அம்பானிக்கும், அதானிக்கும் டப் கொடுக்கும் ஆச்சர்யா பாலகிருஷ்ணா!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

யோகா சொல்லி கொடுக்கும் இவர் கோடிஸ்வரர் ஆவார் யாரும் நினைத்துக்கூடப் பார்த்து இருக்கமாட்டார்கள். பாபா ராம்தேவ் தலைமையிலான பஞ்சலி நிறுவனத்தின் தலைவர் ஆச்சர்யா பாலகிருஷ்னா 2017-ம் ஆண்டின் ஹூ ரன் இந்திய கோடிஸ்வரர்கள் பட்டியலில் 8 வது இடத்தினைப் பிடித்துள்ளார்.

சென்ற ஆண்டு இதே பட்டியலில் 25 வது இடத்தில் இருந்தால் ஆனால் தற்போது 173 சதவீத வளர்ச்சியுடன் இவரது சொத்து மதிப்பு 70,000 கோடிகளை எட்டிப் பிடித்துள்ளது.

சரி, யோகா சொல்லி கொடுக்கும் ஒருவரால் எப்படி இவ்வளவு பெரிய வளர்ச்சியை எட்டிப் பிடிக்க முடிந்தது என்பதைப் பற்றி விளக்கமாகப் பார்ப்போம்.

பதஞ்சலி நிறுவனம்

2016-2017 நிதி ஆண்டில் பதஞ்சலி நிறுவனம் 10,561 கோடி ரூபாய் வருவாய் பெற்று உலகின் பல்வேறு பிராண்டுகளுக்குப் போட்டியாக வளர்ந்துள்ளது.

இந்திய அளவில் இரண்டாம் மிகப் பெரிய சுத்தமான எஃப்எம்சிஜி நிறுவனமாகப் பதஞ்சலி நிறுவனம் வளர்ந்துள்ளது. முதல் இடத்தில் ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் 30,783 கோடி வருவாயுடன் உள்ளது. இந்திய நிறுவனமான பதஞ்சலி நடப்பு நிதி ஆண்டில் தங்களது வருவாயினை இரட்டிப்பாக்கும் நோக்கத்தில் வேகமாக இயங்கி வருகின்றது.

 

இலக்கு

இந்த ஆண்டில் பதஞ்சலி நிறுவனம் தனது இலக்கை அடைந்துவிட்டால் எளிதாகப் போட்டி நிறுவனங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடத்தினைப் பிடிக்கும்.

ஆச்சர்யா பாலகிருஷணா

பதஞ்சலி நிறுவனத்தின் இந்த மிகப் பெரிய வளர்ச்சியின் பின் ஆச்சர்யா பாலகிருஷணா உள்ளார். சும்மா லாட்டிரில் பரிசு அடித்து ஒன்றும் இவர் கோடிஸ்வரர் ஆகிவிடவில்லை. தனது வாழ்க்கையில் கடினமாக உழைத்தே இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.

பணியில் ஈடுபாடு

யோகா குரு பாபா ராம்தேவின் நம்பிக்கையினைப் பெற்ற பலகிருஷ்ணாவிடம் பதஞ்சலி நிறுவனத்தின் 94 சதவீத பங்குகள் உள்ளன. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இவர்தான் என்றாலும் ஒரு ரூபாய் கூடச் சம்பளமாகப் பெறுவதில்லை. சாதாரணமாக ஒருவர் 8 முதல் 9 மணி நேரம் வேலை செய்யும் போது இவர் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் சனி, ஞாயிறு என்று பாராமல் வேலை செய்து வருகின்றார். இவர் இது வரை ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததில்லை என்றும் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை தொடர்ந்து வேலை செய்வதாகவும், 5 பேரின் வேலையை இவர் ஒருவரே பார்ப்பதாகவும் கூறுகிறார்.

துவக்கம்

10 வருடங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தினைத் துவங்க வேண்டும் என்று இருந்த இவரது கனவிற்குக் கடன் தேவைப்பட்டது. அப்போது பதஞ்சலி நிறுவனம் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறும் என்று நினைக்கவில்லை. 50 முதல் 60 கோடி ரூபாய் வரை கடன் தேவை இருந்த போது தன்னிடம் ஒரு வங்கி கணக்கு கூடக் கிடையாது என்று கூறியுள்ளார்.

பாபா ராம்தேவ் உடன் நட்பு எப்படி?

நேபாலில் பிறந்த பாலகிருஷ்ணா ஹரியானாவில் உள்ள ஒரு குருகுலத்தில் பாபா ராம்தேவ் உடன் படித்தவர் ஆவார். 1995-ம் ஆண்டு இருவரும் சேர்ந்து திவ்ய பார்மஸி என்ற சிறு கடையினைத் துவங்கி பின்னர் 2006-ம் ஆண்டுப் பதஞ்சலி நிறுவனத்தினைத் துவங்கியுள்ளனர்.

சிறந்த பலம்

பதஞ்சலி நிறுவனத்தினை இந்தியாவின் மிகப் பெரிய எப்எம்சிஜி நிறுவனமாக மாற்ற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் பாலகிருஷ்ணா தனது நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்ய நாடு முழுவதும் 12,000 விநியோகஸ்தர்களை வைத்துள்ளார் என்பது மிகப் பெரிய பலமாகும்.

புதிய திட்டங்கள்

விரைவில் பல புதிய வணிகங்களைத் துவங்க உள்ள பாலகிருஷ்ணா 5,000 கோடி ரூபாயினை அதற்காக முதலீடு செய்ய உள்ளார். ஊழியர்களின் எண்ணிக்கையினை 5 லட்சம் நபர்களாக ஆக்க வேண்டும் என்கிறார். மேலும் விரவில் இயற்கை உணவகங்களை நாடு முழுவதும் துவங்க உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How did Acharya Balakrishna grow up as one of India's greatest millionaires?

How did Acharya Balakrishna grow up as one of India's greatest millionaires?
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns