ஆம்வே நிறுவனத்தின் வெற்றியும் தோல்வியும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டைமெக்ஸ் கடிகாரங்களின் மறக்கமுடியாத மற்றும் வெற்றிகரமான 1970ம் ஆண்டின் மார்க்கெட்டிங் கோஷத்தை, நாம் ஆம்வே நிறுவனத்திற்கும் எளிதில் பயன்படுத்தப்படலாம்.

 

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகும் பல நிலை வணிகத்தில் ஆம்வே நிறுவனம் உலகின் மிகப் பிரபலமான ஒன்றாக விளங்குகின்றது.

1959 முதல்..

1959 முதல்..

இந்த நிறுவனத்தின் 2016 ம் ஆண்டிற்கான வருவாய் சுமார் 8.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கின்றது. இந்த நிறுவனம் 1959 ஆம் ஆண்டில் தொடக்கப்பட்டது முதல் ஒவ்வொரு வருடமும் அதாவது ஏறக்குறைய ஒவ்வொரு வருடமும் கடினமான சூழ்நிலைகளைக் கடந்து வந்துள்ளது.

வழக்குகள்

வழக்குகள்

சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிறுவனம் ஒரு சட்டவிரோத பிரமிடு திட்டத்திற்காக ஃபெடரல் டிரேட் கமிஷன் (FTC) அமைப்பால் விசாரிக்கப்பட்டது.

கனடாவில் மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டது. அதன் உயர் அதிகாரிகள் சிலர் மீது மோசடி வழக்குத் தொடங்கப்பட்டது. அந்த வழக்குகள் நீதிமன்றத்திற்கு வெளியே பைசல் செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் மீது அவர்களின் அணுகுமுறை பற்றிய பலவேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 

வர்த்தகச் சின்னமாக
 

வர்த்தகச் சின்னமாக

எது எவ்வாறாயினும், இந்த நிறுவனம் இன்றும் ஒரு சிறந்த வர்த்தகச் சின்னமாகத் தொடர்கின்றது. இந்த நிறுவனத்தின் பீடு நடை எல்லாரோலும் கவனிக்கப்படுகின்றது.

ஆம்வே அணுகுமுறை

ஆம்வே அணுகுமுறை

அமெரிக்க வழி என்பதன் சுருக்கமே ஆம்வே என வழக்காயிற்று. இந்த நிறுவனம் 1959 ல் மிச்சிகனில் உள்ள அடாவில் ஜெய் வான் ஆண்டெல் மற்றும் ரிச்சர்ட் டிவோஸ் ஆகியோரால் நிறுவப்பட்டது.

அவர்கள் இந்த நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முந்தைய பத்து ஆண்டுகளுக்கு நியூட்ரிலைட் என்ற உணவுப்பொருளை விற்கத் தொடங்கினர். அவர்களது நிறுவனத்தில் சுமார் 5,000 விநியோகிப்பாளர்கள் இணைந்த பொழுது அவர்கள் இந்த நிறுவனத்தைத் தொடங்கினர். ஏனெனில் அவர்களுக்கு அனுபவப்பட்ட பல நிலை வணிகத்தில் பிற பொருட்களை விற்க விரும்பினர். எனவே அவர்கள் ஆம்வே நிறுவனத்தைத் தொடங்கினர்.

 

அடுத்தக் கட்டம்

அடுத்தக் கட்டம்

அவர்கள் வீட்டுச் சுத்திகரிப்பு பொருளான எல் ஓ சி (திரவக் கரிம சுத்திகரிப்பு) யின் விநியோக உரிமையை அதன் உரிமையாளரிடம் இருந்து வாங்கினர். இது வளரத் தொடங்கிய ஆம்வே நிறுவனத்தின் மிகப் புகழ் பெற்ற தயாரிப்பாக விளங்கியது.

காலப்போக்கில், ஆம்வே நிறுவனம் தனது தனிப்பட்ட தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திப் பல்வேறு பொருட்கள் குறிப்பாக ஒப்பனைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யத் தொடங்கியது.

 

யுத்தி

யுத்தி

புதிய நபர்களை அந்த நிறுவனத்தின் குடைக்குக் கொண்டு வர ஆம்வே நிறுவனம் கையாண்ட யுத்தி மிகவும் எளியது. உங்களால் உங்களுக்குக் கீழ் செயல்பட ஆறு நபர்களைக் கொண்டு வர இயலும் என வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த ஆறு நபர்களும் அவர்களுக்குக் கீழ் ஒவ்வொருவரும் ஆறு நபர்களை இணைத்து விடுகின்றார்கள் எனில் உங்களுக்குக் கீழ் சுமார் 40 நபர்கள் இருப்பார்கள்.

அந்த 40 நபர்களும் ஒவ்வொரு மாதமும் 1,000 டாலர் அளவிற்குப் பொருட்களை விற்றுவிட்டால், மிக விரைவாக உங்களின் வருவாய் அதிகரிக்கும்.

 

பிரமிடு திட்டம் பற்றிய குற்றச்சாட்டுகள்

பிரமிடு திட்டம் பற்றிய குற்றச்சாட்டுகள்

இந்த நிறுவனத்தின் செயல்முறை அமைப்புச் சந்தேகத்திற்குரியதாகத் தெரிந்திருந்தாலும், அதன் செயல்பாடு சட்டவிரோதமான பிரமிடுத் திட்டங்களை ஒத்திருக்கின்றது.

1979 ஆம் ஆண்டில், அமெரிக்க அரசாங்கத்தின் FTC அமைப்பு ஆம்வே நிறுவனத்தின் மீது ஒரு முழுமையான விசாரணையை நடத்தியது. இறுதியில் ஆம்வே நிறுவனம் பிரமிடு திட்டத்தைச் செயல்படுத்த வில்லை என ஆம்வே நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்தது.

 

இதற்காக FTC அமைப்பு பின்வரும் விளக்கங்களை அளித்தது:

இதற்காக FTC அமைப்பு பின்வரும் விளக்கங்களை அளித்தது:

(அ) விநியோகிப்பாளர்களைப் பணியமர்த்துவதற்கு எந்த வித பணமும் வழங்கப்படவில்லை.
(ஆ) விநியோகிப்பாளர்கள் அதிக அளவிலான கையிருப்பு சரக்குகளை வாங்குவதற்குத் தேவையில்லை
(இ) விநியோகஸ்தர்கள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட சில்லறை விற்பனை (குறைந்தபட்சம் 10 மாதத்திற்கு) அளவை பராமரிக்க வேண்டும்.
(ஈ) நிறுவனம் மற்றும் அதனுடைய அனைத்து விநியோகஸ்தர்களும் கீழ்மட்ட விநியோகிப்பாளர்களிடமிருந்து விற்காமல் தேங்கியுள்ள சரக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

ஆயினும், ஆம்வே நிறுவனம் அதன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தில் இருந்தும் முழுமையாக வெளியேறவில்லை. அவர்கள் விலை நிர்ணயிப்பதில் குற்றவாளிகளாக இருந்தனர் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட வருமானம் கிடைக்கும் என வினியோகஸ்தர்களை நம்பச் செய்தனர்.

அத்துடன், அவ்வேயின் பணியாளர்களில் 54 சதவிகிதம் பேருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. எஞ்சியுள்ளவர்கள் மாதத்திற்குச் சராசரியாக 65 டாலர் சம்பாதிக்கின்றனர்.

 

முதலாளித்துவக் கலாச்சாரம்

முதலாளித்துவக் கலாச்சாரம்

பெரும்பான்மையான விநியோகஸ்தர்கள் அதிகப் பணம் சம்பாதிக்கவில்லை என்றால் ஒரு முக்கியமன கேள்வி நம்முன் எழுகின்றது. பலர் உணர்ச்சிவசப்பட்டு இந்த நிறுவனத்திற்குத் தங்களை ஏன் அர்ப்பணிக்கின்றனர்? இதற்கான பதில், புதிதாக இந்த நிறுவனத்தில் சேர்பவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கப்படுத்தும் பயிற்சியில் உள்ளது.

புதிய வழக்கு

புதிய வழக்கு

1985 ஆம் ஆண்டில் வாஷிங்டனில் உள்ள இரண்டு விநியோகஸ்தர்கள் ஆம்வே நிறுவனத்தைச் சேர்ந்த பில் பிரிட், டெக்ஸ்டர் யாகர் ஆகியோர் மீது மற்றவர்களுடன் இணைந்து வழக்குத் தொடுத்தனர்.

அவர்கள் "நாங்கள் அளவிற்கு அதிகமான ஊக்கப்படுத்தும் பொருட்களை வாங்கும் வகையில் மூளை சலவை செய்யப்பட்டோம்", என்று குற்றம் சாட்டினர். இந்த வழக்கை 1988 ஆம் ஆண்டில் நீதிமன்றம் தீர்த்து வைத்தது.

 

வெற்றி பெற முடியாது

வெற்றி பெற முடியாது

இதைப் போன்று மற்றவர்களும் தங்களுடைய கதைகளைத் தெரிவித்தனர். ஒலி நாடாக்கள், வீடியோக்கள், மற்றும் கருத்தரங்கு பொதிகளை வாங்குவதற்கு இதே போன்று அழுத்தம் கொடுக்கப்பட்டோம் எனத் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு இல்லையெனில் தாங்களால் வணிகத்தில் வணிகத்தில் வெற்றி பெற முடியாது என்று நம்ப வைக்கப்பட்டோம் எனவும் தெரிவிக்கின்றனர்.

 

திருமண வாழ்க்கை

திருமண வாழ்க்கை

ஜான் மற்றும் ஸ்டாசி ஹன்ரஹான் என்கிற ஜோடி இதே போன்று தாங்கள் அனுபவித்த ஆம்வே நிறுவன அழுத்தங்களைத் தெரிவித்தனர். இந்த அழுத்தம் காரணமாகத் தங்களின் திருமண வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்பட்டது என்கிற தகவல்களையும் தெரிவிக்கின்றனர்.

இன்னும் வலுவடைகின்றது

இன்னும் வலுவடைகின்றது

பல்வேறு சர்ச்சைகள் ஆம்வே நிறுவனத்தைச் சுழற்றியடித்தாலும் ஆம்வே நிறுவனம் இன்றும் நல்ல நிலையில் உள்ளது. இந்த நிறுவனம் சந்தையில் தன்னுடைய பெயரை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டாலும் அது மீண்டும் பழைய நிலையை நோக்கி பயணிக்கத் தொடங்கி இருக்கின்றது.

ஆம்வே-யின் வெற்றி

ஆம்வே-யின் வெற்றி

இந்த நிறுவனத்தின் தந்திரோபாயங்கள் மற்றும் அணுகுமுறை குறை கூறுபவர்கள் இருந்தாலும் வீட்டு உபயோகப் பொருள் தேவைப்படும் நபர் மற்றும் ஒரு நல்ல வாழ்க்கை வாழ ஆசைப்படும் மக்கள் இருக்கும் வரை ஆம்வே நிறுவனத்தின் வெற்றி நடை கண்டிப்பாகத் தொடரும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amway Business model Success and fall back

Amway Business model fall back and Success - Tamil Goodreturns | வர்த்தக உலகை ஆச்சரியத்தில் மூழ்கடித்த ஆம்வேயின் வெற்றி..! - தமிழ்குட்ரிட்டன்ஸ்
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X