அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு போட்டியாக வர உள்ள எதிர்கால இந்தியாவின் டாப் 7 ஸ்மார்ட் நகரங்கள்!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

வரும் ஆண்டுகளில் 7 ஸ்மார்ட் நகரங்கள் இந்தியாவில் உருவாக உள்ளன. இந்த நகரங்கள் தான் வருங்காலத்தில் இந்தியா எப்படி மார்டனாக இருக்கும் என்று வரையறுக்கும்.

தமிழகத்தில் வர உள்ள ஸ்மார்ட் நகரங்களின் நிலை என்ன தெரியாத நிலையில் இந்தியாவில் விரைவில் வர உள்ள முக்கிய ஸ்ஆர்ட் நகரங்கள் பற்றி விளக்கமாக இங்குப் பார்ப்போம்.

டோலேரா ஏஸ்ஐஆர், குஜராத்

டோலேரா எஸ்ஐஆர் ஸ்மார்ட் நகரம் அகமதாபாத் மாவட்டத்தில் காம்பாட் வளைகுடாவில் உள்ளது, இந்த இடம் டெல்லி மற்றும் மும்பை இடையாலான தொழில்களுக்குப் பாலமாகவும் உள்ளது. டோலேரா எஸ்ஐஆர் நகரம் 35,000 ஹெக்டரில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. ரயில், சாலை போக்குவரத்து, சர்வதேச விமான நிலையம், மெட்ரோ மற்றும் துறைமுகம் என உலகத் தரம் வாய்ந்த தரத்துடனான இன்ப்ராஸ்ட்ரக்ச்சர் உடன் டிஎம்ஐசி திட்டத்தின் கீழ் டோலேரா திர்கால ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்பட்டு வருகின்றது. டோலேரா (எஸ்ஐஆர்) திட்டத்தின் முதற்கட்ட பணிகள் 2019-ம் ஆண்டு முடியும். இதன் மூலம் 30 லட்சம் நபர்களுக்கு உற்பத்தி, செயல்பாடு மற்றும் சேவை துறைகளில் வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்தத் திட்டம் முடிவடையும் போது உலகின் மிகப் பெரிய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டமாக இது இருக்கும். இந்தியாவின் மிகப்பெரிய திட்டமான இதன் மதிப்பு 20 பில்லியன் டாலர்கள் ஆகும், அதுமட்டும் இல்லாமல் சீனாவின் ஷாங்காய்யை விட 6 மடங்கு பெரியதாகவும் இருக்கும்.

கிப்ட் சிட்டி - குஜராத் இண்டனேஷ்னல் ஃபினான்ஸ் டெக்-சிட்டி, குஜராத்

கிப்ட் சிட்டி (குஜராத் இன்டர்நேஷனல் ஃபினான்ஸ் டெக் சிட்டி) 359 ஹ்க்டேர் (886 ஏக்கர்) நிலப்பரப்பில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. இந்த ஐகானிக் நகரம் அகமதாபாத் மற்றும் காந்திநகர் இடையில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. இது இந்தியாவின் முதல் ஸ்மார்ட் நகரம் ஆகும், அதுமட்டும் இல்லாமல் 5 லட்சம் நபர்களுக்கு நேரடியாகவும், 5 லட்சம் நபர்களுக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும். கிப்ட் சிட்டி அகமதாபாத்தினை இந்தியாவின் நிதி நகரமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் ஐடி, டெக் நிறுவனங்கள், இண்டெர்னேஷ்னல் வங்கிகள், பங்கு சந்தை எக்ஸ்சேஞ்ச், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிறவற்றுடன் கட்டமைக்கப்பட்டு வருகின்றது.

கிப்ட் சிட்டியில் மொத்தம் 219 அதிக உயர கட்டடங்கள் மற்றும் 150 மீட்டர் உயர் கட்டிடங்கள் மட்டும் இல்லாமல் 400 மீட்டர் கர்வுன் ஜூவல் டைமண்டு டவர் போன்றவை 12 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டு வருகின்றது. 2025-ம் ஆண்டு இந்த நகரம் முழுமையாகக் கட்டி முடிக்கும் போது 50,000 நபர்களுக்கு வீடாக இருக்கும். இங்குப் பட்டியலிடப்பட்டுள்ள டாப் 7 ஸ்மார்ட் நகரங்களில் சிறந்தது கிப்ட் சிட்டி ஆகும்.

 

அமராவதி, ஆந்திர பிரதேசம்

புதிதாக மாநிலமாகப் பிரிக்கப்பட்ட ஆந்திர பிரதேசத்தின் தலை நகரமாக முன்மொழியப்பட்ட நகரம் அமராவதி ஆகும். குண்டூர் மாவட்டத்தில் அமையவுள்ள அமராவதி நகரம் 10 வருடத்திற்குள் 54,000 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட உள்ளது. டவர் போன்ற கட்டடங்கள், கண்ணடி கட்டடங்கள், நகரம் முழுவதும் பரந்த வழிகள், நீர்வழி போக்குவரத்து, 35 கிமு தொலைவிற்கு நடைபாதைகள், சிறப்பான தங்கும் இடங்கள் போன்றவற்றை அமைக்க உள்ளனர். இந்த நகரம் முழுவதும் வரலாற்றைக் குறிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட உள்ளது. 2050-ம் ஆண்டிற்குள் புதிதாக 18 லட்சம் நபர்களுக்கு இந்த நகரத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும், அந்த நேரத்தில் தலை நகர் முழுவது 5.6 மில்லியன் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து இருக்கும். அமராவதியின் சீடு கேப்பிட்டல் பகுதி நகரத்தின் மையமாகவும், வீட்டுவசதி அலுவலகங்கள், வணிக மாவட்டங்கள் மற்றும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை இருக்கக் கூடியதாகவும் அமைக்கப்பட உள்ளது. உலகத் தரம் வாய்ந்த வடிவமைப்பாளர்களுடன் இணைந்து இந்த நகரம் கட்டமைக்கப்பட உள்ளது. இந்தியாவின் ஸ்மார்ட் நகரஙளுக்கு மிகப் பெரிய உதாரணமாக அமராவதி இருக்கும்.

டிரீம் சிட்டி - டைமண்டு ரிசர்ச் மற்றும் மெர்கண்ட்டைல் சிட்டி, சூரத்

டிரீம் சிட்டி - டைமண்டு ரிசர்ச் மற்றும் மெர்கண்ட்டைல் சிட்டி லேண்டுமார்க் பியூச்சர் சிட்டியாக 2,000 ஏக்கர் பரப்பில் தென் மேற்கு சூரத்தில் கட்டமைக்கப்பட உள்ளது. டிரீம் சிட்டி திட்டத்தில் உலகத் தரம் வாய்ந்த தரமான மற்றும் சமுகக் கட்டமைப்புக் கொண்டதாக டைமண்டு நகரமான சூரத்தினை மாற்ற உள்ளது. வைபை, ஸ்மார்ட் மற்றும் புத்திசாலித்தனமான அமைப்பு மற்றும் ஆதரவு வசதிகள், சர்வதேச மாநாட்டு மையம் மற்றும் விமான இணைப்பு, மோனோரயில் உள்ளைஇட மார்டன் வசதிகள் இங்கு இருக்கும்.

இந்த ஸ்மார்ட் நகரத்தில் 5 முதல் 7 ஸ்டார் ஹோட்டல்கள், வங்கிகள், ஐடி, கார்ப்ரேட் டிரேடிங் அலுவலகங்கள், பொழுதுபோக்குத் தளம் உள்ளிட்டவையுடன் அமைக்கப்பட்டு இருக்கும்.100க்கும் மேற்பட்ட உயர்ந்த கட்டிடங்கள் டிரீம் சிட்டில் கட்டப்படும். டிரீம் சிட்டி திட்டம் காந்திநகர் கிப்ட் சிட்டிக்கு ஏற்றார் போல அமைக்கப்பட உள்ளது. முக்கியமான இந்த டிரீம் சிட்டியில் வானுயர்ந்த கட்டிடங்கள், அலுவலகங்கள், பொருட்காட்சி கட்டிடங்கள், பயிற்சி பள்ளிகள் மற்றும் தனியார், பொதுத் துறை வங்கிகளும் அமைக்கப்பட்டு இருக்கும்.

 

கான்பூர் | டிரான்ஸ் கங்கா சிட்டி

கங்கை நதி கரையில் 1,156 ஏக்கர் நிலப்பரப்பில் கான்பூர் நகரத்தில் டிரான்ஸ் கங்கா சிட்டி அமைக்கப்படுகின்றது. டிரான்ஸ் கங்கா மாஸ்ட்டர் திட்டத்தினை ஸ்டூடியோ சிம்பையாசிஸ் தனித்துவமாகச் செயல்படுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த எதிர்கால ஸ்மார்ட் நகரங்கள் கலவையான பயன்பாட்டுத் திட்டமாக உருவாக்கப்பட்டு, வர்த்தக, தொழில்துறை, கலப்பு பயன்பாடு, குடியிருப்பு மற்றும் பொது வசதிகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

இந்த ஸ்மார்ட் நகரத்திலும் கூட்டுறவு வீடுகள், பொருட்காட்சி மையங்கள், மல்ட்டிபிளக்ஸ், மெகா மால் மற்றும் பல அடுக்கு மாடி அப்பார்ட்மெண்ட்டுகள் போன்றவை கட்டப்படும். அனைத்துத் தொழிற்சாலைகளும் காற்று மாசுபடாமல் இருக்கும். இயற்கையான குலுமை, பசுமையான கூரைகள், சோலார் பேனல்கள், ரீசார்ஜ் செய்யக்கூடிய தண்ணீர், ழிவு மேலாண்மை ஆகியவை முன்மொழியப்பட்டுள்ளன.

 

யீதா சிட்டி- கிரேட்டர் நொய்டா

யீதா என அழைக்கப்படும் யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் தெற்கு கிரேட்டர் நொய்டாவில் 50,0000 ஹெக்டேர் நிலப்பரப்பில் யீதா சிட்டியினை அமைக்க இருக்கின்றது. இந்த எதிர்கால நகரத்தில் தொழில் சார்ந்த வணிக அலுவலகங்கள், குடியிருப்பு, உணவகங்கள் மற்றும் சில்லறை இடங்கள், விடுதிகள், மாநாடு மற்றும் கண்காட்சி மையம், விமான நிலையம், மெட்ரோ இரயில், நெடுஞ்சாலைகள் போன்ற நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடியதாக இருக்கும். மேலும் இந்த நகரம் உயர் கல்வி வசதிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பூங்கா, உலக வர்க்க விளையாட்டு நகரம், பல்கலைக் கழகங்கள், மருத்துவ மையங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். முழுத் திட்டமும் 20 ஆண்டுகளில் நிறைவடையும்.

கேச்ட் சிட்டி, புனே

கேச்ட் சிட்டி 4200 ஏக்கர் பரப்பளவில் பரந்தளவிலான உள்கட்டமைப்பு வசதிகளுடன் புனேவுக்கு அருகாமையில் அமைக்கப்படுகின்றது. நடந்தே வீட்டில் இருந்து வேலைக்குச் சென்று வருவதற்கு ஏற்ற வகையில் குடியிருப்பு, கல்வி, பொழுதுபோக்கு, சுகாதாரம், பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் இதர வசதிகள் இந்த நகரத்தில் கிடைக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Top 7 Future Smart Cities of India

Top 7 Future Smart Cities of India
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns