இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் பயணிகள் விமானம்.. ஏர்பஸ், போயிங்கிற்கு சவால் விடும் இந்தியா!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

மும்பையின் போரிவிளி புறநகர் பகுதியில் வெறும் 3,000 சதுர அடி நிலப் பரப்பில் ஒரு ஆய்வுக் கூடத்தினைத் துவங்கி அதில் 19 நபர்கள் அமர்ந்து பயணம் செய்யக் கூடிய முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விமானத்தினை வடிவமைத்துள்ளனர்.

விமானியின் சாதனை

அமோல் யாதவ் என்ற தனியார் விமான நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் விமானி இதனைச் செய்துள்ளார் என்பது ஆச்சர்யமான தகவல்.

டிஏசி 005

டிஏசி 005 என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த விமானம் இன்னும் 4 மாதங்களில் முழுமையாகத் தயாராகிவிடுமாம். இதனைப் பார்க்கும் போது இந்தியாவில் விமானம் தயாரிக்க வேண்டும் என்ற கனவு நிறைவாகியுள்ளது.

உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவில் உள்நாட்டுப் போக்குவரத்திற்கான சேவைக்காகவே தான் இந்த 19 நபர்கள் அமர்ந்துகொண்டு பயணம் செய்யக் கூடிய விமானத்தினை வடிவமைத்துள்ளதாகவும் யாதவ் தெரிவித்துள்ளார்.

சிறிய ரக விமானங்கள்

இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள சிறிய ரகப் பயணிகள் விமானம் எல்லாம் 70 நபர்கள் அமர்ந்து பயணம் செய்யக் கூடியது என்றும் அதனால் சிறு நகரங்களுக்குச் சேவை அளிக்கும் போது பயணிகள் அதிகம் பயணம் செய்யாமல் காலியாகவே செல்கின்றது. இதனால் ஏற்படும் கூடுதல் செலவுகளை இவரது விமானத் தயாரிப்பின் மூலம் குறைக்க முடியும்.

இந்தியாவின் முதல் பயணிகள் விமானம்

இந்தியா சுதந்திரம் பெற்றும் 70 ஆண்டுகள் ஆகியும் இதுவரை சொந்தமாகப் பயணிகள் விமானத்தினைத் தயாரிக்கவில்லை. இவரது 19 நபர்கள் அமர்ந்து பயணம் செய்யக் கூடிய விமானம் இதனைத் தகர்த்து எரிந்துள்ளது.

துசிதட்டும் தேசிய ஏரோஸ்பேஸ் லேபாரட்டரீஸ்

தேசிய ஏரோஸ்பேஸ் லேபாரட்டரீஸ் (என்ஏஎல்) சாராஸ் 14-நபர்கள் அமர்ந்து பயணம் செய்யக் கூடிய விமானத்தைக் கட்ட முயன்றது, ஆனால் 2009 ஆம் ஆண்டில் அதன் முன்மாதிரி விபத்தில் சிக்கியதனை அடுத்து இந்தத் திட்டம் கைவிடப்பட்டது. தற்போது அந்தத் திட்டத்தினை மீண்டும் என்ஏஎல் தூசித்தட்டி வெளியில் எடுத்துள்ளது.

இயந்திரம்

யாதவ் உருவாக்கிய இரட்டை-இயந்திர டர்போ முத்திரையின் கட்டமைப்பு - விமானத்திற்குப் பிரத்தியேக அணுகலுடன் தயாராக உள்ளது மற்றும் ஒரு ப்ராட் & விட்னி PP6A இயந்திரத்தாலும் இயக்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Soon India's first 19 seater passenger aircraft going to fly

Soon India's first 19 seater passenger aircraft going to fly
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns