அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் வந்தாச்சு.. இனியாவது பெட்ரோல் விலை குறையுமா?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

அமெரிக்காவில் இருந்து முதல் முறையாகக் கச்சா எண்ணெய் இந்தியாவின் ஒடிசா மாநிலத்திற்கு வந்து சேர்ந்ததை அடுத்து அமெரிக்க எரிசக்தி துறை செயலாளர் ரிக் பெர்ரி அமெரிக்கக் கச்சா எண்ணெய்யை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதினால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் பொருளாதாரம் நிலைத்தன்மை அடையும் என்றும் இரண்டு நாடுகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

அமெரிக்காவின் செயிண்ட் ஜேம்ஸ், லூசியானா மற்றும் ஃப்ரீபோர்ட், டெக்சாஸ் டெர்மினல்களில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கச்சா எண்ணெய் அக்டோபர் 2ம் தேதி ஒடிசாவின் பாராதிப் துறைமுகத்தை வந்தடைந்தது.

வேலை வாய்ப்பு

அமெரிக்காவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் இரு நாடுகளிலும் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இறக்குமதி கப்பல்கள்

அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய ஊக்கமளிக்கும் வகையில் இந்தியாவின் கப்பலை பயன்படுத்துவது மட்டும் இல்லாமல் வெளிநாட்டுக் கப்பலை பயன்படுத்தவும் இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

பொதுவாக இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவங்களை இந்திய கப்பல்களை மட்டும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இதுவரை பயன்படுத்தி வந்துள்ளன.

 

மோடியின் அமெரிக்கப் பயணம்

அமெரிக்க அரசு துறை தங்களது பிளாகில் வெளியிட்ட செய்திகளின் படி இந்திய பிரதமர் மோடி அவர்கள் 2017 ஜூன் மாதம் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு வந்தபோது கச்சா எண்ணெய் சமந்தமான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு ஏற்றமதி துவங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

முதல் ஆர்டர்

முதல் முறையாகக் கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியன் ஆயில் கார்ப்ரேஷம் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களில் இருந்து 2 மில்லியன் பேரல் அளவிற்கு ஆர்டர் பெற்று டெலிவரி செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்தியா எங்கு இருந்து இறக்குமதியைச் செய்கின்றது?

இந்தியா பொதுவாகத் துபாய் மற்றும் பிரெண்ட் உள்ளிட்ட இடங்களில் மட்டும் தான் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வந்தது. தற்போது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்வது மட்டும் இல்லாமல் சீனாவில் இருந்தும் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

எதனால் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி?

உலகின் மூன்றாம் மிகப் பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா ஓபிஈசி, மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் விலையினை உயர்த்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட உற்பத்தியைக் குறைக்கும் திட்டத்தினை அடுத்து தென் கொரியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற ஆசிய நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும் அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைத் துவங்கியுள்ளது.

இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்

அமெரிக்கா கச்சா எண்ணெய், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையினை விட எப்போதும் குறைவாக இருக்கும். இன்றைய விலை நிலவரப்படி அமெரிக்கக் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 50.79 டாலர் என்றும், பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 57.00 டாலர் என்றும் விற்பனை உலகச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தீபாவளி முதல் பெட்ரோல் விலை எப்படிக் குறையும்?

இதனால் தான் தீபாவளி முதல் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து இருக்கிறார். சரி, எவ்வளவு விலை குறையும் என்று பொருத்து இருந்து பார்ப்போம்.

அமெரிக்கக் கருத்து

இந்த நிகழ்வால் அமெரிக்கா, இந்தியா இடையிலான வர்த்தகம் மற்றும் எரிசக்தி இடையிலான கூட்டு ஒப்பந்தம் முக்கிய இலக்கை நோக்கிச் செல்லும் என்றும் எங்களுடன் வணிகம் செய்யும் நாடுகளுடன் நம்பகமான, பொறுப்பான மற்றும் திறமையான எரிசக்தி ஆதாரங்களின் பங்கை விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை ஆராய்வதற்கு அமெரிக்க விரும்புகின்றது என்றும் பெர்ரி நேற்று தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Crude oil has arrived from the United States to India expresses petrol price reduction

Crude oil has arrived from the United States to India expresses petrol price reduction
Story first published: Friday, October 6, 2017, 12:55 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns