தடதடக்கும் ராயல் என்பீல்டு.. அற்புதம் செய்த சித்தார்த்தா லால்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவின் பைக், இந்தியர்களின் இரண்டு சக்கர வாகனம் என்ற பெயருக்கு சொந்தமான நிறுவனம் எதுவென்றால் அனைவரும் கூறுவது ராயல் என்பீல்டாகத் தான் இருக்கும். பிரட்டன் நிறுவனமான என்பீல்டு அங்கு பெரிய அளவில் வெற்றி அடைவில்லை, ஆனால் இந்திய மக்கள் மனதில் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு எப்போதும் தனி இடம் உண்டு.

 

தற்போது இந்தியாவில் முதன் முறையாக 650 சிசி இன்ஜின் உடன் சக்திவாய்ந்த இரண்டு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்ய இளைஞர்கள் மனதில் ஆசையை உண்டாகியுள்ளது.

இந்திய தயாரிப்பான ராயல் என்ஃபீல்ட் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விற்பனையில் சாதனைகளை எளிதாக முறியடித்த மிகப்பெரிய இந்திய மோட்டார் சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றாகும். ஆனால் 17 ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை இப்படி இல்லை.

இந்த இமாலய வெற்றிக்கு காரணமானவர் 30 வயதில் இந்நிறுவனத்தின் சேர்ந்த ஒரு இளைஞன்.

இந்தியாவில் உற்பத்தி

இந்தியாவில் உற்பத்தி

1995-ம் ஆண்டு என்பீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம் மெட்ராஸ் மோட்டார்ஸ் உடன் இணைந்து இந்தியாவின் இன்ஃபீல்டு 350 சிசி திரன் கொண்ட இரண்டு சக்கர வாகனத்தினை அறிமுகம் செய்தது.

ராணுவம்

ராணுவம்

1949-ம் ஆண்டு இந்திய ராணுவம் முதன் முதலாக பாக் எல்லையில் ரோந்து பணிக்காக கரடு முரடான இரண்டு சக்கரம் வாகனம் ஒன்று வேண்டும் என்பதற்காகவே 100 ராயல் என்பீல்டு புல்லட் வாகனத்தினை வாங்கியது. அதன் பிறகே இந்தியா முழுவதும் இந்த வாகனம் புகழ் பெற்றது.

புல்லட் பெயர்க் காரணம்

புல்லட் பெயர்க் காரணம்

என்பீல்டு நிறுவனம் முதலில் சிறிய ரக துப்பாக்கிகளுக்கன புல்லட் குண்டுகளை தான் உருவாக்கி வந்தது. பின்னர் இந்த புல்லட் என்பது வாகனங்களிலும் சேர்ந்துகொண்டது.

ராயல் என்ஃபீல்டின் எழுச்சி
 

ராயல் என்ஃபீல்டின் எழுச்சி

2001 ஆம் வருடத்தில் நீங்கள் ஒரு ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிளை வாங்க ரூ. 55,000 ஐ செலவழித்திருந்தால், இப்போது உங்களிடம் ஒரு பழைய கரடுமுரடான பைக் தான் இருக்கும். ஆனால், அதே ரூ. 55,000 பணத்தை என்ஃபீல்ட் பைக்குகள் தயாரிக்கும் ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்தால் உங்கள் முதலீட்டின் மதிப்புத் தற்போது ரூ. 3.53 கோடியாக இருக்கும். 2000 வது ஆண்டு ஜனவரி 3 அன்று ரூ. 48.75 ஆக இருந்த இதன் பங்குகள் இந்த நவம்பரில் 64,146 முதல் 31,320 சதவிகிதத்தை எட்டி வானளவு உயர்ந்துள்ளது.

சித்தார்த்தா லாலின் வருகை

சித்தார்த்தா லாலின் வருகை

ஒரு முரட்டுத்தனமான பைக்கை வடிவமைத்தது அத்துடன் ஏராளமான மதிப்பில் பங்குதாரர்களை உருவாக்கியது என்ற இரட்டை பெருமைகள் ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சித்தார்த்தா லாலையே சேரும். இந்த அனைத்து புகழும் என்ஃபீல்ட் மீது லால் கொண்டிருக்கும் காதலை அடிப்படையாகக் கொண்டு அவர் எடுத்த மிகப் பெரிய முடிவினாலேயே வந்தது.

தலைமை நிர்வாக அதிகாரி

தலைமை நிர்வாக அதிகாரி

2004 ஆம் ஆண்டில் லாலுக்கு அப்போது வெறும் 30 வயதே இருந்தபோது அவர் ஈச்சர் குழுமத்தின் சிஓஓ பொறுப்பை சித்தார்த்தா லால் எடுத்துக் கொண்டார். இந்தக் குழுமம் டிராக்டர்கள், டிரக்குகள், மோட்டார் சைக்கிள்கள், உதிரி பாகங்கள், காலணிகள் மற்றும் ஆடைகள் எனச் சுமார் 15 தொழில்களில் பரவலாக விரிவாக்கம் செய்திருந்தது. ஆனால் இவற்றில் எதுவும் சந்தையில் முதன்மையானதாக இல்லை.

கடினமான முடிவை எடுத்தார்

கடினமான முடிவை எடுத்தார்

லால் அந்த 13 வியாபாரங்களில் முதலீட்டைக் குறைத்துக் கொண்டு இந்தக் குழுமத்திற்கு உண்மையான லாபத்துடன் சந்தையில் முதன்மை இடத்தைப் பெற்றுத் தரும் என்று அவர் நம்பிய இரண்டு தொழில்களான ராயல் என்ஃபீல்ட் மற்றும் டிரக்குகள் மீது முழுக் கவனத்தைச் செலுத்தி அனைத்து பணத்தையும் அதில் முதலீடு செய்தார். என் மனதில் இருந்த அடிப்படை கேள்வி இது தான்: 15 சிறிய வியாபாரங்களில் சாதாரண ஆட்டக்காரராக இருக்க வேண்டுமா அல்லது ஒன்று அல்லது இரண்டு தொழில்களில் சிறந்து விளங்க வேண்டுமா, நினைவுகூர்கிறார் லால்.

லாலின் செல்லமான தொழில்

லாலின் செல்லமான தொழில்

நான் பல கணக்கீடுகள் மற்றும் திட்டமிடல்களைச் செய்தேன். எங்களுடைய தேவையெல்லாம் மோட்டார் சைக்கிள் வியாபாரத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதாகவே இருந்தது (விற்பனை அடிப்படையில்).

லால் ராயல் என்ஃபீல்ட் மற்றும் டிரக் வியாபாரத்தில் முழுமையாக ஈடுபடுவதாக முடிவெடுத்தார். பத்தாண்டுகளுக்குப் பிறகு, ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனம் சுமார் ரூ. 8,738 கோடி வருவாயையும் மற்றும் நிகர லாபமாக ரூ. 702 கோடியையும் ஈட்டியது (நிதியாண்டு 2014). இதில் 80% லாபத்தை ராயல் என்ஃபீல்ட் கொடுத்தது.

நீண்ட ஏற்றம்

நீண்ட ஏற்றம்

2005 ஆம் ஆண்டில் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25,000 பைக்குகளை மட்டுமே விற்று வந்தது. "இது ஒரு அற்புதமான லாபகரமான தொழில் என்பதில் நான் தெளிவாக இருந்தேன்" என்று நினைவுகளில் பின்னோக்கி செல்கிறார் லால். ஆனால் நிறுவனத்திற்கு உற்பத்தி அளவுகள் தேவையாக இருந்தது. நிலையான விலைகள் கிட்டத்தட்ட 100,000 பைக்குகளுக்கு நிர்ணயிக்க வேண்டியிருந்தது.

என்பீல்டு மீது கவனம்

என்பீல்டு மீது கவனம்

டிரக்குகளைப் பின்னர்க் கவனித்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டு அவர் முதலில் என்ஃபீல்ட் மீது கவனத்தைச் செலுத்தினார். லால் நூற்றுக்கணக்கான மைல் தூரங்கள் தானே பயணித்து என்ஃபீல்ட் பைக்குகளை வடிவமைத்து மேம்படுத்தினார். மேலும் அவர் தனது அணியில் மோடடார் சைக்கிளில் பயணிக்கும் விளையாட்டான மோட்டார் சைக்கிளிங்கை துவங்கினார். "லால் எப்பொழுதும் முன்னிலையிலிருந்து வழிநடத்துவார்" என்று கூறுகிறார் ரவிச்சந்திரன்.

விற்பனை அதிகரித்தது

விற்பனை அதிகரித்தது

லாலின் தலைமையில் தரம் மேம்படுத்தப்பட்டதால் விற்பனையும் அதிகரித்தது. 2010 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் மூன்று தளங்களில் 50,000 பைக்குகளை விற்றது. பொருளாதார அளவுகளை உயர்த்துவதற்காக அனைத்து என்ஃபீல்ட் பைக்குகளையும் ஒரே தளத்தில் கட்டமைக்க லால் முடிவு செய்திருந்த நேரம் அது. இந்த ஒற்றைத் தளத்தில் தொடங்கப்பட்ட ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் வாடிக்கையாளர்களுக்கு ஆடம்பர பைக்குகள் மீதிருந்த ஆவலை கவர்ந்தது. பைக்குகளின் விற்பனை ஐந்து ஆண்டுகளில் நாட்காட்டி ஆண்டு 2010 இல் இருந்த 50,000 யூனிட்டிலிருந்து நாட்காட்டி ஆண்டு 2014 இல் 589,293 யூனிட்டுகளாகி ஆறு மடங்குகள் அதிகரித்தது.

உலகளாவிய பிராண்டுகளிடமிருந்து உத்வேகம்

உலகளாவிய பிராண்டுகளிடமிருந்து உத்வேகம்

லால் உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து ஊக்கத்தைப் பெற்றார். அதிகமாக ஆய்வு செய்யப்பட்ட இரண்டு உதாரணங்கள் மினி கூப்பர் மற்றும் போர்ஸ்சி ஆகும். இரண்டுமே டிஎன்ஏ வின் மைய பாகத்தின் அடர்த்தியைக் குறைப்பதில்லை என்பதில் மிகுந்த கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருந்த நிறுவனங்களாகும்.

1990 களில் லால் லண்டன் நகரில் மாணவராக இருந்த போது நடுத்தர மற்றும் பெரிய அளவு கார்களோடு ஒப்பிடும் போது சிறிய ரகக் கார்கள் மிக மோசமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. பிறகு மினி கார்கள் வந்தது, இது முன்னுதாரணக் கருத்துக்களை மாற்றிச் சிறிய கார்களை ஓட்டுவதற்கு மகிழ்ச்சிகரமானதான மாற்றியது. அதைத் தான் நான் ராயல் என்ஃபீல்டிடம் எதிர்பார்த்தேன், நடுத்தர எடையுள்ள மோட்டார் சைக்கிள்களை ஓட்டுவதற்கு வசதியாக மாற்ற வேண்டும், அதே சமயம் அதன் டிஎன்ஏ வை யும் தக்க வைக்க வேண்டும், என்கிறார் அவர்.

வருங்கால இலக்குகள்

வருங்கால இலக்குகள்

ராயல் என்ஃபீல்டின் ஏற்றுமதி கடந்த வருடம் அதே மாதத்தில் இருந்த 748 யூனிட்டுகளிலிருந்து தாவி சுமார் 97.6 சதவிகிதமாகி 1,478 ஆக அதிகரித்துள்ளது. இப்போது முதல் அடுத்தப் பத்தாண்டுகளில் ராயல் என்ஃபீல்ட் சர்வதேச சந்கைளில் மிகப் பெரிய ஆட்டக்காரராக இருக்கும் என்று லால் நம்புகிறார். இந்த இலக்குகளை மனதில் கொண்டு தான் சில திட்டங்களை வகுத்து ஆட்களை வேலையில் அமர்த்தியது.

 சரியான இடங்களில் சரியான நபர்கள்

சரியான இடங்களில் சரியான நபர்கள்

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முன்னாள் மேலாளரான ராட் காப்ஸ் என்ஃபீல்ட் நிறுவனத்தின் வட அமெரிக்கப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். (அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டது). தொழிற்துறை வடிவமைப்புக் குழுவின் தலைவரான பியர்ரே டர்ப்லான்ச் டுகாட்டியிலிருந்து நியமிக்கப்பட்டார். இன்ஜின் பிரிவு தலைவரான ஜேம்ஸ் யங் டிரம்பில் பணிபுரிந்தார் மேலும் இலண்டனில் பணியிலமர்த்தப்பட்டார். தயாரிப்பு திட்டமிடல் மற்றும் புதிய திட்டங்கள் பிரிவு (புதிய செயல்திட்டங்கள்) தலைவர் சைமன் வார்பர்டனும் டிரம்பிலிருந்து வந்தவர்.

புதிய திட்டங்களின் (புதிய செயல்திட்டங்கள்) மார்க் வெல்ஸ் மற்றும் ஐயான் ரைட் ஆகியோர் வடிவமைப்பு நிறுவனமான ஸெனோபியா இல் வேலை பார்த்த போது என்ஃபீல்டின் கிளாசிக் மற்றும் கான்டினன்டல் ஜிடி மாதிரிகளில் வேலை பார்த்தனர். அவர்கள் இருவரும் இப்போது ராயல் என்ஃபீல்டின் இலண்டன் தொழில்நுட்ப மையத்தில் இணைந்திருக்கின்றனர். மேலும் லால் சந்தையில் வெற்றியடைய நுட்பமான பொறியியலைப் போலவே நல்ல சந்தைப்படுத்தலும் முக்கியமானது என்பதை உணர்ந்திருக்கிறார். அதனால் தான் சமீபத்தில் ருத்ரதேஜை பணியில் அமர்த்தியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How Siddhartha Lal turned Royal Enfield into a global brand

How Siddhartha Lal turned Royal Enfield into a global brand
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X