வெறும் 16 மாதத்தில் வெளியேறிய பேஸ்புக் நிர்வாக இயக்குனர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் முன்னணி சமுகவலைதளமான பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய கிளையான பேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் உமங் பேடி இந்நிறுவனத்தில் சேர்ந்து வெறும் 16 மாதத்தில் தனது பணியை ராஜிநாமா செய்துள்ளார்.

 

இவரது ராஜினாமா பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய கிளையில் சில அதிர்வுகளை ஏற்பட்டுத்தியுள்ளது.

உமங் பேடி

உமங் பேடி

கடந்த ஜூலை 2016இல் அடோப் இந்தியாவில் இருந்து பேஸ்புக் நிறுவனத்திற்கு வந்தார், இப்போது பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் இலவச அடிப்படை இண்டர்நெட் கொடுக்கும் திட்டத்தைப் பெரிய அளவில் திட்டமிட்டு இருந்த நிலையில், இந்திய டெலிகாம் நிறுவனங்கள் நெட் நியூட்ராலிட்டிக்கு தெரிவித்த தடையினால் இத்திட்டம் தடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

புதிய நிறுவனம்

புதிய நிறுவனம்

இந்நிலையில் கடந்த 16 மாதங்கள் பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றி உமங், தற்போது டெக்னாலஜி துறையில் புதிய நிறுவனத்தைத் துவங்க உள்ளதாக உமங் தெரிவித்துப் பேஸ்புக் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

வருவாய்
 

வருவாய்

பேஸ்புக் நிர்வாகம் சமீபத்தில் உமக் அவர்களுக்கு நிறுவனத்தின் மதிப்பைக் குறைக்காமல் வருவாய் ஈட்டும் புதிய வழியை அளிக்கவும், இலவச அடிப்படை திட்டத்தை அமலாக்கம் செய்ய மாற்று வழியைக் கண்டுப்பிடிக்கும்மாறு வேலை கொண்டுக்கப்பட்டுள்ளது.

முக்கியமான நபர்

முக்கியமான நபர்

பேஸ்புக்-இன் இண்டர்நெட்.ஆர்க் திட்டத்தில் இவர் முக்கிய நபராக இருக்கிறார். இவரது தலைமையிலேயே பேஸ்புக் பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் கூட்டணி வைத்து சுமார் 2,00,000 ஹாட்ஸ்பாட்களை தங்களது எக்ஸ்பிரஸ் வைபை திட்டத்தின் மூலம் செயல்படுத்தினார்.

 தற்காலிக தலைவர்

தற்காலிக தலைவர்

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் தென்ஆசிய வர்த்தகத்தில் நுகர்வோர் மற்றும் மீடியா பிரிவின் தலைவரான சந்தீப் பூஷன் இப்பதவியில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார் எனப் பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 2வது உயர் அதிகாரி

2வது உயர் அதிகாரி

கடந்த 2 வருடத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் இருந்து வெளியேறும் 2வது உயர் அதிகாரி உமங் பேடி ஆவார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook India MD Umang Bedi resigns in 16 months

Facebook India MD Umang Bedi resigns in 16 months
Story first published: Wednesday, October 11, 2017, 15:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X