பதஞ்சலி ஆச்சார்யா வளர்ச்சி பார்த்து ஆடிப்போன முகேஷ் அம்பானி..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

பாபா ராம்தேவ்-இன் பதஞ்சலி நிறுவனத்தைக் கட்டியாளும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்துள்ளது.

அதுமட்டும் அல்லாமல் மோடியின் நெருங்கிய நண்பரான கொளதம் அதானிக்கும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா-விற்கும் மத்தியிலான சொத்து மதிப்பில் வெறும் 600 கோடி ரூபாய் தான் வித்தியாசம்.

இந்த வருடம் ஆச்சார்யாவின் சொத்து மதிப்பை கண்டு முகேஷ் அம்பானியே ஆடிப்போய் உள்ளார்.

ஹூரன்

சீனா பத்திரிக்கை நிறுவனமான ஹூரன் ஒவ்வொரு வருடமும் இந்திய பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இன்று 2017ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் வழக்கம் போல் முகேஷ் அம்பானி முதல் இடத்தைப் பிடித்திருந்தாலும், இவரின் சொத்து மதிப்பின் வளர்ச்சி உலகப் பணக்காரர்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறது. சரி வாங்க டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களைப் பார்ப்போம்.

 

சுனில் மிட்டல் மற்றும் குடும்பம்

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவரான சுனில் மிட்டல் ஹூரன் வெளியிட்டுள்ள டாப் 10 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்துள்ளார்.

வயது: 59
சொத்து மதிப்பு: 56,500 கோடி ரூபாய்
சொத்து மதிப்பின் வளர்ச்சி: 12 சதவீதம் வளர்ச்சி
வாழும் இடம்: டெல்லி

 

உதய் கோட்டாக்

இவர் கோட்டாக் மஹிந்திரா வங்கியின் தலைவர் ஆவார். இவ்வங்கி இன்றைய தலைமுறையினருக்கான வங்கி எனப் பல வகையில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. தென் இந்தியாவில் ஆதிக்கத்தைப் பெற்றுள்ள கோட்டாக் மஹிந்திரா வங்கி தற்போது ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை கைப்பற்றியதன் மூலம் இந்தியா முழுவதும் விரிவாக்கம் அடைந்துள்ளது.

வயது: 58
சொத்து மதிப்பு: 62,700 கோடி ரூபாய்
சொத்து மதிப்பின் வளர்ச்சி: 21 சதவீத வளர்ச்சி
வாழும் இடம்: மகாராஷ்டிரா

 

ஆச்சார்யா பாலகிருஷ்ணா

இந்திய நுகர்வோர் சந்தையில் பதஞ்சலி நிறுவனத்தின் ஆதிக்கத்தைப் பற்றிச் சொல்ல தேவையில்லை. பதஞ்சலியின் இன்றைய நிலைக்கு முக்கியக் காரணம் ஆச்சார்யா பாலகிருஷ்ணா தான்.

வயது: 45
சொத்து மதிப்பு: 70,000 கோடி ரூபாய்
சொத்து மதிப்பின் வளர்ச்சி: 173 சதவீத வளர்ச்சி
வாழும் இடம்: உத்தரகண்ட்

 

கெளதம் அதானி

பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் மற்றும் ஓரே மாநிலத்தைச் சேர்ந்தவரான கெளதம் அதானி உற்பத்தி, மின்சாரம், கட்டுமானம், எனப் பல துறைகளில் அதானி எண்டர்பிரைசர்ஸ் என்ற பெயரில் வர்த்தகம் செய்து வருகிறார்.

இவர் ஹூரன் வெளியிட்டுள்ள பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்துள்ளார். கெளதம் அதானி ஹூரன் டாப் 10 பட்டியலில் வந்துள்ளது இதுவே முதல் முறை.

வயது: 55
சொத்து மதிப்பு: 70,600 கோடி ரூபாய்
சொத்து மதிப்பின் வளர்ச்சி: 66 சதவீத வளர்ச்சி
வாழும் இடம்: குஜராத்

 

சைரஸ் எஸ் பூன்வாலா

இந்திய பார்மா துறையில் துறையில் கலக்கும் சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவின் தலைவர் தான் சைரஸ் எஸ் பூன்வாலா

வயது: 76
சொத்து மதிப்பு: 71,100 கோடி ரூபாய்
சொத்து மதிப்பின் வளர்ச்சி: 9 சதவீத வீழ்ச்சி
வாழும் இடம்: மகாராஷ்டிரா

 

அசிம் பிரேம்ஜி

ஐடி, உற்பத்தி, நுகர்வோர், கல்வி எனப் பல துறையில் முதலீடும் வர்த்தகமும் செய்து வரும் விப்ரோ குழுமத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி இப்பட்டியலில் 5வது இடத்தைப் பெற்றுள்ளார்.

இவர் அதிகளவிலான சொத்துக்களையும், பணத்தையும் நன்கொடை அளிக்கும் கரணத்தால் இவரின் சொத்து மதிப்பு ஒவ்வொரு வருடமாகக் குறைந்து வருகிறது.

வயது: 72
சொத்து மதிப்பு: 79,300 கோடி ரூபாய்
சொத்து மதிப்பின் வளர்ச்சி: 6 சதவீத வளர்ச்சி
வாழும் இடம்: கர்நாடகா

 

ஷிவ் நாடார்

இந்திய மென்பொருள் வர்த்தகத்திலும், ஏற்றுமதியிலும் நீங்கா இடத்தைப் பிடித்துள்ள எச்சிஎல் நிறுவனத்தின் தலைவரான ஷிவ் நாடார் இப்பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.

வயது: 72
சொத்து மதிப்பு: 85,100 கோடி ரூபாய்
சொத்து மதிப்பின் வளர்ச்சி: 16 சதவீத வளர்ச்சி
வாழும் இடம்: டெல்லி

 

லக்ஷமி மிட்டல்

எஃகு மற்றும் ஸ்டீல் உற்பத்தி செய்யும் ஏசல்லார் மிட்டல் நிறுவனத்தின் தலைவரான லக்ஷமி மிட்டல் இப்பட்டியலில் 3வது இடத்தைப் பெற்றுள்ளார். கடந்த சில வருடங்களாக இவரது நிறுவனத்தின் வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவு லக்ஷமி மிட்டல் அவர்களின் சொத்து மதிப்பில் அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது.

வயது: 67
சொத்து மதிப்பு: 88,200 கோடி ரூபாய்
சொத்து மதிப்பின் வளர்ச்சி: 32 சதவீத வளர்ச்சி
வாழும் இடம்: லண்டன்

 

திலீப் சங்வி

இந்தியாவின் மிகப்பெரிய பார்மா பொருட்கள் உற்பத்தி, விற்பனை, ஏற்றுமதி செய்யும் சன் பார்மா நிறுவனத்தின் தலைவரான திலீப் சங்வியின் சொத்து மதிப்பு 27 சதவீதம் வரை சரிந்தாலும் தொடர்ந்து 2வது இடத்திலேயே உள்ளார்.

வயது: 61
சொத்து மதிப்பு: 89,000 கோடி ரூபாய்
சொத்து மதிப்பின் வளர்ச்சி: 27 சதவீத வீழ்ச்சி
வாழும் இடம்: மகாராஷ்டிரா

 

முகேஷ் அம்பானி

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் பல வருடங்களாகத் தொடர்ந்து முதல் இடத்திலேயே இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி இந்த வருடமும் முதல் இடத்தைப் பிடித்தள்ளார்.

ஜியோ நிறுவனத்தின் அறிமுகத்தின் மூலம் இவரின் சொத்து மதிப்பு எதிர்பார்க்காத வகையில் உயர்ந்துள்ளது.

வயது: 60
சொத்து மதிப்பு: 2,57,900 கோடி ரூபாய்
சொத்து மதிப்பின் வளர்ச்சி: 58 சதவீத வளர்ச்சி
வாழும் இடம்: மகாராஷ்டிரா

 

ஆடிப்போன முகேஷ் அம்பானி

இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருப்போரின் சொத்து மதிப்பு 10 சதவீதம், 20 சதவீதம், சிலரின் சொத்து மதிப்பு 50 -60 சதவீதம் வரையில் மட்டுமே உயர்ந்திருந்த நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் ஆச்சார்யா பாலகிருஷ்ணா-வின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 173 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்தத் திடீர் வளர்ச்சி இந்திய பணக்காரர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Mukesh Ambani shocked on Patanjali Acharya balakrishna growth

Mukesh Ambani shocked on Patanjali Acharya balakrishna growth
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns