பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சிகள் இந்தியாவில் பிரபலமாக வருவதை எதிர்க்கும் ஆர்பிஐ அன்மையில் அதற்கு நிகரான அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியை வெளியிடம் திட்டமிட்டு வருவதாகத் தமிழ் குட்ரிட்டர்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டு இருந்தது.
இந்தியாவின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கிரிப்டோ கரன்சியை வெளியிடுவது குறித்து மத்திய அரசு குழு ஒன்றை அமைத்து விவாதித்து வருகின்றது என்றும், அது இந்திய ரூபாய்க்கு மாற்றாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
மேலும் நம்க்கு கிடைத்துள்ள தகவலின் படி இந்திய அரசு வெளியிட இருக்கும் அந்த டிஜிட்டல் கரன்சிக்கு 'லக்ஷ்மி' என்று பெயரிட இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
அரசு கட்டுப்பாட்டில் இல்லாத பிட்காயின் போன்ற கரன்சிகளில் பல பிரச்சனைகள் உள்ளது என்றும் அதில் முதலீடு செய்வதைக் குறைக்க ஃபியட் டிஜிட்டல் கரன்சி ஒன்றை வெளியிடத் திட்டமிட்டு வருவதாக ஆர்பிஐ தலைவர் சுதர்சன் சென் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்தார்.
இந்தியாவில் புதிதாக டிஜிட்டல் கரன்சி என்ற ஒன்றை அறிமுகம் செய்ய நாணய சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.