இ-காமர்ஸ் நிறுவனங்கள் விழாக்காலம் துவங்கியதை அடுத்து ஆஃபர்களை அள்ளி வீசி வருகின்றன. அதன் ஒரு கட்டமாக அமேசானின் இந்திய பிரிவு எச்டிஎப்சி வங்கியுடன் சேர்ந்து மூன்று மாத ஈஎம்ஐ விடுமுறையினை அறிவித்துள்ளது.
இது என்னடா? ஈஎம்ஐ விடுமுறை என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. இப்போது வங்கும் பொருளுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு ஈஎம்ஐ துவங்கும். அது வரை ஒரு ரூபாய் கூடச் செலுத்தாமல் நீங்கள் வாங்கும் பொருளை பயன்படுத்தலாம்.

சலுகை காலம்
இப்போது பொருளை வாங்கிவிட்டு அடுத்த வருடம் முதல் பணம் செலுத்தும் ஆஃபரில் பொருட்களை 2017 செப்டம்பர் 20 பிற்பகல் 12 மணி முதல் வாங்கிக் குவிக்கலாம். இந்தச் சலுகைகள் 30 ம் தேதி வரை வழங்கப்படும்.

அமேசான் கிரேட் இந்தியன் பிரைம் சேல்
அமேசான் தளத்தில் பிரைம் வாடிக்கையாளர்களாக உள்ளவர்களுக்குச் செப்டம்பர் 20 முதலும் பிரைம் அல்லா வாடிக்கையாளர்களுக்குச் செப்டம்ர் 21 முதல் 24 வரையிலும் ஆஃபர்களில் பொருட்களை வாங்க முடியும்.

எச்டிஎப்சி வாடிக்கையாளர்கள்
அமேசான் இணைதளத்தில் பொருட்களை வாங்கிய பிறகு கட்டணம் செலுத்தும் போது 3 அல்லது 6 மாத காலத் தவணையினைத் தேர்வு செய்ய வேண்டும். தகுதி உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் 3 மாத தவனை விடுமுறை அளிக்கப்படும். எச்டிஎப்சி வங்கி ரிடெய்ல் கிரெட்ட் கார்டு பயனர்கள் மட்டுமே இந்தச் சலுகையினை அனுபவிக்க முடியும்.

கிரெடிட் வரம்பு
இந்தச் சலுகைகளில் பொருட்களை வாங்கும் போது கிரெட்ட் கார்டில் தேவையான அளவு கடன் பெறுவதற்கான கிரெடிட் வரம்பு இருக்க வேண்டும்.

குறைந்தபட்ச பரிவர்தனை அளவு
இப்போதே வாங்குங்கள்.. அடுத்த வருடம் பணம் கொடுங்கள்.. என்ற அமேசனின் அதிரடி விழாக் காலச் சலுகையில் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் நீங்கள் வாங்கும் பொருட்களின் விலை குறைந்தபட்சம் 3,000 ரூபாயாக இருக்க வேண்டும்.

தவனை வரம்பு
ஈஎம்ஐ தேர்வு செய்யும் போது 3 மற்றும் 6 மாத தவணையினைத் தேர்வு செய்யும் போது மட்டுமே இந்தச் சலுகை கிடைக்கும்.

பை பேக் ஆஃபர்
பை பேக் ஆஃபர் திட்டம் மூலம் பொருட்களை எக்ஸ்சேஞ் செய்யும் போதும் 3 மாத ஈஎம்ஐ சலுகையைப் பெற முடியும்.

பொருட்களைத் திருப்பி அளித்தல்
இதுவே வாங்கிய பொருளை ஏதேனும் காரணங்களுக்காகத் திருப்பி அளிக்கும் போது இந்தச் சலுகைகள் செயல்படாது.