பதப்படுத்தப்பட்ட உணவு, காஸ்மெடிக்ஸ் துறைகளை அடுத்து பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கால்நடைகளுக்கான தீவன வணிகத்தில் இறங்கியுள்ளது.
இதில் என்ன ஆச்சர்யம் என்னவென்றால் குஜராத்தினைச் சேர்ந்த இந்தியாவின் மிகப் பெரிய பால் உற்பத்தி செய்யும் அமுல் நிறுவனத்திடம் இருந்து மிகப் பெரிய ஆர்டர் ஒன்றைப் பெற்றுள்ளது ஆகும்.

அமெரிக்காவில் இருந்து தொழில்நுட்பம் இறக்குமதி
அமெரிக்காவில் இருந்து தீவன வணிகத்தில் முழு வீச்சில் ஈடுபடுவதற்காகச் சோளத்தில் இருந்து மாட்டுத் தீவனம் அளித்து அதிகப் பால் உற்பத்தி செய்யக்கூடிய தொழில் நுட்பத்தினை வாங்கியுள்ளதாகப் பதஞ்சலி நிறுவனத்தின் தீவன பிரிவு தலைவரான யாஷ் பால் ஆரியா தெரிவித்துள்ளார்.

பதஞ்சலி
எனவே சோளத்தினை விவசாயம் செய்யும் விவசாயிகளை இந்தத் திட்டத்தில் இணைத்து உற்பத்தியினைத் துவங்கவும் பதஞ்சலி நிறுவனம் திட்டம் தீட்டியுள்ளது.

மிகப் பெரிய ஆர்டர்
அதன் முதற்கட்டமாகக் குஜராத்தில் மிகப் பெரிய அமுல் பால் மாற்றும் பால் பொருட்களினை தயாரித்து விற்று வரும் சபர்கந்தா பால் நிறுவனத்திடம் இருந்து மிகப் பெரிய மாட்டுத் தீவன ஆர்டர் பதஞ்சலி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளதாகச் சபர்கந்தா நிறுவனத்தின் துணை பொது நிர்வாகி ஆர் எஸ் பட்டேல் தெரிவித்தார்.

ஆர்டரின் மதிப்பு
முதற்கட்டமாக 6 கோடி மதிப்பில் 10,000 மெட்ரிக் டன் சோள தீவனத்தினை அமுல் நிறுவனம் வாங்க முடிவு செய்து அதற்கான ஒப்பந்தத்தினையும் போட்டுள்ளது. அதுவும் இதற்கான ஆலையினை அமைக்கப் பதஞ்சலி நிறுவனத்திற்குச் சபர்கந்தா நிறுவனமே அளிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமுல் நிறுவனத்தின் திட்டம்
பதஞ்சலி நிறுவனத்தின் மூலம் பெறப்படும் சோளத்தினை விவசாயிகளுக்கு அளித்து அதன் மூலம் வரும் தீவனத்தினை வைத்து அதிகப் பால் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் அளிக்கும் விதமாக அமுல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பச்சை தீவனங்கள்
பொதுவாக இந்தியாவில் விவசாயிகள் மாடுகளுக்குக் காய்ந்த தீவனத்தினையே அளிக்கின்றனர். ஆனால் பச்சை தீவனங்கள் தான் அதிகம் பால் உற்பத்தியை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.