ஸ்னாக்ஸ் விற்பனையில் ரூ.2,700 கோடி வருமானம்.. தூள்கிளப்பும் பிரதாப் பிரதர்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய பிரதேசம், இந்தோர்-ஐ சேர்ந்த அமித் குமாத் நடத்தி வந்த துணி வியாபாரம் 2001-02ஆம் ஆண்டுகளில் திவாலாகி போனது. ஆனாலும் விடமுயற்சியுடன் பல தரப்பட்ட பணிகளை செய்து மீண்டு வந்த அமித் தின்பண்ட வியாபாரத்தை பெரிய அளவில் செய்ய துவங்கினார்.

இன்று 2,700 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வர்த்தக சாம்ராஜியத்தை கட்டியாண்டு வருகிறார். இத்தகைய பெறும் வளர்ச்சியை திவாலான நிலையில் இருந்து வெறும் 16 ஆண்டுகளில் நடத்தியுள்ளார் அமித்.

இத்தகை சாதனை படைத்த பிரதாப் பிரதர்ஸ் அவரிகளின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் உழைப்பு மிக்க கதையை பார்க்கலாம் வாங்க.

அமித் குமாத்

அமித் குமாத்

தற்போது 48 வயதாகியிருக்கும் அமித் குமாத் 1992 ஆம் வருடம் அமெரிக்காவின் லூசியானா மாகாண பல்கலைக்கழகத்தில் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்று இந்தியாவில் ஒரு மாற்றத்தை உண்டாக்க வேண்டுமென்கிற தீர்மானத்தோடு நாடு திரும்பினார்.

குடும்பத் தொழில்

குடும்பத் தொழில்

இந்தோருக்கு தன் சொந்த ஊருக்குத் திரும்பிய போது அங்கிருந்த ஒழுங்கற்ற பொருளாதாரச் சூழல்களால் அவரால் ஒரு வேலையைக் கண்டறிய முடியவில்லை. அதன் பிறகு அவர் இந்தோரின் பரபரப்பான அங்காடித் தெருவில் அவருடைய தந்தையின் மொத்த விற்பனை துணிக்கடையில் அப்பாவுக்கு உதவியாக டன் கணக்கில் கையிருப்பில் இருந்த நைலான், பருத்தி மற்றும் லினென் வகைத் துணிகளை விற்பனை செய்து வந்தார்.

விலை மீது அதிகப்படியான கவனம் கொண்டிருக்கும் இந்திய வாடிக்கையாளர்களிடம் எப்படி விற்பனை செய்வது என்பதைக் கற்றுக் கொடுத்த அந்தக் காலகட்டம் என் வாழ்க்கையின் சிறந்த இரண்டு வருடங்களாகும் என்கின்ற அமித் குமாத், தற்போது ரூ. 900 கோடி மதிப்புள்ள யெல்லோவ் டைமண்ட் பிராண்டை சொந்தமாகக் கொண்ட வற்றல், தின்பண்டங்கள் மற்றும் சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் பிரதாப் ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாவார்.

 

சல்மான் கான்

சல்மான் கான்

இந்த நிறுவனம் சென்ற ஆண்டுச் செப்டம்பர் மாதம் பிஎஸ்ஈ இல் பட்டியலிடப்பட்டு இந்திய பங்கு பரிமாற்றத்தில் ரூ. 2700 கோடி மதிப்பில் உயர்த்துள்ளது. லும் யெல்லோவ் டைமண்ட் பிராண்டுக்குத் தற்போது சல்மான்கான் பிராண்ட் தூதராக இருக்கிறார்.

ஜவுளி வியாபாரம் என்ன ஆனது?

ஜவுளி வியாபாரம் என்ன ஆனது?

நன்றாக நடந்த துணி வியாபாரம் குமாத்தை பல்வேறு தொழிற் பகுதிகளில் ஈடுபட்டு விரிவாக்கம் செய்ய வழிவகுத்தது. அவர் சுமார் 1996 - 1999 ஆம் ஆண்டு வாக்கில் ஒரு சாப் நிறுவனத்தையும், இரசாயன சாய வியாபாரத்தையும் மற்றும் இரசாயன வியாபாரங்களைக் கையாளும் ஒரு இணையத்தளத்தையும் கூடத் தொடங்கினார்.

அதன் பிறகு அவருடைய குடும்பம் கழுத்தளவு ஆழத்திற்குக் கடனில் மூழ்கியது.

 

18 கோடி கடன்

18 கோடி கடன்

தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் அனைத்துத் தொழில்களும் சீட்டுக்கட்டுக் கோபுரம் போலச் சரிந்தது. இது குமாத்தை சுமார் ரூ. 18 கோடி வரை கழுத்தாழத்திற்குக் கடனில் மூழ்கினார்.

பஸ்ஸில் போகலாமா அல்லது நடந்தே போகலாமா என்று ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டியிருந்த நாட்கள் அவை. காலையில் எழுந்ததும் எங்கள் அலுவலகங்கள் அனைத்தும் மூடியிருப்பதால் நாள் முழுவதும் என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்துள்ளார் குமாத்.

 

ஸ்னாக்ஸ் வியாபாரம்

ஸ்னாக்ஸ் வியாபாரம்

அப்போது தான் அமித் அவர்களுடைய குடும்ப நண்பரும் அவருடைய மூத்த சகோதரர் அபூர்வா குமாத்தின் வகுப்புத் தோழருமான ஒருவரை இந்தோருக்கு வெளியே ஸ்னாக்ஸ் வியாபாரம் செய்வதற்கு ரூ. 15 இலட்சம் முதலீடு செய்யும்படி அணுகினார்.

மற்றொரு குடும்ப நண்பரான ரியல் எஸ்டேட் தொழில் செய்து கொண்டிருந்த அரவிந்த் மேஹதா இந்த ஸ்னாக்ஸ் வியாபாரத்தில் பங்குதாரர் ஆவதற்குச் சம்மதித்தார். குமாத் லக்னோவில் சீஸ் உருண்டைகளைத் தயாரித்து அதை இந்தோர் மற்றும் நகரின் இதர பகுதிகளில் விற்பனை செய்யத் தொடங்கினார்.

 

 பெப்ஸிகோ உடன் போட்டி

பெப்ஸிகோ உடன் போட்டி

இந்த ஸ்னாக்ஸ் வியாபாரம் வெற்றிப் பெற்றது. இந்தோரில் இந்த மூப்பிரிவு வற்றல் செய்யும் தொகுதி தினமும் ஆயிரக்கணக்கான உருளைக்கிழங்கு வற்றல்களைத் தயாரிக்கத் தொடங்கிச் சந்தையில் ஃபிரிட்டோ லேஸ் போன்ற குறிப்பிட்ட சில பாக்கெட் தின்பண்டங்கள் விற்கும் நடப்பு போட்டியாளர்களுக்குக் கடும் போட்டியை கொடுத்தது. பெப்ஸி கோ இந்தியா நிறுவனத்தினரால் இந்திய தட்டுக்களுக்காகத் தயாரிக்கப்பட்ட புகழ்பெற்ற சிற்றுண்டியான குர்குரேவிற்குப் போட்டியாக 2006 - 2007 ஆம் ஆண்டு வாக்கில் சுல்புலே என்கிற தின்பண்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

வெளிநாட்டு முதலீடுகள்

வெளிநாட்டு முதலீடுகள்

யெல்லோவ் டைமண்ட் நிறுவனத்தின் வெற்றியைப் பார்த்து உலகளவில் புகழ்பெற்ற வியாபார நிதி நிறுவனம் முதலீடுகளுக்காக 2009 ஆம் ஆண்டு அவர்களை அணுகியது. இருந்தாலும், குமாத் சகோதரர்கள் இந்த 30 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யும் நிறுவனத்திற்குச் சரி என்று சொல்வதற்கு முன் கிட்டத்தட்ட 18 மாதங்கள் காத்திருந்தார்கள்.
இந்தப் பணத்தைக் கொண்டு அவர்கள் ஒரு வற்றல் தயாரிப்பு தொகுதி, ஒரு உருளைக்கிழங்கு வளையங்கள் தயாரிக்கும் தொழிற்கூடம் மற்றும் ஒரு தின்பண்டங்கள் தயாரிக்கும் தொகுதியை நிறுவினர்.

லாபம் அளிக்கும் ஸ்னாக்ஸ் வகைகள்

லாபம் அளிக்கும் ஸ்னாக்ஸ் வகைகள்

தற்போது வியாபாரத்தில் போட்டி வளையங்கள் 42 சதவிகிதமும், வற்றல் 26 சதவிகிதமும் லாபத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

ஸ்னாக்ஸ் பாக்கெட்டில் பொம்மை

ஸ்னாக்ஸ் பாக்கெட்டில் பொம்மை

இந்த நிறுவனம் ஒரு நாளுக்கு 40 இலட்சம் உருளை வளைய திண்பண்ட பொட்டலங்களை ஒவ்வொரு பொட்டலத்திலும் ரூ. 0.50 பைசா மதிப்புள்ள ஒரு சிறிய பொம்மையை உட்செருகி தயாரித்து வருகிறது.

ஒரு ஒருங்கிணைப்பு இயந்திரம் ஒவ்வொரு பொட்டலத்திலும் ஒரு பொம்மையைச் செருகுகிறது. "ஒரு பாக்கெட் வெறும் ரூ. 5 விலைக்கு நுகர்வோருக்கு கிடைப்பதால் இந்த வளையங்களுக்குக் குழந்தைகள் தான் மிகப் பெரிய வாடிக்கையாளர்கள்", என்கிறார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுமித் ஷர்மா.

 

உனவு நேரம்

உனவு நேரம்

நிறுவனத்தில் பணிப்புரியும் அனைத்து நிர்வாகிகளும் மதிய உணவை ஒன்றாக அமர்ந்து உண்ணுகின்றனர். உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் மூன்று நிறுவனர்களான அமித் மற்றும் அபூர்வா குமாத் மற்றும் அவரின் குடும்ப நண்பரான அரவிந்த் மேத்தா ஆகியோருக்குத் தட்டுகள் வைக்கப்பட்டுச் சூடாக உணவு பரிமாறப்படுகிறது.

21 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்தாலும், உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள் தினமும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மற்ற பன்னாட்டு நிறுவனங்களில் உணவு விடுதியிலோ அல்லது நிர்வாகத்தின் அறைகளிலோ தான் சாப்பிடுவர்.

இந்த முறையில் நிறுவனத்தின் நிர்வாகிகள் ஒற்றுமையாகச் செயல்படுகின்றனர்.

 

பெயர்

பெயர்

"முன்னர் நிறுவனத்தின் பெயர் டைமண்டு என முன்மொழியப்பட்டது. இருப்பினும், முத்திரை பதிவு செய்ய வேண்டியிருந்ததால் 'யெல்லோவ்' என முன்பெயர் சேர்க்கப்பட்டது." மதிய உணவு நேரத்தில் அமித் குமாத் தந்த தகவல் இது.

"அர்விந்த் அண்ணா எண் கணிதத்தை நம்புகிறார். சரியாக 13 இலக்கங்களைக் கொண்டிருப்பதால் சிறந்த இணைப்பாக அமைந்தது", அர்விந்த் மேத்தா வீட்டில் செய்த லட்டுகளைச் சுவைத்தபடியே சொல்கிறார்.

 

ஊழியர்கள் எண்ணிக்கை

ஊழியர்கள் எண்ணிக்கை

மூன்று நபர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் இப்பொழுது 750 நபர்களை நேரடியாகவும், 3,000 நபர்கள் ஒப்பந்த முறையில் மறைமுகமாகவும் பயன்படுத்துகிறது. நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் அதிக வேலை வாய்ப்பினை பிரதாப் ஸ்னாக்ஸ் அளித்துள்ளது.

புதிய தயாரிப்பு

புதிய தயாரிப்பு

கோதுமை மற்றும் மக்காச்சோளம் பிசைந்த மாவு பிஸ்கட்டுகளாக இயந்திரத்தால் மாற்றப்படுகிறது. பிஸ்கட்டுகள் சுடப்பட்டு, அவற்றில் ஜாம் 68 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில் ஊற்றப்படுகின்றன. பின்னர்ப் பொருள் கடத்தும் இயந்திரங்களில் சில தொலைவு பயணம் செய்கின்றன. திருப்புவதற்கு முன் பிஸ்கட்டுகள் மீண்டும் சிறிது தூரம் பயணம் செய்து குளிர்வைக்கப்படுகிறது.

சூடான சாக்லேட் குழம்பு பிஸ்கேட்டின் மேல் ஒட்டப்படுகிறது. குளிர்வதற்கு முன் பிஸ்கட் இன்னும் நகர்ந்து 5 ரூபாய்கள் கொண்ட சிறிய பொட்டலமாக மாற்றப்படுகிறது.

 

சவால்

சவால்

இருப்பினும் ஒரு சவால் உள்ளது. குளிர்விக்கப்பட்டாலும் சூடான சாக்லேட் உடனடியாகக் கெட்டியாவதில்லை. அதனால் பிளாஸ்டிக் அட்டைகளில் ஒட்டிக்கொள்கிறது.

அடுத்தச் சில வாரங்களில் சந்தையில் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதால் இத்தாலியில் இருந்து உணவு தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உதவுகின்றனர்.

 

 சோதனை முயற்சி

சோதனை முயற்சி

இயந்திரம் சோதனை அளவில் உள்ளது. இதனால் தினசரி செய்யப்படும் ஆயிரக்கணக்கான பிஸ்கட்டுகள் சந்தைகளில் விற்பனை செய்யப்படவில்லை என்பது பொருளாகும்.

"சோதனை தயாரிப்பு நிலையிலேயே உள்ளதால், தினமும் சுமார் 40 கிலோ சாக்லேட் பிஸ்கட் இந்தூர் முழுவதும் உள்ள அனாதை இல்லங்களில் விநியோகிக்கப்படுகிறது.

 

வெளிநாட்டு வர்த்தகம்

வெளிநாட்டு வர்த்தகம்

நிறுவனத்தின் உடனடி திட்டங்கள் என்பது பங்களாதேஷில் ஒரு புதிய ஆலை விரிவாக்கம், சாக்லேட் கேக்-பிஸ்கட்டை அறிமுகப்படுத்துவது மற்றும் சமீபத்திய பொது வாய்ப்பின் மூலம் இந்தியா திறன்களை விரிவுபடுத்துவது.

யெல்லோவ் டயமண்ட் கனடா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்குப் பொருட்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது.

 

ஐபிஓ

ஐபிஓ

சமீபத்திய ஐபிஓ மொத்த அளவு ரூ 482 கோடி. இவற்றில் நிறுவனமே 200 கோடி ரூபாயை திரட்டியது. மேலும் மீதமுள்ள ரூ 282 கோடியை பிரதான பங்குதாரர்களான செகோயா கேப்பிடல் மற்றும் முன்னேற்ற குடும்பங்களின் வெளியேற்றம் வாயிலாகக் கிடைத்தது. முன்னதாக ஐபிஓ வாயிலாக நிறுவனம் 50 கோடி ரூபாய்த் திரட்டியது.

இன்றைய நிலவரப்படி பங்கு சந்தையில் ஒரு பங்கின் விலை 1,168.95 ரூபாயாக உள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Success Story of Lord of the rings, Amit Kumat's Rs 2,700 Cr Prataap Snacks

Success Story of Lord of the rings, Amit Kumat's Rs 2,700 Cr Prataap Snacks
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X