இது தான் இந்தியர்களின் நம்பிக்கை வாய்ந்த வங்கி.. பிற வங்கிகளின் நிலை என்ன?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

நிதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் போன்றவற்றை ஆய்வு செய்யும் நிறுவனம் ஒன்று உலகளவில் 500-க்கு மேற்பட்ட பிராண்டுகளை ஆய்வு செய்து வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியர்களின் நம்பிக்கை வாய்ந்த மற்றும் பிரபலமான வங்கிகளில் எஸ்பிஐ முதல் இடத்தினைப் பிடித்துள்ளது.

ஆய்வின் முடிவில் நம்பிக்கை மற்றும் புகழ், வாடிக்கையாளர்களுக்கான விசுவாசம், பிற வாங்கிகளுக்குக் கணக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் எந்த வங்கி தேர்வை செய்வீர்கள் போன்ற கேள்வியின் போது 86.3 சதவீதத்தினர் எஸ்பிஐ வங்கியை நம்பிக்கையாகத் தேர்வு செய்துள்ளனர்.

நம்பகத்தன்மை

அதிக நம்பகத்தன்மை உள்ள வங்கிகளில் எஸ்பிஐ, எச்டிஎப்சி மற்றும் செண்டர் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

பிரபலமான வங்கி

இதுவே பிரபலமான வங்கி சேவை என்றபோது எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எசிடிஎப்சி வங்கி என வரிசை நீள்கின்றது.

எஸ்பிஐ தேர்வு செய்யக் காரணம்

பிரபலமான வங்கி என்ற போது 21.4 சதவீத மக்கள் எஸ்பிஐ வங்கியைத் தேர்வு செய்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என்ற கேள்விக்குப் பிற வங்கிகளின் சேவைகள் எங்களை மகிழ்ச்சிகரமாக வைத்துக்கொள்ளவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

எஸ்பிஐ வங்கியின் வெற்றிக்கான ரகசியம்

வாடிக்கையாளர்களுக்கு விசுவாசமாக இருப்பதில் கவனம் செலுத்துவது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு வழிவகுத்துள்ளது என்றும், வாடிக்கையாளர்களுக்குத் தேவையான திட்டங்களை வெளியிடுதல், தங்களின் பரிவர்த்தனைகளில் வெளிப்படையாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் இருப்பதன் மூலம் இந்த இடத்தினை நாங்கள் பிடித்துள்ளோம் என்று எஸ்பிஐ வங்கியின் துணை நிர்வாக இயக்குனர் நீரஜ் தெரிவித்தார்.

விசுவாசம்

வங்கி சேவையில் வாடிக்கையாளர்களுக்கு விசுவாசமாக இருப்பதில் சிடி வங்கி முதல் இடத்தினைப் பிடித்துள்ளது, இந்த வங்கி கிளைகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் பிற வங்கிகளில் கணக்கை துவங்க விரும்புவதில்லை.

பிற பொதுத் துறை வங்கிகள்

பொதுத் துறை வங்கி சேவையில் எஸ்பிஐ வங்கிக்கு அடுத்து கணரா வங்கி வாடிக்கையாளர்களுக்குத் திருப்திகரமான சேவையினை அளிக்கின்றது.

கடைசி இடம் பிடித்த வங்கிகள்

விசுவாசத்தினைப் பொறுத்தவரையில் ஓரியண்டல் வங்கி மற்றும் யூகோ வங்கி இரண்டும் கடைசி இடத்தினைப் பிடித்துள்ளன.

ஆய்வில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை

ஒவ்வொரு சந்தையிலும் 850 பேர் சராசரியாக என 22 சந்தைகளில் 19,000 க்கும் அதிகமான மக்களின் பதில்களைக் கொண்டு இந்தச் சர்வேயின் முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கின்றது.

உலக நாடுகளுடன் ஒரு ஒப்பீடு

சுவிச்சர்லாந்து, அமெரிக்கா, பிரட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்திய வங்கி சந்தை வாடிக்கையாளர்களுக்கு வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருப்பது தெரியவந்துள்ளது.

துபாயில் வங்கி சேவை

துபாயில் வங்கி சேவையினைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் போட்டியை பொருத்து வங்கி கணக்கை மாற்ற விரும்புவதாக 27.5 சதவீதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் வங்கி கணக்கை எந்தக் காரணத்திற்காக மாற்றுகின்றார்கள்?

இதேப்போன்று இந்தியாவில் சேவை திருப்தி அளிக்காத போது வங்கி கணக்கை பிற வங்கிகளுக்கு மாற்ற விரும்புவதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s most trusted and popular bank is SBI. What about other banks?

India’s most trusted and popular bank is SBI. What about other banks?
Story first published: Friday, September 22, 2017, 15:00 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns