சென்னையில் தயாரிக்கப்பட்ட விஸ்டாடோம் ரயில் பெட்டிகளின் அம்சங்கள் பற்றித் தெரியுமா?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

இந்திய ரயில்வேயின் வரலாற்றில் முதல் முறையாக ரயில் பயணிகளின் அனுபவத்தினைக் கூட்டுவதற்காக மத்திய ரயில்வே விஸ்டாடோம் என்ற புதிய ரயில் பெட்டிகளை அறிமுகம் செய்துள்ளது.

இந்த விஸ்டாடோம் பெட்டிகளை மும்பை - கோவா வழித்தடத்தில் திங்கட்கிழமை முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ்

மும்பை தாதர் ரயில் நிலையத்தில் இருந்து கோவாவின் மடகான் வரை செல்லும் ஜன் சாதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் முழுமையாகக் கண்ணாடி கூரையுடன் விஸ்டாடோம் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அம்சங்கள்

விஸ்டாடோம் ரயில் பெட்டியில் சுற்றும் நாற்காலி, எல்சிடி திரை, கண்ணாடியால் செய்யப்பட்ட கூரை மற்றும் மிகப் பெரிய திரை கொண்ட ஜன்னல் கண்ணடிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

செலவு

40 நபர்கள் அமரக்கூடிய இந்த ரயில் பெட்டியை தயாரிக்கும் செலவு 3.38 கொடி ரூபாயாகும். 360 டிகிரியிலும் இந்தச் சீட்டுகளைத் திருப்ப முடியும் என்பதும் ஒரு முக்கிய அம்சமாகும்.

ரயிலின் பயண நாட்கள்

பருவமழை காலங்களில் இந்த ரயில் வாரத்திற்கு மூன்று நாட்களும், பருவமழை முடிந்த பிறகு வாரத்திற்கு 5 நாட்களும் இயக்கப்படுகின்றது.

பயண நேரம்

ஜன் சதாப்தி ரயிலில் தாதர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 5:25 மணிக்குப் புறப்பட்டுக் கோவாவின் மடகான் ரயில் நிலையத்தினை 4 மணிக்குச் சென்றடைகின்றது.

எங்குத் தயாரிக்கப்பட்டது?

விஸ்டாடோம் ரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள இண்டக்ரல் கோச் பேக்ட்ரியில் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் கட்டணங்கள் ஏதும் இல்லை

சதாப்தி ரயிலில் உணவு இல்லாமல் பயணிக்கும் எக்சிகியூட்டிவ் வகுப்புக் கட்டணம் தான் இந்தப் பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கும் வசூலிக்கப்படுகின்றது. ஜிஎஸ்டி மற்றும் பிற கட்டணங்கள் செலுத்த வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ICF Vistadome coach makes Mumbai to Goa journey more spectacular

ICF Vistadome coach makes Mumbai to Goa journey more spectacular
Story first published: Thursday, September 21, 2017, 9:00 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns