ஜியோ வழங்கும் புதிய பிரீபெய்டு திட்டங்கள்.. முழுப் பட்டியல்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அக்டோபர் 19 முதல் புதிய பிரீபெய்டு திட்டங்களை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இருந்த திட்டங்களின் செல்லுபடியாகும் நாட்களைக் குறைத்துள்ளது.

இதற்கான முடிவை ஜியோ நிறுவனம் ஜியோ ரீசார்ஜ் செய்யும் போது 100 சதவீத கேஷ் பேக் ஆஃபரை அறிவித்த போதே முடிவு செய்தது. எனவே ரீசார்ஜ் பேக்குகளில் என்ன மாதிரியான மாற்றங்களை எல்லாம் செய்துள்ளது என்ற முழுப் பட்டியலை இங்குப் பார்ப்போம்.

ரூ.4,999

இந்தத் திட்டத்தின் கீழ் ஜியோ பயனர்கள் 360 நாட்களுக்கு 350 ஜிபி 4ஜி தரவு, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்புகள் போன்றவற்றை ஜியோ செயலிகளின் இலவச சந்தாவுடன் பெறலாம். தினசரி தரவு வரம்பு ஏதும் இல்லை.

ரூ.1,999

180 நாட்கள் வரம்புடன் 125 தரவை இந்தத் திட்டத்தில் பெற முடியும். தினமும் 100 இலவச எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்புகள் போன்றவற்றை ஜியோ செயலிகளின் இலவச சந்தாவுடன் பெறலாம். தினசரி தரவு வரம்பு ஏதும் இல்லை.

ரூ.999

இந்தத் திட்டத்தின் கீழ் 90 நட்கள், 60 ஜிபி தரவை பெறலாம். தினமும் 100 இலவச எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்புகள் போன்றவற்றை ஜியோ செயலிகளின் இலவச சந்தாவுடன் பெறலாம். தினசரி தரவு வரம்பு ஏதும் இல்லை.

ரூ.509

இந்தத் திட்டத்தில் 49 நாட்களுக்குத் தினமும் 2 ஜிபி தரவு வரம்புடன் பெற முடியும். குறைந்த விலையில் 98 ஜிபி தரவு மற்றும் இலவச குரல் அழைப்புகளைப் பெறலாம். ஜியோ செயலிகளையும் பயன்படுத்த முடியும்.

ரூ.499

புதிய திட்டமான இதில் 84 நாட்களுக்குத் தினமும் 1 ஜிபி தரவுடன் 84 நாட்களுக்குப் பெறலாம். தினமும் 100 இலவச எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்புகள் போன்றவற்றை ஜியோ செயலிகளின் இலவச சந்தாவுடன் பயன்படுத்த முடியும்.

ரூ.399

இந்தத் திட்டத்தில் 70 நாட்களுக்குத் தினமும் 1 ஜிபி தரவு, இலவச குரல் அழைப்புகள் போன்றவற்றைத் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ், ஜியோ செயலிகளின் இலவச சந்தாவுடன் பயன்படுத்த முடியும்.

ரூ.149

இலவச குரல் அழைப்புகள், தினமும் 150 எம்பி என மொத்தமாக 4.2 ஜிபி தரவு, 300 இலவச எஸ்எம்எஸ் என 28 நாட்களுக்குப் பெற முடியும்.

ரூ.98

தினமும் 150 எம்பி என 2.1 ஜிபி தரவு வரம்பு, இலவச குரல் அழைப்பு என மொத்தமாக 14 நாட்களுக்கு 140 எஸ்எம்எஸ் உடன் பெற முடியும்.

ரூ.52

தினமும் 150 எம்பி என 7 நட்களுக்கு இலவச குரல் அழைப்புகள், 70 எஸ்எம்எஸ் உடன் 1.05 ஜிபி தரவை பயன்படுத்த முடியும். ஜியோ செயலிகளையும் பயன்படுத்தலாம்.

பிரீபெய்டு

பிரீபெய்டு திட்ட அட்டவணை

போஸ்ட்பெய்டு

போஸ்ட்பெய்டு திட்ட அட்டவணை

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jio offers new prepaid plans: Full list

Jio offers new prepaid plans: Full list
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns