையான குடிபுகுபவர்

கனடாவில் வேகமாகக் குடியுரிமை பெறுவதற்கு எக்ஸ்பிரஸ் எண்ட்ரி வழிகள் உள்ளன. இதன் கீழ் திறமையான ஊழியர்களுக்கு அவர்களது திறமையின் கீழ் வேலையும் அளிக்கப்படும்.

எக்ஸ்பிரஸ் எண்டிரி

எக்ஸ்பிரஸ் எண்டிரி மூலம் வருபவர்களுக்கு அவர்களது அறிவு, வேலை மற்றும் பிற விண்ணப்பதாரர்களைப் பொருத்து குறிப்பிட்ட மதிப்பெண்கள் அளிக்கப்படும்.

மதிப்பெண்கள்

டாப் மதிப்பெண்கள் பெறுபவர்கள் நிரந்தரக் குடியுரிமை பெற்றுக்கொள்ள வரவேற்கப்படுவார்கள்.

 

 

கனடாவில் ஒரு நிரந்தர வசிப்பிடத்தைக் கொண்டுள்ளீர்களா

கனடாவில் சொந்த குடியிருப்பைப் பெறப் பல வழிகள் உள்ளன. சொந்த வீடு வைத்துள்ளவர்கள் சிறப்புத் தொழில் முனைவோர் வழியைப் பின்பற்றி ஒரு குடும்ப அங்கத்தவரிடமிருந்து உதவி பெறலாம் அல்லது சிறப்புக் குடியேற்றத் தேவைகள் கொண்ட கியூபெக் வழியாகச் செல்லலாம்.

இலவச சுகாதாரம் மற்றும் பல

நிரந்தரக் குடியிருப்பாளர்கள் இலவச சுகாதாரப் பாதுகாப்பிற்கு உரிமை உடையவர்கள் மற்றும் கடாவில் எங்கு வெண்டும் என்றாலும் வேலை செய்யலாம், படிக்கலாம் மற்றும் பயணம் செய்யலாம். ஆனால் தேர்தலின் போது வாக்களிக்க முடியாது, சொந்தமாக நிறுவனம் ஒன்றை நடத்த முடியாது அல்லது அதிகப் பாதுகாப்பு சமந்தமான வேலைகளைச் செய்ய முடியாது.

வசிக்க நோக்கம் உள்ளதை உறுதி செய்யவும்

நிரந்தர வதிவுரிமை பெற அழைப்பைப் பெறும் போது கனடாவில் வாழ்வதற்கான திட்டத்தினை உறுதி செய்ய வேண்டும்.

வரம்புகள்

நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் 5 வருடத்தில் 2 வருடங்கள் குறைந்தது கனடாவில் தங்க வேண்டும். இரண்டு வருடம் வரை தங்கவில்லை என்றால் நிரந்தர வீடு நிலையினை இலக்க நேரிடும்.

இவர்களுக்கு மட்டும் விலக்கு

ஒருவேலை கனடாவில் வசிக்கவில்லை என்றால் கடாவில் அரசு சார்ந்த வேலையில் வெளிநாடுகளில் பணிபுரியவேண்டும்.

6 வருடம் அந்தக் குடியிருப்பில் இருக்க வேண்டும்

நிரந்தரக் குடியிருப்பாளர்கள் எப்போதும் குடிமக்களாக மாறமாட்டார்கள். குடியுரிமைக்கான விதிகள் அதிகமாக உள்ளது.

நிரந்தரக் குடியிருப்பு வைத்துள்ளவர்கள் 6 வருடத்தில் குறைந்தது 1,460 நாட்கள் கனடாவில் வசித்து இருந்து இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

 

குறைந்தது எத்தனை நாட்கள் கனடாவில் இருந்திருக்க வேண்டும்?

6 வருடத்திற்குப் பிறகு விண்ணப்பிக்கும் முன் 6 வருடத்தில் 4 வருடம் வரை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 183 நாட்கள் கடாவில் இருந்து இருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் சொன்னால், கனடாவில் நீங்கள் வசித்த நேரம் ஒப்பீட்டளவில் சீரானதாக இருக்க வேண்டும்.

வருமான வரி

6 வருடத்தில் 4 வருடம் வரை வருமான வரி செலுத்தி இருக்க வேண்டும். ஏன் என்றால் உங்கள் வேலையின் முக்கியத்துவத்தினை அவர்கள் அரிவதற்காக.

ஆங்கிலம் அல்லது பிரெஞ்ச்

கடாவில் இரண்டு மொழிகள் அலுவலக மொழிகளாக உள்ளது. அவை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் ஆகும். குடியுரிமை பெற இரண்டில் ஒரு மொழியில் தங்கு தடையின்றி இலக்கணம், திசைகள் மற்றும் தேவையான அளவு திறன் படைத்தவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பித்த பிறகு உங்கள் மொழி அறிவை ஆராய்ந்து குடியுரிமை வழங்குவது அதிகாரிகள் கைகளில் தான் உள்ளது.

 

கனடாவைப் பற்றித் தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டும்

கனடாவின் வரலாறு, மதிப்புகள், நிறுவனங்கள் மற்றும் சின்னங்களைப் பற்றி விண்ணப்பதாரர்களுக்கு ஒரு முறையான வினாடி வினா தேர்வுக்கு விடையளிக்க வேண்டும்.

தேர்வுக்கான வயது

இந்தத் தேர்வை எழுத 16 முதல் 64 வயது வரை நிரப்பி இருக்க வேண்டும். இது எழுத்துப்பூர்வமான தேர்வு என்றாலும் அதிகாரிகள் வாய்வழியாகவும் கேள்வியைக் கேட்க வாய்ப்புண்டு.

எதனால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்

கனடாவில் இருக்கும் போது 4 வருடத்திற்குள் குற்ற வழக்குகள் ஏதேனும் பதிவு செய்யப்பட்டு இருந்தால் அல்லது குற்றம் செய்ய முயற்சி செய்து இருந்ததாக வழக்குப் பதிய பட்டு இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How to move to Canada and become a Canadian citizen

How to move to Canada and become a Canadian citizen | அமெரிக்காவை விட்டுத்தள்ளுங்க.. கனடா சிட்டிசன்ஷிப் வாங்குவது எப்படின்னு தெரிஞ்சிகோங்க..!
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns