பிஎஸ்என்எல் மொபைல் எண்ணுடன் ஆதார் கார்டை இணைப்பது எப்படி..?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

உச்ச நீதிமன்ற உத்தரவின் படி மத்திய அரசு அனைத்து மொபைல் போன் வாடிக்கையாளர்களும் தங்களது சேவை வழங்குநரிடம் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

எனவே மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண்ணை சமர்ப்பிக்குமாறு எஸ்எம்எஸ் மூலமாகக் கேட்டு வருகின்றது.

பிஎஸ்என்எல் மட்டும் இல்லாமல் பிற நெட்வொர்க்குகளும் இந்த இணைப்பைச் செய்ய வேண்டிக் கேட்டு வருகின்றன. பொதுவாக அனைத்து நெட்வொர்க் சந்தாதார்களும் சேவை வழங்கும் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம், ரிடெய்ல் கடைகள் அல்லது டீலர்களை அணுகி இந்த இணைப்பைச் செய்யலாம்.

தற்போது பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் எப்படித் தங்களது மொபைல் எண்ணுடன் இ-சேவை மூலமாக இணைப்பது என்ற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.

மின்னணு முறை

ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைப்பதற்குப் பிஎஸ்என்எல் நிறுவனம் இ-கேஒய்சி சேவையினை வழங்குகின்றது. உங்கள் பிஎஸ்என்எல் மொபைல் எண் சேவை துண்டிக்கப்படும் முன் இங்கு உள்ள விதிகளை எல்லாம் பின்பற்றி எளிதாக இணைப்பைச் செய்யலாம்.

இணைப்பிற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டியவை

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது ரிடெய்ல் கடை போன்றவற்றுக்குச் செல்ல வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ நபரால் பையோமெட்ரிக் கை விரல் ரேகை பதிவுடன் இணைப்பைச் செய்ய முடியும்.

படி 1

பிஎஸ்என்எல் செவை மையத்திற்கு ஆதார் எண் மற்றும் பிஎஸ்என்எல் மொபைல் எண்ணுடன் செல்லவும். அது பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது பிஎஸ்என்எல் ரிடெய்லர் கடை என ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம்.

படி 2

அங்கு உள்ள பிஎஸ்என்எல் முகவரிடம் உங்களது பிஎஸ்என்எல் எண்ணை உள்ளிட வேண்டும். உங்கள் மொபைல் எண்ணை அங்கு உள்ள கணினியில் உள்ளிட்ட உடன் உங்களது மொபைல் எண்ணுக்கு 4 இலக்க சரிபார்ப்பு குறியீடு அனுப்பப்படும்.

படி 3

உங்கள் மொபைல் எண்ணிற்கு வந்த 4 இலக்க குறியீட்டு எண்ணை பிஎஸ்என்எல் முகவரிடம் அளிக்க வேண்டும். குறியீடு எண்ணை பெற்ற பிறகு அவர் உங்களது கை விரல் ரேகை உள்ளிட்ட விவரங்களைப் பெறுவார். பின்னர் அங்கு உள்ள திரையில் உங்களது விவரங்கள் அனைத்தும் காண்பிக்கப்படும்.

படி 4

திரையில் காண்பிக்கப்படும் விவரங்களில் உள்ள உங்களது முகவரி போன்ற விவரங்களைச் சரிபார்த்து உறுதி செய்ய வெண்டும். அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்த்து உறுதி செய்த பிறகு கைவிரல் ரேகையினை மீண்டும் உள்ளிட வேண்டும். அதனுடன் இணைப்பு முடியும்.

படி 5

இணைப்பு வெற்றிகரமாக முடிவடைந்த உடன் 24 மணி நேரத்திற்குப் பிறகு உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அந்தத் தகவலுக்கு ‘அம்' அல்லது ‘இல்லை' என்று நீங்கள் பதில் அளிக்க வேண்டும்.

சரிபார்ப்பு

இதுபோன்ற எந்தத் தகவலும் உங்கள் மொபைல் எண்ணிற்கு வராத போது ‘ஆம்' என்றும் ஆதார் வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டது. ஒருவேலை ‘இல்லை'என்றால் மீண்டும் பதிவு செய்ய வேண்டும். மீண்டும் பதிவு செய்தல் என்பது பாதுகாப்பினை கருதி அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அனுமதி அளிக்கப்படுகின்றது.

நிலையை எப்படிச் சரிபார்ப்பது?

பிஎஸ்என்எல் எண்ணுடன் ஆதார் இணைப்பு செய்யப்பட்டுவிட்டதா என்று அறிந்துகொள்ள 53734 என்ற எண்ணுக்கு 'REV NAME' என்று தகவல் அனுப்புவதன் மூலம் சரிபார்ப்பை செய்ய முடியும்.

புதிய பேமெண்ட் வங்கி

1.5 லட்சம் கிளைகள், 3 லட்சம் ஊழியர்களுடன் பிரம்மாண்டமாக துவங்கும் புதிய பேமெண்ட் வங்கி..!

புல்லட் ரயில்

ரூ.88,000 கோடி கடன் கொடுத்து ஜப்பான், இந்தியாவில் புல்லட் ரயில் அமைக்க இதுதான் காரணம்..!

உஷாரான இந்தியர்கள்

சுவிஸ் வங்கிகளில் இருந்து பணம் மாயம்.. உஷாரான இந்தியர்கள்..!

ஆற்று மணல்

ஆற்று மணலை இறக்குமதி செய்யும் அரபு நாடுகள்.. எங்கு போய் முடியபோகிறதோ..?!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How To Link Aadhaar With Your BSNL Mobile Number in Tamil?

How To Link Aadhaar With Your BSNL Mobile Number in Tamil?
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns