சிசிடி சித்தார்த்தா மறைத்த ரூ.650 கோடி வருமானத்தைக் கைப்பற்றியது வருமான வரித்துறை..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

பெங்களுரூ: வியாழக்கிழமை முதல் கபே காஃபி டே கடைகள், அலுவலகங்கள், அதன் கிளை நிறுவனங்கள், மற்றும் அதன் அதன் உரிமையாளரான சித்தார்த்தாவின் வீடு, சொந்த ஊர், அலுவலர்களில் சோதனை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை, வருமான வரித்துறை சித்தார்த்தா மறைக்கப்பட்ட சுமார் 650 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களின் பத்திரங்களைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சோதனை..

வருமான வரித்துறையினர் நடந்திய 4 நாட்கள் சோதனையில், 25 சிசிடி கிளைகள், இந்நிறுவனத்தின் கர்நாடகா, மும்பை, சென்னை தலைமை அலுவலகங்கள் எனப் பல இடங்களில் சோதனையை மேற்கொண்டது.

இதில் வருமான வரித்துறைக்கு மறைக்கப்பட்ட 650 கோடி ரூபாய் மதிப்பிலான வருமானத்திற்கான ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளது.

 

சிசிடி

சித்தார்த்தா தலைமையிலான சிசிடி நிறுவனம் காஃபி விற்பனையில் மட்டும் அல்லாலமல் டூரிசம், தகவல் தொழில்நுட்பம் எனப் பல துறைகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வருமான வரித்துறை

இந்தச் சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிகமான தொகையைக் கைப்பற்றியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.

தொடர் சோதனை..

மத்திய வருமான வரித்துறை அமைச்சகம் ஜிஎஸ்டி வரியமைப்பிற்குள் அதிகமான நிறுவனங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்த வாரம் முதல் அதிரடி சோதனையை நடத்த உள்ளதாகத் தெரிவித்திருந்தது.

ஆனால் சித்தார்த்தா வீட்டில் ஏற்கனவே சோதனையைத் துவங்கியுள்ளது, இந்தியாவில் கருப்புப் பணம் வைத்துள்ளவர்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.

 

தடைகள் அகற்றம்..

வருமான வரித்துறை சோதனை செய்ய மாநில அளவில் பல கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், சமீபத்தில் செய்ய மாற்றத்தின் மூலம் வருமான வரித்துறை நாட்டின் எந்த இடத்தில் வேண்டுமானாலும், சோதனை செய்ய முடியும் என்று சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிரடி சோதனை..

வருமான வரித்துறையின் அதிரடி சோதனை.. அடுத்த வாரம் ஆரம்பம்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Raids on Cafe Coffee Day: Tax Dept found Rs 650 crore concealed income

Raids on Cafe Coffee Day: Tax Dept found Rs 650 crore concealed income
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns