உங்கள் ரிடையர்மென்ட்டிற்கு சரியாக திட்டமிட்டுள்ளீர்களா?

நீங்கள் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் சேமிக்கத் தொடங்குமாறு உங்கள் நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்தியிருக்கலாம். எனினும், பெரும்பாலான மக்கள் அத்தகைய சேமிப்புக்கு அவசியம் ஒன்றும் இல்லை என்றே கருதுகின்றனர். அதனால் தங்கள் அந்திமக் காலத்தில் பணத்தட்டுப்பாடினால் அவதியுறுகின்றனர்.

உங்கள் ஓய்வுக் காலத்தில் பணத்திற்குக் குறைவின்றி நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால் இத்தவறை எக்காரணம் கொண்டும் செய்யாதீர்கள். உங்கள் ரிடையர்மென்ட் தொகையைக் கணக்கிடும் போது தவிர்க்க வேண்டிய ஆறு தவறுகள் பின் வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன.

கணக்கீட்டின் போது செய்யப்படும் அடிப்படை அனுமானங்கள்:

கணக்கீட்டின் போது செய்யப்படும் அடிப்படை அனுமானங்கள்:

தற்போதைய வயது: 30 வருடங்கள்
ஓய்வு பெறும் வயது: 60 வருடங்கள்
உயிரோடிருக்கக்கூடிய வயது: 80 வருடங்கள்
சேமிப்புகள் அதிகரிக்கக்கூடிய விகிதம்: 12%
விலையேற்றம்: 6%
மருத்துவ விலையேற்றம்: 10%)

விலையேற்றத்தைப் புறக்கணித்தல்

விலையேற்றத்தைப் புறக்கணித்தல்

விலையேற்றத்தை கண்டுகொள்ளாமல் புறக்கணித்தீர்களானால், ஓய்வுக் காலத்துக்கான உங்கள் கையிருப்பு நெடுநாள் நீடிக்காது. உதாரணமாக, நீங்கள் மாத வருமானமாக 50,000 ரூபாய் சம்பாதிக்கிறீர்கள் என்றும் அதில் உங்கள் மாதாந்திர செலவுகள் சுமார் 35,000 ரூபாய் என்றும் வைத்துக் கொள்ளுவோம். சுமார் 6 சதவீதம் என்ற விகிதத்தில் விலையேற்றம் இருக்கலாம் என்று வைத்துக் கொண்டால், நீங்கள் ஓய்வு பெறும் சமயத்தில் உங்களுக்கு சுமார் 5.76 கோடி ரூபாய் கிடைக்கக்கூடும். எவ்வித விலையேற்றத்தையும் நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால், சுமார் 44.27 லட்சம் ரூபாய் மட்டுமே உங்களால் சேமிக்க முடியும். மருத்துவ விலையேற்றத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாவிடில், சுமார் 3.48 கோடி ரூபாய் வரை கிடைக்கலாம்.

செலவீனங்களைக் குறைத்து மதிப்பிடுதல்

செலவீனங்களைக் குறைத்து மதிப்பிடுதல்

பெரும்பான்மையான மக்கள், ஓய்வுக்குப் பின் தங்கள் செலவீனம் குறையும் என்றே நம்புகின்றனர். ஆனால், உண்மையில் இதை எப்போதும் சாத்தியம் என்று கூற இயலாது. பிள்ளைகளுக்கான செலவுகள் மற்றும் கடன் கட்டணம் போன்றவை குறைந்தாலும் கூட, மருத்துவ செலவுகள் கணிசமாகக் கூடுவதற்கான வாய்ப்பு அதிகம். உங்கள் ஓய்வுக்குப் பிறகான மாதாந்திர செலவாக சுமார் 2.01 லட்சம் ரூபாயை நிர்ணயிப்பீர்களானால், நீங்கள் ஓய்வு பெறும் சமயத்தில் சுமார் 5.76 கோடி ரூபாயை உங்களால் சேமிக்க முடியும். உங்கள் மாதாந்திர வருமானமாக 86,152 ரூபாயை அனுமானித்தீர்களானால் உங்களால் 2.64 கோடி ரூபாய் மட்டுமே சேமிக்க முடியும்.

அதிக அளவில் பணம் எடுத்தல்

அதிக அளவில் பணம் எடுத்தல்

பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்படா வண்ணம், ஒவ்வொரு வருடமும் கணக்கிடப்பட்ட தொகையை மட்டுமே எடுத்து செலவு செய்வதைத் தான் பாதுகாப்பான வித்டிராயல் ரேட் என்று கூறுவர். வருடத்திற்கு சுமார் 3-4% வரை மட்டுமே ஓய்வூதியப் பணத்திலிருந்து எடுப்பது உகந்தது என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், பெரும்பாலான மக்கள் ஒய்வுக்குப் பின் செலவுகள் எதிர்பாராத வகையில் திடீரென உயர்வதாகவும், அதனால் தங்கள் சேமிப்புப் பணம் விரைவாகக் காலியாகி விடுவதாகவும் கூறுகின்றனர்.

குறைந்த காலத்தில் செய்யப்படும் சேமிப்பு

குறைந்த காலத்தில் செய்யப்படும் சேமிப்பு

முன்கூட்டியே முதலீடுகளில் சேமிப்பதற்கு திட்டமிடாத பட்சத்தில், ஓய்வுக் காலம் சமீபிக்கையில் உங்கள் மாதாந்திர முதலீட்டுத் தொகையை நீங்கள் அதிகரித்தாலும் கூட உங்கள் சேமிப்பு பற்றாக்குறையாகத் தான் இருக்கும்.

கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்தல்

கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்தல்

ரிடையர்மென்ட் சமீபிக்கும் காலகட்டத்தில் உங்கள் முதலை பாதுகாக்கும் பொருட்டு ஈக்விட்டி காம்பொனென்ட்டைக் குறைக்க வேண்டியது அவசியம். ஆனால், அதற்காக அதை பூஜ்யத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்று அர்த்தமில்லை. கேபிடல் அப்ரிஸியேஷனுக்காக ஒரு குறிப்பிட்ட பகுதியை ஈக்விட்டியில் முதலீடு செய்வது நல்லது. உதாரணமாக, நீங்கள் கடன் பத்திரங்களில் 100 சதவீதம் முதலீடு செய்தால் 5.76 கோடி ரூபாயானது 8 சதவீத விகிதத்தில் அதிகரித்து, அடுத்த 20 வருடங்களில் சுமார் 26.84 கோடி ரூபாயாக உயரும். ஆனால் நீங்கள் கடன் பத்திரங்களில் 65 சதவீதமும், ஈக்விட்டியில் 3 சதவீதமும் முதலீடு செய்தால், 20 வருடங்களில் உங்களுக்கு 36.89 கோடி ரூபாய் கிடைக்கும்.

கடன் முதலீடுகளுக்கான எஸ்டபிள்யூ மற்றும் எஃப்டிக்களுக்கான வரிவிதிப்புகளின் ஒப்பீடு

கடன் முதலீடுகளுக்கான எஸ்டபிள்யூ மற்றும் எஃப்டிக்களுக்கான வரிவிதிப்புகளின் ஒப்பீடு

ஃபிக்ஸட் டெபாஸிட்கள், முதியோர் சேமிப்புத் திட்டம் அல்லது போஸ்ட் ஆஃபீஸ் எம்ஐபிக்கள் போன்ற முதலீட்டுத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் போது போஸ்ட்-டாக்ஸ் ரிட்டர்ன்களை கணக்கில் கொள்ளாமல் இருப்பது பிசகாக முடியக்கூடும். இவைகளுக்கான வட்டித்தொகை வரிவிதிப்பிற்குட்பட்டது. எனவே இன்டெக்ஸேஷனனுக்குப் பிறகு, நீண்ட-கால கேபிடல் லாபம் சுமார் 20% என்ற விகிதத்தில் சார்ஜ் செய்யப்படுவதால் கணிசமான அளவில் வரிக் குறைப்பு இருப்பதான டெப்ட் மியூச்சுவல் ஃபண்டுகளின் எஸ்டபிள்யூபி (சிஸ்டமேட்டிக் வித்டிராயல் பிளான்) என்பதே சரியான தேர்வாக இருக்க முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+