5,000 ஊழியர்களை வெளியேற்றும் டாடா டெலிசர்வீசஸ்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

டாடா குழுமத்தின் டெலிகாம் வர்த்தக நிறுவனமான டாடா டெலிசர்வீசஸ் 5,000 ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.

இந்திய டெலிகாம் சந்தை கடுமையான போட்டிகளை சந்தித்து கொணடு இருக்கும் சூழ்நிலையில் ஏற்கனவே அதீத நஷ்டத்தில் செயல்படும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தில் கூடுதல் முதலீடு செய்ய வேண்டாம் என டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.

இதனால் இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது டாடா டெலிசர்வீசஸ்.

5,000 ஊழியர்கள்

இந்நிறுவனத்தை முழுமையாக விற்பனை செய்ய திட்டமிட்டு வரும் டாடா குழுமம், தற்போது இந்நிறுவனத்தில் இருக்கும் 5,000 ஊழியர்களை முதற்கட்டமான வெளியேற்ற முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாக அவருக்கும் 3-6 மாத நோட்டீஸ் அனுப்பியுள்ள டாடா டெலிசர்வீசஸ் நிர்வாகம், அதேபோல் விரைவாக வெளியேற விரும்பம் அதிகாரிகளுக்கு வெளியேற்ற ஊக்க தொகை மற்றும் வயதானவர்களுக்கு வீஆர்ஸ் ஆகியவற்றையும் வழங்கஉள்ளதாக டாடா டெலிசர்வீசஸ் தெரிவித்துள்ளது.

 

சில ஊழியர்கள் மட்டும்..

இந்நிலையில் இந்நிறுவனத்தில் பணியாற்றும் சில பகுதி மற்றும் தகுதி உடைய ஊழியர்களை மட்டும் நிறுவனத்தின் வேறு வர்த்தகத்தில் நியமிக்க முடிவு செய்துள்ளது.

மார்ச் 31, 2018

இந்நிறுவனத்தை முழுமையாக மூட திட்டமிட்டுள்ள டாடா குழுமம், டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சர்கிள் தலைவர்களை வருகிற மார்ச் 31,2018க்குள் தங்களது பணியை ராஜினாமா செய்ய உத்தரவிட்டுள்ளது.

மொத்த ஊழியர்கள்

மார்ச் 31,2017இன் படி டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தில் மொத்தம் 5,101 ஊழியர்கள் பணியாற்றி வந்துள்ளனர்.

1 கோடி ரூபாய் சம்பளம்

இன்றும் இந்தியாவின் டெலிகாம் சந்தை மிகப்பெரிய வளர்ச்சியில் இருக்கும் நிலையில், சர்கிள் தலைவர்களுக்கு சந்தையில் 1 கோடி ரூபாய் வரையிலான சம்பளம் அளிக்கப்படுகிறது என ஹெட்ஹன்டர்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் கிரிஷ் தெரிவித்துள்ளார்.

முதல் நிறுவனம்

டாடாவின் 149 வருட வர்த்தகத்தில் மூடப்படும் பெரிய வர்த்தக நிறுவனங்களில் இதுவே முதலாவது என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்தின் மீது தற்போது 30,000 கோடி ரூபாய் அளவிலான கடன் நிலுவையில் உள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tata Teleservices prepares exit plan for staff

Tata Teleservices prepares exit plan for staff
Story first published: Monday, October 9, 2017, 16:33 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns