விரைவில் ஸ்பைஸ்ஜெட் விமானங்களை நிலம், நீர் என எங்கு வேண்டுமானாலும் நிறுத்தலாம்!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

இந்தியாவில் பட்ஜெட் விமானப் போக்குவரத்துச் சேவையினை அளித்து வரும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மூன்றாம் மிகப் பெரிய உள்நாட்டு விமானப் போக்கு சேவை அளிக்கும் நிறுவனமாக இந்தியாவில் இருக்க வேண்டும் என்று பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

அன்மையில் போயிங் விமானங்களை வங்க கோடி கணக்கில் முதலீடு செய்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஜப்பானிடம் இருந்து நிலம், நீர் என இரண்டிலும் தரை இறக்கம் செய்யக்கூடிய விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது.

ஜப்பான்

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் நிலம், நீர் என இரண்டிலும் தரை இறக்கம் செய்யக்கூடிய 100 விமானங்களை ஜப்பானின் சீடோச்சி ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்க முடிவு செய்துள்ளது.

நீரில் இறங்கும் விமானம்

இதற்காக 400 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்த நாடு முழுவதும் விமானச் சேவை திட்டத்தினை அடுத்த இலக்கை நோக்கிச் செல்ல கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

பேரம்

இரண்டு நிறுவனஞ்கள் இடையிலான பேரம் இன்னும் முடிவக்கு வரவில்லை ஆனால் நவம்பர் மாதம் நீரில் விமானத்தினை இறக்குவதற்கான சோதனை ஓட்டத்தினைச் சீடோச்சி நிறுவனம் செய்து காட்ட போகின்றது.

உள்கட்டமைப்புத் துயரங்கள்

இந்தியாவின் 1.3 பில்லியன் கோடி மக்கள் தொகையில் 97 சதவீதத்தினை விமானத்தில் பயணம் செய்ததில்லை. இதற்கு முக்கியக் காரணம் அனைத்து இடங்களிலும் விமானத்தினைத் தரை இறக்கம் செய்ய முடியாது என்பது ஆகும்.

மத்திய அறிவித்துள்ள 150 இடங்களில் 75 இடங்களில் மட்டுமே வர்த்தக ரீதியாக விமானத்தினை இயக்க முடியும். இதனால் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற விமான நிலயங்களுக்கு விமானங்களைப் பராமரிப்பது, ஓடு பாதையினைப் பராமரிப்பது போன்றவற்றுக்குப் பெறும் தலைவலியாக உள்ளது.

 

கோடியாக் விமானம்

உள்கட்டமைப்புத் துயரங்களில் இருந்து தப்பிக்கும் நோக்கத்தில் நிலம் மற்றும் நீர் என இரண்டிலும் பயணம் செய்யக்கூடிய விமானங்களை ஸ்மைஸ் ஜெட் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த விமானங்களில் 10 நபர்கள் முதல் 14 நபர்கள் வரை பயணம் செய்ய முடியும். இதேப்போன்று இந்தியர் ஒருவர் தயாரித்த சிறிய ரக விமானத்திற்கு அனுமதி அளிக்காததால் அனைத்தையும் மூட்டைக் கட்டிக்கொண்டு அமெரிக்கச் செல்ல முடிவு செய்துள்ளார்.

சுற்றுலா

கோடியாக் விமானங்கள் சுற்றுலா தளங்கள் செல்பவர்களுக்கு அதிகப் பயன் அளிக்கும் என்றும் இதுபோன்ற வழித்தடங்களில் இயக்கலாம் என்று கூறப்படுகின்றது.

தரையிறக்கம்

இந்த விமானத் தரையிறக்கம் செய்யக் குறைந்தது 300 மீட்டர் அளவில் நீர் வேண்டும் அல்லது 1000 மீட்டர் சாலை இருக்க வேண்டும். சென்னை ஈசிஆர் போன்ற சாலைகளில் இந்த விமானங்களைத் தரையிறக்கம் செய்வது எளிதாக இருக்கும்.

முக்கியச் சிக்கல்

இந்தியாவில் இதுபோன்ற ஒற்றை இயந்திரம் மட்டும் வைத்துக்கொண்டு பறக்கும் விமானங்களுக்கு அனுமதியை மத்திய அரசு அளிப்பதில்லை. இதனால் இவற்றை வாங்கும் முன்பு மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Soon Spicejet Planes can land Sea, Fileds, etc.,

Soon Spicejet Planes can land Sea, Fileds, etc.,
Story first published: Tuesday, October 31, 2017, 14:15 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns