எஸ்பிஐ வங்கியின் போன் பேங்கிங் சேவையை எளிதாகப் பெறுவது எப்படி?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

போன் பேங்கிங் சேவையானது வங்கிகளை உங்களது வீட்டின் வாசலுக்கே கொண்டுவந்துவிட்டது. உங்களிடம் அலைபேசி இருந்தால் வங்கி தொடர்பான அனைத்துப் பரிமாற்றங்களையும் வங்கிக்குச் செல்லாமலேயே செய்யலாம்.

பாரத ஸ்டேட் வங்கியானது (SBI) கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் எப்படித் தொலைப்பேசி வழி வங்கி சேவைக்குப் பதிவு செய்ய வேண்டும் என விளக்கும் ஒரு காணொளியை தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது. ட்விட்டர் முகவரி @TheOfficialSBI.

மீத தொகை

உங்கள் வங்கி கணக்கில் உள்ள மீதித் தொகையையும், பரிமாற்றம் தொடர்பான தகவல்களையும் பெறலாம்.

வங்கி கணக்கு அறிக்கை

அதிகபட்சமாக ஆறு மாதங்களுக்கு உட்பட்ட வங்கி கணக்கு அறிக்கையைத் தபாலிலோ அல்லது மின்னஞ்சலிலோ பெறலாம்.

செக் புக்

காசோலை புத்தகம் தரக்கோரிக் கேட்கலாம். காசோலைக்கெதிரான பணம் நிறுத்தம் செய்யலாம்.

பணப் பரிமாற்றம்

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பாரத ஸ்டேட் வங்கி கணக்குகளுக்கிடையில் பணப்பரிமாற்றம் செய்யலாம். ஆனால் இந்த வசதி குறிப்பிட்ட வரம்புக்குட்பட்டது.

பிக்சட் டெபாசிட்

நீங்கள் பாரத ஸ்டேட் வங்கியில் நிலையான வைப்புத்தொகை எனப்படும் பிக்சட் டெபாசிட் கணக்குத் துவங்கலாம்.

வட்டி சான்றிதழ்

வீடு மற்றும் கல்விக்கடனுக்கான வட்டி சான்றிதழ் கோரலாம். மேலும் உங்களின் சேமிப்பின் வட்டி சான்றிதழையும் கேட்டுப் பெறலாம்.

மொபைல் எண் புதுப்பித்தல்

பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்ட உங்களின் அலைபேசி எண்ணைப் புதுப்பிக்கலாம்.

டிடிஎஸ்

உங்களின் சம்பளம் வழங்குமிடத்து வரிப் பிடித்தம் (TDS) தொடர்பான தகவல்களைக் கேட்டுப்பெறலாம்.

எஸ்பிஐ வங்கியின் போன் பேங்கிங் சேவைக்குப் பதிவு செய்வது எப்படி?

பாரத ஸ்டேட் வங்கி தொலைப்பேசி வழி வங்கி சேவைக்குப் பயனர் குறியீடும் கடவுச்சொல்லும் தேவைப்படும். பயனர் குறியீடானது உங்களின் வங்கி கணக்கு எண்ணாகும். தொலைப்பேசி வழி வங்கிக்கான கடவுச்சொல்லை மூன்று வழிகளில் இயற்றலாம்.

பாரத ஸ்டேட் வங்கி தொலைப்பேசி வழி வங்கி சேவையை அழைப்பு மூலம் பதிவு செய்தல்

1800-22-11 அல்லது 1800-425-3800 அல்லது 080-2659990 எண்களில் அழைத்துச் சரியான வழிகாட்டுதல்களைத் தேர்வு செய்யலாம்.
உங்களின் ஏடிஎம் அட்டை எண் , தனிப்பட்ட அடையாள எண், கணக்கு எண் மற்றும் பதிவு செய்யப்பட அலைபேசி எண்ணையும் உள்ளீடு செய்யவும்.

பதிவு செய்யப்பட்டவுடன், ஆறு இலக்க கடவுச்சொல் உங்களின் பதிவு செய்யப்பட அலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும்.

 

ஏடிஎம் மூலம் போன் பேங்கிங் சேவையினைச் செயல்படுத்துவது எப்படி?

1. ஏடிஎம் இயந்திரத்தில் அட்டையைத் தேய்த்தவுடன் திரையில் "பதிவு" என்பதைத் தேர்வு செய்யவேண்டும்.
2. ஏடிஎம் தனிப்பட்ட அடையாள எண்ணை உள்ளீடு செய்து அடுத்தப் பக்கத்தில் "தொலைப்பேசி வழி வங்கி சேவைக்குப் பதிவு செய்தல்" என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
3. பதிவு செய்யப்பட அலைபேசி எண்ணைத் திரையில் உள்ளீடு செய்து "சரி" என்பதைத் தேர்வு செய்க.
4. பதிவு செய்யப்பட்டவுடன், ஆறு இலக்க கடவுச்சொல் உங்களின் பதிவு செய்யப்பட அலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும்.

போன் பேங்கிங் சேவையினை வங்கி கிளை மூலம் பெறுவது எப்படி?

தொலைப்பேசி வழி வங்கி சேவையைப் பழைய முறையில் வங்கியை நாடியும் பதிவு செய்யலாம். உங்களின் பாரத ஸ்டேட் வங்கியின் தாய் கிளையை அணுகிப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து அளிக்கலாம். வங்கி கிளையானது ஏற்கனவே அச்சிட்ட ஆறு இலக்க கடவுச்சொல்லை வழங்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How To Avail SBI's Phone Banking Services In Simple Steps

How To Avail SBI's Phone Banking Services In Simple Steps
Story first published: Wednesday, October 11, 2017, 11:16 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns