சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் ஜியோ.. 4ஜி போன் வாங்குவதில் புதிய விதிமுறை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜியோ 4ஜி பியூச்சர் போன் திட்டத்தினை ஜூலை மாதம் அறிவித்த ரிலையன்ஸ் நிறுவனம் அப்போது அறிவித்த விலையில் மொபைல் போனை அளித்தாலும் சில கடுமையான விதிகளைத் தற்போது இணையதளத்தில் அறிவித்துள்ளது.

 

அதற்காகப் பயப்பட வேண்டாம். அந்த விதிகள் எல்லாம் ஜியோ 4ஜி பியூச்சர் போனை வாங்கிய பிறகு மூன்று வருடத்திற்குள் திருப்பி அளித்துவிட்டு செக்யூரிட்டி டெபாசிட் பணத்தைத் திருப்பிக் கேட்பவர்களுக்கு மட்டும் தான்.

இது என்னடா இந்தப் போனை வாங்கினால் கண்டிப்பாக 3 வருடம் பயன்படுத்தினால் தான் 1,500 ரூபாய் பணத்தினைத் திரும்பப் பெற முடியுமா? அதற்கு முன்பு திருப்பி அளித்தால் என்ன ஆகும் என்று விளக்கமாக இங்குப் பார்ப்போம்.

1,500 ரூபாய் ரீஃபண்டு எப்போது?

1,500 ரூபாய் ரீஃபண்டு எப்போது?

ஜியோ 4ஜி பியூச்சர் போனை வாங்கிய பிறகு குறைந்தபட்சம் 4,500 ரூபாய் வரை ரீசார்ஜ் செய்து பயன்படுத்தினால் மட்டுமே 1,500 ரூபாய் செக்யூரிட்டி டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்படும்.

 மோசடி

மோசடி

ஆனால் இந்தப் போனை அறிவிக்கும் போதும் சரி, போனை புக் செய்யும் போதும் சரி ஜியோ நிறுவனம் அறிவிக்காதது மிகப் பெரிய மோசடி என்று புக் செய்த வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே போனை வாங்கிய ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு வருடத்திற்கு ரீசார்ஜ் செய்தால் தான் 500 ரூபாய் பணத்தினைத் திருப்பி வாங்க முடியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வருடத்திற்கு எவ்வளவு ரீசார்ஜ் செய்யப்படும்?
 

வருடத்திற்கு எவ்வளவு ரீசார்ஜ் செய்யப்படும்?

ஜியோ 4ஜி பியூச்சர் போனை வாங்கியவர்கள் குறைந்தது வருடத்திற்கு 1,500 ரூபாய்க்கு அதாவது 153 ரூபாய் ரீசார்ஜ் போக்கினை 10 முறையாவது என 3 வருடத்தில் 30 முறை ரீசார்ஜ் செய்தால் தான் போனை திருப்பி அளித்துவிட்டுப் பணத்தினைப் பெற முடியும்.

 1,500 ரூபாய் கூடுதல் கட்டணம்

1,500 ரூபாய் கூடுதல் கட்டணம்

ஜியோ போனை வாங்கிய பிறகு 1 வருடத்திற்குள் திருப்பி அளிக்கும் போது அதிகபட்சம் 1,500 ரூபாய் வரை கூடுதல் கட்டணத்துடன் ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும்.

1,000 ரூபாய் அபராதம்

1,000 ரூபாய் அபராதம்

ஜியோ போனை வாங்கிய 1 வருடத்திற்குப் பிறகும் இரண்டு வருடத்திற்குள்ளும் போனைத் திருப்பி அளித்தால் 1,000 ரூபாய் கூடுதல் கட்டணத்துடன் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.

500 ரூபாய் அபராதம்

500 ரூபாய் அபராதம்

போனை வாங்கிய பிறகு இரண்டு வருடத்திற்குப் பிறகும் 3 வருடத்திற்குள்ளும் திருப்பி அளிக்கும் போது 500 ரூபாய் கூடுதல் கட்டணத்துடன் ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும்.

 போன் புக்கிங்

போன் புக்கிங்

ஜியோ போனை 6 மில்லியன் வாடிக்கையாளர்கள் புக் செய்துள்ளனர் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் கூடுதல் கட்டணம் போன்ற விதிகளை அறிவிக்காமல் வாடிக்கையாளர்களை ஜியோ ஏமாற்றிவிட்டது என்றும் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Be Ready to Pay Extra if You Return Jio Phone Before 3 Years

Be Ready to Pay Extra if You Return Jio Phone Before 3 Years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X