பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட காலத்தில் ரயில் பயணிகள் தாங்கள் முன் பதிவு செய்யப்படும் டிக்கெட்டிற்கான சேவை கட்டணம் ரத்துச் செய்யப்பட்டது. இந்தச் சலுகை வருகிற மார்ச் 2018ஆம் ஆண்டு வரை தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் முறை
ரயில் முன்பதிவில் டிஜிட்டல் முறையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு சேவை கட்டணத்தைப் பணமதிப்பிழப்புக் காலத்தில் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

சேவை கட்டணம்
ரயில் டிக்கெட் முன்பதிவில் சேவை கட்டணம் 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சேவை கட்டண விலக்கு ஏற்கனவே ஜூன் 30இல் இருந்து செப்டம்பர் 30 வரையிலான காலத்திற்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது மார்ச் 2018 வரையில் மீண்டும் நீட்டிப்பு செய்துள்ளது.

ஒப்புதல்
செப்டம்பர் 29ஆம் தேதி ஜஆர்சிடிசி நிறுவனம், இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு இதற்கான பரிந்துரையை அனுப்பி அனுமதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ரயில்வே நிர்வாகத்தின் ஒப்புதல் மூலம் இந்தச் சலுகையை மார்ச் வரை நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

33 சதவீத வருமானம்
ஜஆர்சிடிசி நிறுவனத்திற்கு 33 சதவீத வருமானம் சேவை கட்டணத்தின் வாயிலாக வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டில் ரயில் டிக்கெட் முன்பதிவின் மூலம் கிடைத்த 1,500 கோடி ரூபாய் வருமானத்தில், சுமார் 540 கோடி ரூபாய் சேவை கட்டணமாகக் கிடைத்துள்ளது.

நிலுவை தொகை
இதில் 184 கோடி ரூபாய் இன்னும் பணிகள் கணக்கிற்கு அனுப்படவில்லை, இது நவம்பர் 23,2016 முதல் பிப்ரவரி 28,2017 வரையிலாகக் காலத்தில் பதிவு செய்யப்பட்ட சீட்டுக்கான தொகை என்பது குறிப்பிடத்தக்கது.