இந்தியா மட்டும் இல்லாமல் உலகளவில் கலக்கி வரும் டாப் 10 ரீடெய்ல் நிறுவனங்கள்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

இந்தியாவின் 10 சதவீத ஜிஎஸ்டி ரீடெய்ல் துறையிடம் தான் உள்ளது. இந்தியா பொருளாதாரத்தில் இது முக்கியப் பங்களிப்பை அளிக்கின்றது. இந்தியாவில் பல டாப் ரீடெய்ல் நிறுவனங்கள் எலக்டிரானிக்ஸ், பேஷன், உணவு, காய் கறிகள், போன்ற பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. எனவே இந்தியாவின் டாப்10 ரீடெய்ல் நிறுவனங்கள் பட்டியலை இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.

இந்தியாவின் டாப்10 ரீடெய்ல் நிறுவங்கள் பட்டியலை இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.

10. கேவல் கிரண் கிளாத்திங் லிமிடெட்

1971-ம் ஆண்டு மும்பையினைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பேஷன் மற்றும் லைப் ஸ்டைல் சார்ந்த பொருட்களை இந்திய ரீடெய்ல் நிறுவனமான கேவல் கிரண் கிளாத்திங் துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் மேற்கத்திய அடைகளை இண்டெக்ரிட்டி, கில்லர், இயசியஸ், லாவமேன் பிஜி3 போன்ற பிராண்டுகளின் பெயரில் வடிவமைத்து,உற்பத்தி செய்து உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வருகின்றது. ஆசியா,மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்து வரப்படும் முக்கியமான பிராண்டாக இது உள்ளது. உலகம் முழுவதும் 100 நேரடி ஷோரூம்களை இந்த நிறுவனம் வைத்துள்ளது.

9. டைட்டன்

1984-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட டைட்டன் நிறுவனம் டாடா மற்றும் தமிழ்நாடு தொழிற்துறை மேம்பாட்டுக் கழகத்துடன் கூட்டாகத் துவங்கப்பட்டதாகும். டைட்டன் நிறுவனம் தரமான கை கடிகாரங்கள் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் நகைகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகின்றது. உடல் நறுமண ஸ்பிரே, பெல்ட், ஹெலிமெட் மற்றும் கண் கண்ணாடி போன்ற பொருட்களை வெவ்வேறு பிராண்டுபெயரில் டைட்டன் நிறுவனம் விற்பனை செய்து வருகின்றது. இந்தியாவின் நம்பர் 1 வாட்ச் நிறுவனமாகவும் உலகளவில் 5-ம் மிகப்பெரிய இண்டெக்ரேட்டட் வாட்ச் உற்பத்தி செய்யும் நிறுவனமாக டைட்டன் உள்ளது.

8. ஆதித்யா பிர்லா ரீடெய்ல்

ஆதிதியா பிர்லா குழுமத்தின் துணை நிறுவனமாக ஆதித்யா பிர்லா ரீடெய்ல் 41 பில்லியன் டாலர் மதிப்புடன் வணிகம் செய்து வருகின்றது. 2006-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. நாடு முழுவதும் 500 சூப்பர் மார்கெட் நிறுவங்களும் 19 ஹைப்பர் மார்கெட் நிறுவனங்கள் போன்றவற்றை ஆதித்யா பிர்லா ரீடெய்ல் தெரிவித்துள்ளது. பார்ச்ச்யூன் 500 பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆதித்யா பிர்லா ரீடெய்ல் ரெடி டூ ஈட் உணவுகள், பீவரேஜஸ், மளிகை சாமணங்கள், அப்பேரல்கள், வீட்டிற்குத் தேவையான பொருட்கள், தனிநபருக்குத் தேவையான பொருட்கள் , பொதுவான விற்பனைப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றது. 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை இந்த நிறுவனத்தில் 11,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

7. மெக்டொனால்டு

சர்வதேச ஃபாஸ்ட்புட் நிறுவனமான மெக்டொனால்டு இந்தியாவில் தங்களது விற்பனையகங்களை 1996-ம் ஆண்டு முதல் 300-க்கும் மேற்பட்ட கடைகளுடன் நடத்தி வருகின்றது. உலகம் முழுவதிலும் 130 நாடுகளில் இந்தப் பாஸ்ட்புட் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.பர்கர்கள், வறுக்கப்பட்ட உணவுகள் மற்றும் சிக்கன் உணவுப் பொருட்களை இந்த நிறுவனம் விற்பனை செய்கின்றது. இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகங்கள் ஓக் புரூக், இல்லினோஇஸ் ஆகிய இடங்களில் உள்ளது.

6. டிரெண்ட் லிமிடெட்

இந்திய ரீடெய்ல் நிறுவனமான டிரெண்ட் 1998-ம் ஆண்டு முதல் மும்பையினைத் தலைமை இடமாகக்கொண்டு செயல்பட்டு வருகின்றது, இந்தியாவின் மிகப்பெரிய டாடா குழுமத்தின் ஒரு பிரிவே டிரெண்ட் லிமிடெட் ஆகும். வெஸ்ட் சைடு, ஸ்டார் பஜார் மற்றும் லேண்டு மார்க்குக்களை இயக்கி வரும் டிரெண்ட் உணவு, பானங்கள், காலணி, பேஷன் பாகங்கள், ஆடைகள், சுகாதாரம் மற்றும் அழகு பொருட்கள், வீட்டுப் பொருட்கள் மற்றும் மின்னணு பொருட்கள் போன்றவற்றை 30 கடைகளைக் கொண்டு விற்பனை செய்து வருகின்றது.

5. ஐடிசி - லைப்ஸ்டைல் ரீடெய்லிங் பிஸ்னஸ்

ஐடிசி நிறுவனம் தனது ரீடெய்ல் வணிகத்தினை வில்ஸ் லைப்ஸ்டைல் மற்றும் ஜான் பிளேயர் பிராண்டுகளில் செய்து வருகின்றது. வில்ஸ் லைப்ஸ்டைல் நிறுவனம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரீமியம் பேஷன் அடாஇ அணிகலன்களை விற்பனை செய்து வருகின்றது. ஜான் பிளேயர்ஸ் நிறுவனம் ஆண் சிறுவர்களுக்கான பிரீமியம் ஆடைகளை விற்பனை செய்கின்றது. மேல்ய்ம் ஐடிசி நிறுவனத்தில் டார்க் ஃபேண்ட்டசி, டெலிஷியஸ், யிப்பி, கேண்டிமேன், சன்பீஸ்ட், கிட்ச்சன்ஸ் ஆப் இந்தியா, ஃபியாம டி வில்ல்ஸ் மற்றும் பிற பிரபல பிராண்டுகளும் உள்ளன. கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஐடிசி 1910-ம் ஆண்டுத் துவங்கப்பட்டது.

4. ஷாப்பர்ஸ் ஸ்டாப்

1991-ம் ஆண்டு மும்பையினைத் தலைமையிடமாகக் கொண்டு ஷாப்பர்ஸ் ஸ்டாப் நிறுவனம் துவங்கப்பட்டது. தேசிய மற்றும் சர்வதேச பிராண்டட் பொருட்களை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்குமான பொருட்களும் இங்குக்கிடைக்கும். இந்தியா முழுவதும் 74 கடைகளுடன் இயங்கிவரும் ஷாப்பர்ஸ் ஸ்டாப் இந்தியாவின் டாப்10 ரீடெய்ல் நிறுவனங்களில் ஒன்றாகும்.

3. பிரோவாங்யூ இந்தியா லிமிடெட்

பிரோவாங்யூ இந்தியா லிமிடெட் இந்தியாவில் இருந்து 1997-ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. இதன் தலைமையிடம் மும்பையில் உள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தரமான உடைகளை இந்த நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றது. இந்தியாவின் மிகப் பெரிய பிராண்டாக இது உள்ளது.இந்தியாவில் மட்டும் 250 கடைகள் இந்த நிறுவனத்திற்கு உள்ளது. அதுமட்டும் இல்லாமல் கண் கண்ணடி, உடற் நறுமண ஸ்பிரே, கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றையும் விற்பனை செய்து வருகின்றது.

2. பேண்ட்டாலுன்ஸ் ரீடெய்ல் லிமிடெட்

மகாராஷ்டிராவின் மும்பையினைத் தலைமையிடமாகக் கொண்டு 1997ம் ஆண்டுப் பேட்டாலூன்ஸ் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனம் ரீடெய்ல் மற்றும் லைப்ஸ்டைல் பிரிவில் வணிகம் செய்து வருகின்றது.பாண்டலூன்ஸ் நாட்டிலுள்ள பல்வேறு ஃபேஷன் கடைகளின் சங்கிலியைக் கொண்டுள்ளது, இது ஆடை மற்றும் பேஷன் பாகங்கள், கடிகாரங்கள், சன்கிளாஸ், கைப்பைகள், காலணி, வாசனை மற்றும் பலர் போன்ற பரவலான ஆடைகளை வழங்குகின்றது. பிராண்ட் பேக்ட்டரி, பிக் பஜார், சீதாரா மற்றும் உணவு பஜார் உள்ளிட்ட நிறுவனங்களின் பிராண்டுகளையும் தன் வசம் வைத்துள்ளது.

1. ரிலையன்ஸ் ரீடெய்ல் லிமிடெட்

2006-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் 1500 கடைகளுடன் லைப்ஸ்டைல், காலணி, மளிகை, ஆடைகள், எலெக்ட்டிரானிஸ் மற்ற பல வகையான பொருட்களை விற்பனை செய்து வருகின்றது. ரிலையன்ஸ் பிரெஷ் கீழ் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்கின்றது. ஆண்டுக்கு 3.4 பில்லியன் டாலர் வருவாயினை இந்த நிறுவனம் அளிக்கின்றது. இந்தியாவின் டாப் 10 ரீடெய்ல் நிறுவனங்களில் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனமும் ஒன்றாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Top 10 Best Retail Companies in India 2017

Top 10 Best Retail Companies in India 2017
Story first published: Monday, October 30, 2017, 13:34 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns