உஷார்.. உங்கள் தீபாவளி ஷாப்பிங் புகைப்படங்களை சமுக வலைத்தளங்களில் வெளியிட வேண்டாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்மார்ட்போன் உலகில் ஷாப்பின் செய்வது, புதியதாகக் கார் வாங்குவது, ஹோட்டலில் உணவு சாப்பிடுவது என அனைத்தையும் உடனுக்குடன் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமுக வலைத்தளங்களில் பதிவேற்றுவது வாடிக்கையாகிவிட்டது.

 

ஆனால் நடப்பு தீபாவளியின் போது நீங்கள் வாங்கும் ஆடம்பர பொருட்கள் குறித்த விவரங்களைச் சமுக வலைத்தளங்களில் வெளியிட வேண்டாம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

கருப்புப் பணம்

கருப்புப் பணம்

தீபாவளி ஷாப்பிங் செய்யும் போது நீங்கள் வாங்கிய ஆடம்பர பொருட்கள் குறித்து இணையதளத்தில் பதிவேற்றினால் அது குறித்து வருமான வரித் துறையினருக்குக் கருப்புப் பணமா, வை ஏய்ப்பு செய்துள்ளீர்களா என்று ஆராய்ந்து சந்தேகம் வரும் போது உங்களுக்கு நோட்டிஸ் அனுப்பப்படும், மேலும் உங்கள் வீட்டில் சோதனை வருமான வரித் துறை அதிகாரிகளும் வரக் கூடும்.

சமுக வலைத்தளச் சோதனை

சமுக வலைத்தளச் சோதனை

பிராஜக்ட் இன்சைட் என்ற திட்டத்தின் மூலம் சமுக வலைத்தளங்களில் நீங்கள் செய்யும் பதிவை வைத்து உங்கள் வருமான மற்றும் பதிவுக்கும் ஏதாவது முரண்பாடு இருக்கும் நிலையில் உங்களது செலவு குறித்த விவரங்களை ஆராய்ந்து கண்காணித்து நோட்டிஸ் அனுப்ப பிக் டேட்டா அனலிட்டிக்ஸ் குழு ஒன்று வருமான வரித்துறையால் அமைக்கப்பட்டுள்ளது.

எல்&டி
 

எல்&டி

பிராஜக்ட் இன்சைட் திட்டத்திற்காக எல்&டி நிறுவனத்துடன் வருமான வரித்துறை ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுள்ளது. இதனால் வரி ஏய்ப்புச் செய்பவர்களை மேலும் கண்டறிய முடியும், வரி இணக்கத்தை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகின்றது.

பிராஜெக்ட் இன்சைட் என்ன செய்யும்?

பிராஜெக்ட் இன்சைட் என்ன செய்யும்?

பிராஜெக்ட் இன்சைட் பிரிவு வருமான வரி துறையின் கீழ் செயல்பட்டு அதிக மதிப்புடைய பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களைச் சமுக வலைத்தளம் மூலம் கண்டறிந்து கருப்புப் பணம் ஏதேனும் வெளியில் வந்துள்ளதா என்பதைக் கண்டறிய உதவும்.

வருமான வரித் துறை எப்படிக் கண்டு பிடிக்கும்?

வருமான வரித் துறை எப்படிக் கண்டு பிடிக்கும்?

வருமான வரித் துறை உங்களது வருமானம் மற்றும் செலவுகள் குறித்து ஆய்வு செய்து இரண்டும் ஒத்துப்போகின்றதா என்று பார்க்கும். ஒருவேலை இல்லை என்றால் கருப்புப் பணம் செலவு செய்யப்பட்டுள்ளது, இதற்கான வருவாய் எப்படி வந்தது என்று ஆராய்ந்து நோட்டிஸ் அனுப்பும்.

ஆதார், பான் இணைவு

ஆதார், பான் இணைவு

மத்திய அரசு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கக் கோரியதன் மூலம் 360 டிகிரியிலும் ஒருவரின் வருமானம் மற்றும் சொத்துக்கள் எவ்வளவு என்று ஆராய முடியும்.

ஆப்ரேஷன் கிளீன் மணி

ஆப்ரேஷன் கிளீன் மணி

பண மதிப்பு நீக்க நடவடிக்கையினை அடுத்து ஆப்ரேஷன் கிளீன் மணி என்ற அதிட்டத்தின் கீழ் வருமான வரித் துறை கருப்புப் பணம் குறித்த சோதனைகளில் தீவரமாக ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Do not publish shopping photos on your Diwali on social networks

Do not publish shopping photos on your Diwali on social networks
Story first published: Monday, October 16, 2017, 13:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X