புல்லட் ரயில் இருக்கட்டும் கொஞ்சம் இத பாருங்க..!

மோடியின் ஆட்சியில் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை உயர்வு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மோசமான பட்டினி பிரச்சனை குறித்த ஆய்வு அறிக்கையான உலகளாவிய பசி குறியீடு அன்மையில் வெளியாகியுள்ளது. அந்தப் பட்டியலில் வட கொரியா, வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளை விடப் பட்டினியுடன் மக்கல் அதிகம் வசிக்கும் நாடாக இந்தியா உள்ளது.

வேண்டும் என்றால் பாகிஸ்தான் நம்மை விட மோசமான நிலையில் உள்ளது என்று பெறுமைபட்டுக்கொள்ளலாம்.

 இந்தியா

இந்தியா

199 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியா 100வது இடத்தினைப் பிடித்துள்ளது. இதுவே சென்ற ஆண்டு 97 வது இடத்தினைப் பிடித்து இருந்தது.

எதன் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றது?

எதன் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றது?

ஒரு நாட்டின் பசி பிரச்சனை என்பது குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைவினை வைத்தும் கணக்கிடப்படுகின்றது. மேலும் இது குறித்துச் சமுகத் துறைக்கு வலுவான அர்ப்பணிப்பு தேவை என்றும் உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனமான IFPRI அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆசியா நாடுகள் பட்டியல்

ஆசியா நாடுகள் பட்டியல்

ஆசியா நாடுகளில் மூன்றாவது மிக மோசமான பசி பட்டினி உள்ள நாடாக இந்தியா இருப்பதாகவும், அதற்கு அடத்த இடத்தில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர் அதிகரிப்பில் இந்தியாவின் ஊட்டச்சத்து குறைபாடு

தொடர் அதிகரிப்பில் இந்தியாவின் ஊட்டச்சத்து குறைபாடு

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இந்தியாவின் தற்போதைய 31.4 என்ற மதிப்பு மிகவும் மோசமானது என்றும் கூறப்படுகின்றது.

தெற்கு ஆசிய நாடுகள்

தெற்கு ஆசிய நாடுகள்

உலக அளவில் ஒப்பிடும் போது தெற்கு ஆசிய நாடுகள் இந்த ஆண்டு ஆப்ரிக்க நாடுகளுக்கு இணையாக மிக மோசமான நிலையினை எட்டியுள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்டை நாடுகள்

அண்டை நாடுகள்

இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா 28வது இடத்தினையும், நேபால் 72 வது இடத்தினையும், மியான்மார் 77 வது இடத்தினையும், இலங்கை 84வது இடத்தினையும், வங்கதேசம் 88வது இடத்தினையும் பாக்கிஸ்தான் 106வது இடத்தினையும், ஆப்கானிஸ்தான் 107 வது இடத்தினையும் பட்டினி பட்டியலில் பிடித்துள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு

ஊட்டச்சத்து குறைபாடு

இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 5-ல் ஒன்றுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் 2005-2006 நிதி ஆண்டை விட மோசமான நிலையினை இந்தியா 2015-2016 நிதி ஆண்டில் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மக்கள் நல்வாழ்வுக்கு ஒதுக்கப்படும் நிதி

மக்கள் நல்வாழ்வுக்கு ஒதுக்கப்படும் நிதி

உலகிலேயே மக்கள் நல்வாழ்வுத் துறைக்குப் பொது நிதியை(Public Funding) குறைவாக ஒதுக்கும் நாடு இந்தியா.மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4 விழுக்காடுதான் மத்திய - மாநில அரசுகள் மக்கள் நல்வாழ்வுத்துறைக்காக ஒதுக்குகின்றன. உலகச் சராசரி 6.0 விழுக்காடாகும். ரஷ்யா 3.7,சீனா 3.1,தென் ஆப்ரிக்கா 4.2,இலங்கை 2.0 தாய்லாந்து 3.2 விழுக்காட்டையும் ஒதுக்குகின்றன. மத்தியில் மோடி பிரதமர் ஆனவுடன் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ,2015 ல் 20 விழுக்காடு குறைக்கப்பட்டது.

இது மோசமான நடவடிக்கையாகும். எனவே, மத்திய மாநில அரசுகள் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை உலக நல நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது போல் ,ஜி.டி.பி யில் 5 விழுக்காடு ஒதுக்க வேண்டும். அனைவருக்கும் நலவாழ்வு என்பதை மத்திய அரசு அடிப்படை உரிமையாக அறிவிக்க வேண்டும் என்று சமூகச் சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கூறியுள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India ranked 100th among 119 as hunger gets worse

India ranked 100th among 119 as hunger gets worse
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X