ஐடி நிறுவனங்களில் பணிபுரிய விரும்பும் மாணவர்களுக்கு ஓர் எச்சரிக்கை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ஐடி துறை 156 பில்லியன் டாலர் மதிப்புடையது, இவ்வளவு நாட்களாக அதிக வேலை வாய்ப்புகளை அளிக்கும் துறையாக இருந்த வந்தாலும் அன்மை காலத் தரவுகளைப் பார்க்கும் போது சிறிய அளவில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்த வருவதைப் பார்க்க முடிகின்றது.

 

2017 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு அறிக்கையினை வைத்துப் பார்க்கும் போது முக்கிய ஐடி நிறுவனங்களான காக்னிசெண்ட், இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் டெக் மகேந்திர உள்ளிட்ட நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்த நிறுவனங்கள்

ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்த நிறுவனங்கள்

அதே நேரத்தில் டிசிஎஸ் மற்றும் எச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் ஊழியர்கள் எண்ணிக்கை 6 மாதத்தில் அதிகரித்துள்ளது.

குறைந்த எண்ணிக்கை

குறைந்த எண்ணிக்கை

மேலே குறிப்பிட்ட 6 முக்கிய ஐடி நிறுவனங்களும் சென்ற ஆண்டுச் சராசரியாக 60,000 ஊழியர்களைக் கூடுதலாகப் பணிக்கு எடுத்து இருந்தன. இதுவே 2017 நிதி ஆண்டில் 4,157 ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

வேலை வாய்ப்புக் குறைவுக்கான காரணம் என்ன?
 

வேலை வாய்ப்புக் குறைவுக்கான காரணம் என்ன?

ஐடி நிறுவனங்கள் டிஜிட்டல் மற்றும் ஆடோமேஷன் என மாறி வரும் அதே நேரத்தில் வெளிநாட்டில் உள்ள தங்களது கிளைகளுக்கு ஊழியர்களை அனுப்ப முடியாமல் அந்த நாட்டவர்களையே பணிக்கு எடுக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே இந்தியாவில் ஐடி சேவை அளித்து வரும் டாப் 6 நிறுவனங்களில் கடந்த ஆண்டுக்கும், 2017-ம் ஆண்டுக்கும் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை விவரங்களை விளக்கமாக இங்குத் தொகுத்து வழங்கி உள்ளோம்.

 

டிசிஎஸ்

டிசிஎஸ்

டிசிஎஸ் நிறுவனத்தினைப் பொறுத்தவரையில் 2016-ம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு வரை 17,676 நபர்கள் என 3,71,519 ஊழியர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர், இதுவே 2017-ம் நிதி ஆண்டில் 1,990 நபர்கள் மட்டுமே என 3,89,213 ஊழியர்களாக எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

காக்னிசென்ட்

காக்னிசென்ட்

அமெரிக்கத் தொலைத்தொடர்பு நிறுவனமான காக்னிசென்ட்டுக்கு இந்தியாவில் தான் அதிகப்படியான ஊழியர்கள் உள்ளனர். 2016- நிதி ஆண்டில் இருந்ததை விட 5,100 ஊழியர்கள் குறைக்கப்பட்டு 2,56,100 ஊழியர்கள் மட்டுமே பணிப்புரிந்து வருகின்றனர்.

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 2016-ம் ஆண்டு 1,99,829 ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர், ஆனால் 2017-ம் ஆண்டு இரண்டாம் காலாண்டு அறிக்கையின் படி 1,924 ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்து 1,98,440 நபர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.

விப்ரோ

விப்ரோ

விப்ரோ நிறுவனத்தில் 2016-ம் ஆண்டு 1ன்63ன்759 ஊழியர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர், இதுவே 2017 நிதி ஆண்டில் 1,59,791 ஆகக் குறைந்துள்ளது. 1,722 ஊழியர்கள் 4 காலாண்டில் குறைந்துள்ளனர்.

 எச்சிஎல்

எச்சிஎல்

எச்சிஎல் நிறுவனத்தினைப் பொறுத்தவரையில் 2016-ம் ஆண்டு 109,795 ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். இதுவே 2017 நிதி ஆண்டில் 1,19,040 ஆக உயர்ந்துள்ளது.

டெக் மகேந்திரா

டெக் மகேந்திரா

டெக் மகேந்திரா நிறுவனத்தில் 2016-ம் ஆண்டு 1,17,225 ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். ஆனால் 2017 நிதி ஆண்டில் 1,12,886 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.

நாஸ்காம்

நாஸ்காம்

2017-ம் ஆண்டு இந்தியாவில் 1.3 லட்சம் முதல் 1.5 லட்சம் நபர்கள் வரை ஐடி துறையில் வேலை வாய்ப்பினை பெறுவார்கள் என்று நாஸ்காம் கூறியுள்ளது.

 கல்லூரி வளாக நேர்காணல்

கல்லூரி வளாக நேர்காணல்

ஐடி துறையினைப் பொருத்த வரை முக்கிய நிறுவனங்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்குக் கல்லூரி வளாகங்களில் நேர்காணல் நடத்தி ஊழிஒயர்களைப் பணிக்கு எடுப்பது குறைத்து வருகின்றன. எனவே ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தில் எப்படிச் சிறந்து விளங்குவது என்பதை இவர்கள் அறிந்து இருந்தால் சமாளிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indias Major IT companies Infosys, Wipro and Tech Mahindra reduce employee counts

Indias Major IT companies Infosys, Wipro and Tech Mahindra reduce employee counts
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X