அமெரிக்காவின் பெரிய புள்ளிகளை சந்திக்கும் யோகி ஆதித்யநாத்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

உத்திரபிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத்-ஐ பிஜேபி அரசு நியமித்த முதல், பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். இவரது கருத்துக்குச் சில ஆதரவும் தெரிவித்தாலும் பெரும் பகுதியினர் எதிர்ப்பை நேரடியாகவே தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், யோகி ஆதித்யநாத்-ஐ நேரடியாகச் சந்திக்க அமெரிக்காவின் 20 முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் இந்தியா வருகின்றனர்.

திங்கட்கிழமை

அமெரிக்காவின் போயிங், பிராட் அண்ட் விட்னி, மெர்க், மெட்ராடினிக், கார்கிள் போன்ற முன்னணி நிறுவன தலைவர்கள் அமெரிக்கா-இந்தியா மூலோபாயக் கூட்டுக் கருத்துக்களம் (USISPF) அடிப்படையில் திங்கட்கிழமை உத்தரபிரதேசத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் சித்தார்த் நாத் சிங் மற்றும் முதலமைச்சர் ஆகியோரைச் சந்திக்க உள்ளனர்.

உத்திரபிரதேசம்

இந்தியாவில் மக்கள் தொகை அதிகக் கொண்ட மாநிலங்களில் ஒன்றான உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஆதித்யநாத் தலைமையிலான அரசின் புதிய வர்த்தகச் சந்தைக்கும் புதிய தொழில் துவங்கவும் உருவாக்கப்பட்டுள்ள கொள்கைகள்யில் மாநில அரசு சில முதலீட்டுச் சலுகைகளையும் அளிக்க முடிவு செய்துள்ளது.

இதனை முக்கிய அம்சமாக முன்வைத்து முதலீட்டையும் நிறுவனத்தையும் ஈர்க்க USISPF மூலம் அமையும் இந்தக் கூட்டம் சிறந்த வாய்ப்பாக அமையும் என எதிர்பார்ப்பதாக USISPF அமைப்பு தெரிவித்துள்ளது.

 

இக்கூட்டத்தில்

இக்கூட்டம் போயிங் இந்தியா தலைவர் பிரத்யூஷ் குமார் தலைமையில் கார்கில், பேஸ்புக், அடோப், கோகோ கோலா, மாஸ்டர்கார்டு, மோசான்டோ, யூபர், ஹனிவெல் பி அண்ட் ஜி, ஆரக்கிள் மற்றும் ஜிஈ ஹெல்த் ஆகிய நிறுவனங்களின் இந்திய மற்றும் அமெரிக்கத் தலைவர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

தமிழ்நாடு

தமிழ்நாட்டிலும் ஜெ. முதல்வராக இருந்த போது குளோபல் இன்வெஸ்டார்ஸ் மீட் நடந்தது இதில், பல லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீடும் வர்த்தகத்திற்கும் பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது குறிப்பிட்டதக்கது.

இந்த ஒப்பந்தம் மூலம் புதிய வர்த்தாலும், முதலீடாலும் தமிழ்நாட்டில் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையில் எவ்விதமான வளர்ச்சியும் தெரியவில்லை.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

US big shots meeting with Yogi Adityanath

US big shots meeting with Yogi Adityanath - Tamil Goodreturns | யோகி ஆதித்யநாத்-ஐ சந்திக்க வரும் அமெரிக்காவின் பெரிய புள்ளிகள்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns