பெங்களுரில் காஸ்ட்லியான வீட்டின் விலை ரூ.50 கோடி.. மிளகாய் பஜ்ஜி கணக்கில் விற்பனை..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

இந்தியாவில் ஆடம்பர வீடுகளின் விற்பனையின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தென் மாநிலங்களில் இதன் அளவு சற்று குறைவாகவே இருந்தது.

ஆனால் பெங்களுரில் தற்போது புதிதாகக் கட்டப்பட்ட உள்ள 30 மாடி கட்டிடத்தில் ஒரு வீட்டின் விலை 50 கோடி ரூபாயாம். யார் வாங்கியிருக்காங்க தெரியுமா..?

எம்பசி ஓன்

பெங்களுரில் ஹெப்பால் பகுதியில் இருக்கும் எம்பசி ஓன் என்ற இடத்தில் 230 அறைகள் கொண்ட ஃபோர் சீசன்ஸ் ஆடம்பர ஹோட்டல், 110 ஃபோர் சீசன்ஸ் வீடுகள், 1,50,000 சதுரடியில் அலுவலகங்கள், 60,000 சதுரடியில் வர்த்தக இடம் எனப் பிரம்மாண்ட முறையில் உருவாகி வருகிறது.

30வது மாடி..

இங்கு ஃபோர் சீசன்ஸ் பிரைவேட் ரெஸிடென்ஸ் கட்டும் 110 வீடுகளில் 30வது மாடியின் விலை மட்டும் 50 கோடி ரூபாய் என்ற உடன் ஒட்டுமொத்த பணக்காரர்களும் ஆடிப்போயினர். ஆனால் ஒருவர் அசால்டாக வாங்கி அசத்தியுள்ளார்.

50 கோடி ரூபாய் விலை

பொதுவாக அலட்ரா லக்ஸூரி வீடுகளுக்கு மும்பை மற்றும் டெல்லி என்சீஆர் பகுதியில் மட்டுமே அதிகளவிலான வாடிக்கையாளர்கள் இருக்கும் நிலையில் பெங்களுரிலும் தற்போது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மும்பை, டெல்லி ஒப்பிடுகையில் பெங்களுரில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 50 கோடி ரூபாய் விலை உண்மையிலேயே சற்று அதிகமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சொந்தக்காரர்

இந்த ஆடம்பர வீட்டின் 30வது மாடி வீட்டை குவெஸ்டு குளோபல் நிறுவனத்தின் தலைவர் அஜித் பிரபு வாங்கியுள்ளார். இந்த வீடு சுமார் 16,000 சதுரடியில் அமைந்துள்ளது. 50 கோடி ரூபாய் மதிப்புடைய இந்த வீட்டில் ஒகு சதுரடியின் விலை 31,000 ரூபாய்.

பெங்களுரில் இதுவரை நடந்த வீட்டு விற்பனையில் அதுவே அதிக மதிப்புடையதாகும்.

 

பிரபலங்கள்

30 மாடி கட்டிடத்தில் 21 மாடிகள் ஃபோர் சீசன்ஸ் நிறுவனத்தின் ஹோட்டகளுக்காகவும், மீதமுள்ளவை சர்வீஸ் அப்பார்மென்டுகாகவும் விடத் திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மற்றும் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்கள் சிலர் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளனர்.

 

மொத்த மதிப்பு

இந்த மொத்த திட்டத்தின் மதிப்பு 605 கோடி ரூபாயாக இருக்கும் எனத் தகவல் கிடைத்துள்ளது. இதில் இருக்கும் வீடுகளில் 52 சதவீதம் விற்பனையாகியுள்ளது என எம்பசி நிறுவனத்தின் தலைவர் ரீசா தெரிவித்துள்ளார்.

2018 மத்தியில்..

இந்த 30 மாடி கட்டிடத்தின் பணி 2018ஆம் ஆண்டின் மத்தியில் முடிவடையும் எனத் தெரிகிறது. இந்த 50 கோடி ரூபாய் வீட்டை வாங்கிய பிரபு இதன் 75 சதவீத தொகையைச் செலுத்தியுள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல் கிடைத்துள்ளது.

பிளிப்கார்ட் பின்னி பன்சால்

கடந்த வருடம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைவரான பின்னி பன்சால் பெங்களுரில் பிரபலமான இடங்களில் ஒன்றான கோரமங்களா 3வது பிளாக்கில் 10,000 சதுரடியில் ஒரு வீட்டை 32 கோடி ரூபாய்க்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

flat sells at Rs.50 crore, highest ever in Bengaluru

flat sells at Rs.50 crore, highest ever in Bengaluru
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns